உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 16:41, 42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அவர்களோடு ஏமானையும் எதித்தூனையும்+ பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண்களையும் யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக நியமித்தார்கள்;+ “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி கடவுளை அவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.+ 42 ஏமானும்+ எதித்தூனும் எக்காளங்களை ஊதி, ஜால்ராக்களைத் தட்டி, மற்ற இசைக் கருவிகளை இசைத்து உண்மைக் கடவுளைப் புகழ்ந்தார்கள். எதித்தூனின்+ மகன்கள் வாயிற்காவலர்களாகச் சேவை செய்தார்கள்.

  • 2 நாளாகமம் 5:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பரிசுத்த இடத்திலிருந்து குருமார்கள் வெளியே வந்தபோது (அங்கே வந்திருந்த குருமார்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாரும் தங்களைப் புனிதப்படுத்தியிருந்தார்கள்),+ 12 ஆசாப்,+ ஏமான்,+ எதித்தூன்,+ இவர்களுடைய மகன்கள், சகோதரர்கள் ஆகியோரின் குழுவைச் சேர்ந்த லேவிய பாடகர்கள்+ எல்லாரும் உயர்தர உடையை அணிந்துகொண்டு, ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் பிடித்துக்கொண்டு பலிபீடத்துக்குக் கிழக்கே நின்றார்கள். இவர்களுடன் 120 குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள்.+

  • 2 நாளாகமம் 35:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தாவீதும்+ ஆசாப்பும்+ ஏமானும் ராஜாவின் தரிசனக்காரரான எதித்தூனும் கொடுத்த கட்டளைப்படி,+ ஆசாப்பின்+ வம்சத்தில் வந்த பாடகர்கள் தங்களுடைய இடத்தில் நின்றார்கள். வாயிற்காவலர்கள் வெவ்வேறு வாசல்களில் நின்றார்கள்.+ தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அவர்களுடைய சகோதரர்களான லேவியர்கள் செய்திருந்தார்கள். அதனால், அவர்கள் தங்களுடைய இடத்தைவிட்டுப் போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்