-
எசேக்கியேல் 17:12-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 “எனக்கு அடங்காத இந்த ஜனங்களிடம், ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா?’ என்று கேள். பின்பு அவர்களிடம், ‘பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து அதன் ராஜாவையும் அதிகாரிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 13 அதன்பின், ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவனோடு+ ஒப்பந்தம் செய்து, அவனிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டான்.+ அங்கிருந்த முக்கியமான ஆட்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 14 ஏனென்றால், அந்த ராஜ்யம் மறுபடியும் உயர்ந்துவிடாதபடி அதை அடக்கிவிட வேண்டும் என்றும், தன்னுடைய ஒப்பந்தத்தை மீறினால் அதை அழித்துவிட வேண்டும் என்றும் நினைத்தான்.+ 15 ஆனால் ராஜா* கடைசியில் அவனுடைய* ஒப்பந்தத்தை மீறினான்.+ குதிரைகளையும்+ பெரிய படையையும் தனக்குக் கொடுத்து உதவும்படி கேட்டு எகிப்துக்கு ஆட்களை அனுப்பினான்.+ அவனுடைய திட்டம் கைகூடுமா? இப்படியெல்லாம் செய்கிறவன் தண்டனையிலிருந்து தப்புவானா? ஒப்பந்தத்தை மீறுகிறவன் உயிர்தப்புவானா?’+ என்று கேள்.
-