உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 ராஜாக்கள் 24:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+

  • ஏசாயா 39:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உனக்குப் பிறக்கப்போகிற மகன்கள் சிலரும் பிடித்துக்கொண்டு போகப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அதிகாரிகளாக இருப்பார்கள்’”+ என்று சொன்னார்.

  • எரேமியா 22:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 யெகோவா சொல்வது இதுதான்: ‘யோயாக்கீமின்+ மகனும் யூதாவின் ராஜாவுமான கோனியாவே,*+ நீ என் வலது கையில் ஒரு முத்திரை மோதிரமாக இருந்தாலும் நான் உன்னைக் கழற்றி எறிவேன்! இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.* 25 உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களின் கையில் உன்னைக் கொடுத்துவிடுவேன். நீ பயந்து நடுங்குகிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயர்களின் கையிலும் உன்னைக் கொடுத்துவிடுவேன்.+

  • எரேமியா 52:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஏவில்-மெரொதாக் என்பவன் பாபிலோனின் ராஜாவான வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.+ அது, யோயாக்கீன் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன 37-ஆம் வருஷம்,+ 12-ஆம் மாதம், 25-ஆம் நாள். 32 யோயாக்கீனிடம் ஏவில்-மெரொதாக் அன்பாகப் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற ராஜாக்களைவிட அவருக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்