21 ஆறு* தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசம் வரையிலும் எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா தேசங்களையும் சாலொமோன் ஆட்சி செய்தார்.+ சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அந்தத் தேசங்களைச் சேர்ந்த மக்கள் அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள்.+
5 அவருடைய ஆட்சியை யெகோவா வலுப்படுத்தினார்.+ யூதா மக்கள் எல்லாரும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுத்துவந்தார்கள். அவருக்குச் செல்வமும் புகழும் ஏராளமாகக் கிடைத்தன.+