-
நியாயாதிபதிகள் 10:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அதன்பின், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ பாகால்களின் சிலைகளையும்+ அஸ்தரோத்தின் சிலைகளையும் அராமின்* தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும்+ அம்மோனியர்களின் தெய்வங்களையும்+ பெலிஸ்தியர்களின் தெய்வங்களையும்+ கும்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் யெகோவாவை வணங்காமல் அவரைவிட்டு விலகினார்கள். 7 அதனால், யெகோவாவின் கோபம் இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிந்தது. பெலிஸ்தியர்களின் கையிலும் அம்மோனியர்களின் கையிலும் அவர்களை அவர் விட்டுவிட்டார்.*+ 8 அந்த வருஷம் தொடங்கி 18 வருஷங்களுக்கு அவர்கள் இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தி, ரொம்பவே அடக்கி ஒடுக்கினார்கள். யோர்தானுக்குக் கிழக்குப் பக்கத்தில், அதாவது எமோரியர்களின் தேசமான கீலேயாத்தில், வாழ்ந்துவந்த எல்லா இஸ்ரவேலர்களையும் அடக்கி ஒடுக்கினார்கள்.
-