உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • உபாகமம் 28:48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 48 யெகோவா உங்களுக்கு எதிராக விரோதிகளை அனுப்புவார். உங்களிடம் ஒன்றுமே இல்லாமல், பசியோடும்+ தாகத்தோடும் கிழிந்த துணிமணிகளோடும் அவர்களுக்கு வேலை செய்வீர்கள்.+ அவர் உங்களை அழிக்கும்வரை உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தடியை* சுமத்துவார்.

  • உபாகமம் 31:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது, அவர்கள்மேல் என் கோபம் பற்றியெரியும்.+ நான் அவர்களைக் கைவிட்டுவிடுவேன்.+ அவர்கள் அழிந்துபோகும்வரை என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+ அவர்கள் பிரச்சினைகளிலும் கஷ்டங்களிலும் சிக்கித் தவிக்கும்போது,+ ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால்தானே இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்?’ என்று சொல்வார்கள்.+

  • நியாயாதிபதிகள் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+

  • நியாயாதிபதிகள் 4:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால் யெகோவா, கானானின் ராஜாவாகிய யாபீனின் கையில் இஸ்ரவேலர்களைக் கொடுத்துவிட்டார்.*+ அவன் ஆத்சோரில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய படைத் தளபதியின் பெயர் சிசெரா, இவன் அரோசேத்-கோயிமில்+ வாழ்ந்துவந்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்