உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 135:15-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 மற்ற தேசத்தார் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்,

      மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+

      16 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+

      கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.

      17 காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.

      அவற்றின் மூக்கில் சுவாசமே இல்லை.+

      18 அவற்றைச் செய்கிற ஆட்களும் அவற்றை நம்புகிற எல்லாரும்

      அவற்றைப் போலத்தான் ஆவார்கள்.+

  • ஏசாயா 40:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கைத்தொழிலாளி ஒரு சிலையைச் செய்கிறான்.

      ஆசாரி அதற்குத் தங்கத் தகடு அடிக்கிறான்.+

      வெள்ளிச் சங்கிலிகளைச் செய்கிறான்.

  • ஏசாயா 46:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 சிலர் ஆசாரிக்குக் கூலி கொடுத்து சிலை செய்யச் சொல்கிறார்கள்.

      அதற்காக, பையிலிருந்து தங்கத்தைக் கொட்டுகிறார்கள்.

      வெள்ளியைத் தராசில் எடைபோட்டுக் கொடுக்கிறார்கள்.

      அதை வைத்து அவன் ஒரு சிலையைச் செய்கிறான்.+

      அவர்கள் அதன் முன்னால் விழுந்து வணங்குகிறார்கள்.+

  • எரேமியா 10:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அந்த ஜனங்களுடைய சம்பிரதாயங்கள் வீணானவை.

      கைத்தொழிலாளிகள் காட்டிலுள்ள மரத்தை வெட்டுகிறார்கள்.

      பின்பு, அதைச் செதுக்கி சிலை செய்கிறார்கள்.+

       4 வெள்ளியினாலும் தங்கத்தினாலும் அந்தச் சிலையை அலங்கரிக்கிறார்கள்.+

      அது விழாமல் இருப்பதற்காக ஆணிகள் வைத்து சுத்தியால் அடிக்கிறார்கள்.+

  • எரேமியா 10:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவர்கள் எல்லாருமே புத்தியில்லாதவர்கள், முட்டாள்கள்.+

      மரச் சிலைகளைப் பார்த்து அறிவுரை கேட்பது சுத்த வீண்.+

       9 தர்ஷீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்+ ஊப்பாசிலிருந்து தங்கமும் வர வைக்கப்படுகின்றன.

      அவற்றால் கைத்தொழிலாளிகளும் ஆசாரிகளும் அந்தச் சிலைகளுக்குத் தகடு அடிக்கிறார்கள்.

      ஜனங்கள் அவற்றுக்கு நீல நிறத் துணிகளையும் ஊதா நிறத் துணிகளையும் போட்டுவிடுகிறார்கள்.

      அவை எல்லாமே திறமைசாலிகளின் கைவேலைப்பாடுகள்.

  • அப்போஸ்தலர் 19:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ஆனால், கைகளால் செய்யப்பட்டதெல்லாம் தெய்வங்கள் கிடையாது என்று இந்த பவுல் சொல்லிக்கொண்டு திரிகிறான்.+ எபேசுவில்+ மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஆசிய மாகாணம் முழுவதும் இப்படிச் சொல்லி ஏராளமான ஆட்களை நம்ப வைத்து, அவர்களுடைய மனதைத் திசைதிருப்பியிருக்கிறான்; இதை நீங்களே பார்த்தும் கேட்டும் இருக்கிறீர்கள்.

  • 1 கொரிந்தியர் 10:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அப்படியானால், சிலைக்குப் பலியிடப்பட்டதோ சிலையோ முக்கியம் என்றா சொல்கிறேன்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்