-
ஏசாயா 44:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 மரத்தில் ஒரு பாதியை எடுத்து அடுப்பு எரிக்கிறான்.
அதில் இறைச்சியைச் சுட்டு திருப்தியாகச் சாப்பிடுகிறான்.
அந்த நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து,
“ஆஹா! நெருப்பில் குளிர்காய்வது எவ்வளவு இதமாக இருக்கிறது!” என்று சொல்கிறான்.
17 மரத்தில் இன்னொரு பாதியை எடுத்து ஒரு சிலையைச் செதுக்குகிறான்.
அதன் முன்னால் விழுந்து வணங்குகிறான்.
அந்தச் சிலையைப் பார்த்து,
“நீதான் என் தெய்வம், என்னைக் காப்பாற்று” என்று வேண்டுகிறான்.+
-
-
தானியேல் 3:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் பைங்குழலும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்படும்போது, நீங்கள் எல்லாரும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தியிருக்கிற இந்தத் தங்கச் சிலையின் முன்பாக விழுந்து வணங்க வேண்டும்.
-