உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 சிலையைச் செய்வதற்காக ஒருவன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.+

      உளுத்துப்போகாத மரமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறான்.

      விழாமல் நிற்கிற ஒரு சிலையைச் செதுக்குவதற்காக

      திறமையான கைத்தொழிலாளியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான்.+

  • ஏசாயா 44:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 தேவதாரு மரங்களை வெட்டுகிற வேலை செய்கிறவன்,

      காட்டிலே ஒரு கருவாலி மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.

      அதை நன்றாக வளர விடுகிறான்.+

      அவன் ஒரு புன்னை மரத்தை நடுகிறான், மழை அதை வளர வைக்கிறது.

      15 பின்பு, அதை ஒருவன் விறகாகப் பயன்படுத்துகிறான்.

      அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து நெருப்பு மூட்டி குளிர்காய்கிறான்.

      இன்னும் கொஞ்சத்தை எடுத்து ரொட்டி சுடுகிறான்.

      பின்பு, அதே மரத்தால் ஒரு தெய்வத்தையும் செய்து கும்பிடுகிறான்.

      அதை வைத்து ஒரு சிலையைச் செதுக்கி அதன்முன் தலைவணங்குகிறான்.+

  • ஏசாயா 45:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 மற்ற தேசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களே,

      நீங்கள் ஒன்றுகூடுங்கள், திரண்டு வாருங்கள்.+

      செதுக்கப்பட்ட சிலைகளைச் சுமந்து செல்கிறவர்களுக்கும்,

      காப்பாற்ற முடியாத தெய்வங்களிடம் வேண்டுகிறவர்களுக்கும் அறிவே இல்லை.+

  • ஆபகூக் 2:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 சிலையைச் செதுக்குகிறவனுக்கு அதனால் என்ன பிரயோஜனம்?

      அவன் கையால்தானே அதைச் செதுக்கினான்?

      உலோகச் சிலையையும் பொய்யைப் போதிக்கிற சிலையையும்

      அவன் நம்பினாலும் அவற்றால் என்ன பிரயோஜனம்?

      அவை ஒன்றுக்கும் உதவாத ஊமைத் தெய்வங்கள்தானே?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்