உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 38:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் குவிந்திருக்கின்றன.+

      பாரமான சுமைபோல் என்னை அழுத்துகின்றன.

      என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

  • சங்கீதம் 103:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார்.+

      நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.+

  • சங்கீதம் 143:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 143 யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள்.+

      உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.

      உங்களுடைய உண்மைத்தன்மைக்கும் நீதிக்கும் ஏற்றபடி எனக்குப் பதில் கொடுங்கள்.

       2 அடியேனை விசாரணைக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.

      உயிரோடு இருக்கிற யாருமே உங்கள்முன் நீதிமானாக இருக்க முடியாதே.+

  • ஏசாயா 55:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,

      கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,

      நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+

      அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+

  • தானியேல் 9:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 என் கடவுளே, காதுகொடுத்துக் கேளுங்கள். உங்களுடைய கண்களைத் திறந்து எங்களுடைய பரிதாப நிலையையும், உங்கள் பெயர் தாங்கிய நகரத்தையும் பாருங்கள். எங்கள் செயல்கள் நீதியானவை என்பதால் அல்ல, நீங்கள் மகா இரக்கமானவர் என்பதால் உங்களிடம் கெஞ்சுகிறோம்.+

  • ரோமர் 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+

  • தீத்து 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 மறுவாழ்வு பெறுவதற்கு நம்மைத் தூய்மையாக்கியதன்* மூலமும்+ தன்னுடைய சக்தியால் புதுப்பித்ததன் மூலமும் நம்மை மீட்டார்;+ நம்முடைய நீதியான செயல்களால் அல்ல,+ தன்னுடைய இரக்கத்தால் நம்மை மீட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்