-
1 ராஜாக்கள் 21:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21 அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+
-
-
2 ராஜாக்கள் 10:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆகாபின் வீட்டாரைப் பற்றி யெகோவா சொன்ன எல்லாமே நிறைவேறும். யெகோவா சொன்ன ஒரு வார்த்தைகூட நிறைவேறாமல் போகாது.*+ தன்னுடைய ஊழியரான எலியா மூலம் சொன்னதைத்தான் யெகோவா இப்போது செய்திருக்கிறார்”+ என்று சொன்னார். 11 பின்பு, யெஸ்ரயேலில் மீதியிருந்த ஆகாபின் வம்சத்தார் எல்லாரையும் யெகூ கொன்றுபோட்டார். ஆகாபுக்கு நெருக்கமான பிரமுகர்கள், நண்பர்கள், அவனுடைய குருமார்கள்+ ஆகிய எல்லாரையும் கொன்றுபோட்டார். ஆகாபுடைய ஆட்கள் ஒருவரைக்கூட விட்டு வைக்கவில்லை.+
-