-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-
-
ஏசாயா 42:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 யாக்கோபைச் சூறையாட அனுமதித்தது யார்?
இஸ்ரவேலைக் கொள்ளையடிக்க அனுமதித்தது யார்?
யெகோவாதானே அனுமதித்தார்? அவர்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.
25 அதனால் அவருடைய கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் கொட்டினார்.
ஆக்ரோஷத்தில் பயங்கரமான போர்களை வர வைத்தார்.+
அவர்களிடம் இருந்த எல்லாமே பாழாய்ப் போனது, நெருப்பு எல்லாவற்றையும் பொசுக்கிப்போட்டது.
-