உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 17:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும், தரிசனக்காரர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ “பொல்லாத வழிகளைவிட்டு மனம் திருந்துங்கள்!+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களுடைய முன்னோர்கள் மூலம் நான் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும், என்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று சொல்லியிருந்தார். 14 ஆனால், அவர் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. தங்களுடைய கடவுளான யெகோவாமீது விசுவாசம் வைக்காத முன்னோர்களைப் போலவே இவர்களும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்.+

  • ஓசியா 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இஸ்ரவேலின் கர்வம் அவன் முகத்திரையைக் கிழித்தது.+

      ஆனாலும், தன் கடவுளான யெகோவாவிடம் அவன் திரும்பவில்லை.+

      அவரிடம் உதவி கேட்கவும் இல்லை.

  • ஆமோஸ் 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 எல்லா ஊர்களிலும் உங்களைப் பட்டினி போட்டேன்.

      எல்லா வீடுகளிலும் பஞ்சத்தைக் கொண்டுவந்தேன்.+

      ஆனாலும், நீங்கள் திருந்தி என்னிடம் வரவில்லை’+ என்கிறார் யெகோவா.

  • ஆமோஸ் 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 யெகோவாவாகிய என்னைத் தேடுங்கள், என்றென்றும் வாழுங்கள்.+

      இல்லாவிட்டால், யோசேப்பின் வம்சத்தார்மேல் நான் நெருப்பாக மூளுவேன்.

      நெருப்பை அணைக்க யாரும் இருக்க மாட்டார்கள், பெத்தேல் பொசுங்கிவிடும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்