உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 5:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யாழையும், நரம்பிசைக் கருவியையும்,

      கஞ்சிராவையும், புல்லாங்குழலையும் வாசித்து,

      திராட்சமது குடித்து விருந்து கொண்டாடுகிறார்கள்.

      ஆனால், யெகோவாவின் செயல்களை நினைத்துப் பார்ப்பதில்லை.

      அவருடைய கைகள் செய்கிறவற்றைக் கவனிப்பதில்லை.

  • ஏசாயா 56:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர்கள் ஒவ்வொருவரும், “வாருங்கள், நாம் திராட்சமது குடிப்போம்.

      போதை தலைக்கேறும்வரை குடிப்போம்.+

      இன்று போலவே நாளைய தினமும் இருக்கும்,

      சொல்லப்போனால் இன்னும் நன்றாகவே இருக்கும்!” என்கிறார்கள்.

  • ஆமோஸ் 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 “சீயோனில் தன்னம்பிக்கையோடு* திரிகிறவர்களே,

      சமாரியா மலையில் கவலையில்லாமல் வாழ்கிறவர்களே,+

      பிரபலமான தேசத்தில் உள்ள பெரும் புள்ளிகளே,

      உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் தேடி வருகிறார்கள். ஆனால், உங்களுக்குக் கேடுதான் வரும்!

  • ஆமோஸ் 6:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+

      செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+

  • லூக்கா 17:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நோவா பேழைக்குள்* நுழைந்த+ நாள்வரை மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது.+

  • யாக்கோபு 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இந்தப் பூமியில் நீங்கள் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறீர்கள், ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். வெட்டப்படும் நாளுக்காகக் கொழுக்க வைக்கப்பட்டிருக்கிற மிருகங்களைப் போல் உங்களுடைய இதயம் கொழுத்துப்போய் இருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்