29 அவர்களைப் புடமிடுவதற்கு என்னதான் முயற்சி செய்தாலும் புடமிடும் கருவிதான் எரிந்துபோகிறது,
நெருப்பிலிருந்து ஈயம்தான் வருகிறது.
அவர்களைப் புடமிடுவதே வீண்.+
கெட்டவர்களைப் பிரித்தெடுக்கவே முடிவதில்லை.+
30 தள்ளுபடியான வெள்ளி என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
ஏனென்றால், யெகோவா அவர்களைத் தள்ளிவிட்டார்.”+