உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ எகிப்து தேசத்தில் ஏராளமான அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வேன்.+

  • யாத்திராகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எகிப்துக்கு எதிராக என் பலத்தைக் காட்டி இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வரும்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.

  • யாத்திராகமம் 9:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நான் உன்னையும் உன் ஜனங்களையும் கொடிய கொள்ளைநோயால் எப்போதோ தாக்கியிருப்பேன். நீயும் இந்தப் பூமியிலிருந்தே ஒழிந்துபோயிருப்பாய். 16 ஆனால், என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.+

  • உபாகமம் 4:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 உங்கள் கடவுளாகிய யெகோவா எகிப்தில் உங்கள் கண் முன்னாலேயே தண்டனைத் தீர்ப்புகள் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும்+ செய்து, போராலும்+ கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் பயங்கரமான செயல்களாலும்+ உங்களை விடுதலை செய்தாரே. இதுபோல் வேறெந்தக் கடவுளாவது ஒரு ஜனத்தை இன்னொரு ஜனத்தின் நடுவிலிருந்து தனக்காகப் பிரித்தெடுத்தது உண்டா?

  • 2 சாமுவேல் 7:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்களைப் போல் இந்த உலகத்தில் வேறெந்த மக்கள் இருக்கிறார்கள்?*+ தேவனே, இஸ்ரவேலர்களை உங்களுடைய சொந்த மக்களாக ஆக்குவதற்கென்று நீங்களே போய் அவர்களை விடுவித்து வந்தீர்களே,+ அற்புதங்களையும் பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்து+ உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்தீர்களே.+ நீங்கள் எகிப்திலிருந்து விடுவித்த உங்கள் மக்களுக்காக, மற்ற தேசத்தாரை அவர்களுடைய தெய்வங்களோடு சேர்த்து விரட்டியடித்தீர்களே.

  • ஏசாயா 63:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?

      அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+

      என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்