உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 26:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 கடைசியில், யெகோவா பயங்கரமான செயல்களையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் எங்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவந்தார்.+

  • சங்கீதம் 78:43-51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 அவர் எகிப்தில் அடையாளங்களையும்,+

      சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார்.

      44 நைல் நதியின் கால்வாய்களை இரத்தமாக மாற்றினார்.+

      நீரோடைகளின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி செய்தார்.

      45 அவர்களை ஒழிக்கும்படி கூட்டங்கூட்டமான கொடிய ஈக்களையும்,*+

      அவர்களை அழிக்கும்படி தவளைகளையும் வர வைத்தார்.+

      46 அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளுக்கு அவர்களுடைய பயிர்களை இரையாக்கினார்.

      அவர்கள் பாடுபட்டு விளைய வைத்ததை வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கு உணவாகக் கொடுத்தார்.+

      47 அவர்களுடைய திராட்சைக் கொடிகளை ஆலங்கட்டி* மழையால் அழித்தார்.+

      அவர்களுடைய காட்டத்தி மரங்களை ஆலங்கட்டிகளால் சாய்த்தார்.

      48 அவர்களுடைய சுமை சுமக்கும் விலங்குகளை ஆலங்கட்டி மழைக்குப் பலியாக்கினார்.+

      அவர்களுடைய கால்நடைகளை மின்னல்களால்* தாக்கினார்.

      49 பற்றியெரிகிற கோபத்தால் அவர்களைத் தண்டித்தார்.

      கடும் கோபத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் வேதனைக்கும் அவர்களை ஆளாக்கினார்.

      தன்னுடைய தூதர் படைகளை அனுப்பி அவர்களை அழித்தார்.

      50 தன்னுடைய கோபத்துக்கு வடிகால் அமைத்தார்.

      சாவின் பிடியில் அவர்களைச் சிக்க வைத்தார்.

      கொள்ளைநோய்க்கு அவர்களைப் பலியாக்கினார்.

      51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+

      காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்