-
உபாகமம் 4:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 உங்கள் கடவுளாகிய யெகோவா எகிப்தில் உங்கள் கண் முன்னாலேயே தண்டனைத் தீர்ப்புகள் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும்+ செய்து, போராலும்+ கைபலத்தாலும்+ மகா வல்லமையாலும் பயங்கரமான செயல்களாலும்+ உங்களை விடுதலை செய்தாரே. இதுபோல் வேறெந்தக் கடவுளாவது ஒரு ஜனத்தை இன்னொரு ஜனத்தின் நடுவிலிருந்து தனக்காகப் பிரித்தெடுத்தது உண்டா?
-
-
சங்கீதம் 105:27-36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அவர்கள் எகிப்தியர்களின் முன்னால் அவருடைய அடையாளங்களைச் செய்தார்கள்.
காமின் தேசத்தில் அவருடைய அற்புதங்களைச் செய்தார்கள்.+
31 கொடிய ஈக்களும்* கொசுக்களும்,
அவர்களுடைய எல்லா பகுதிகளிலும் படையெடுக்கும்படி அவர் கட்டளை கொடுத்தார்.+
33 அங்கிருந்த திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் அழித்தார்.
எல்லா மரங்களையும் முறித்துப்போட்டார்.
34 வெட்டுக்கிளிகளைப் படையெடுத்து வரச் சொன்னார்.
இளம் வெட்டுக்கிளிகளைக் கணக்குவழக்கில்லாமல் வரச் சொன்னார்.+
35 தேசத்திலிருந்த எல்லா செடிகொடிகளையும் அவை விழுங்கின.
நிலத்தின் விளைச்சலைத் தின்றுதீர்த்தன.
-