19 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் எகிப்து தேசத்தை பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்போகிறேன்.+ அதன் சொத்துகளை அவன் வாரிக்கொண்டு போவான். அங்கு இருப்பதையெல்லாம் சூறையாடுவான். அவனுடைய படைவீரர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும்.’
18 எகிப்தின் நுகத்தடிகளை தக்பானேசில் நான் உடைக்கும்போது அங்கே பகல் இருட்டாகிவிடும்.+ எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கிவிடும்.+ மேகங்கள் அதை மூடும். அதன் சிற்றூர்களில் இருக்கிறவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+