உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 29:24-26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்களும் எல்லா தேசத்தாரும், ‘இந்தத் தேசத்தை யெகோவா ஏன் அழித்துப்போட்டார்?+ அவருடைய கோபம் இந்தளவு பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்பார்கள். 25 அதற்கு ஜனங்கள், ‘அவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தை+ அவர்கள் மீறிவிட்டார்கள்.+ 26 முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருந்தும் அவர்கள் அவற்றை வணங்கினார்கள்.+

  • 1 ராஜாக்கள் 9:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இந்த ஆலயம் மண்மேடாகும்.+ இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்; ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’ என்று கிண்டலாக* கேட்பார்கள்.+ 9 பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த இவர்களுடைய கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு, மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள். அதனால்தான், இந்தக் கஷ்டத்தையெல்லாம் யெகோவா இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.

  • புலம்பல் 2:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+

      எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி,

      “இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம்,

      உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்