உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 54:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பயப்படாதே,+ இனி நீ அவமானப்பட மாட்டாய்.+

      கூனிக்குறுகாதே, இனி நீ ஏமாற்றம் அடைய மாட்டாய்.

      இளமையில் உனக்கு ஏற்பட்ட அவமானத்தையும்,

      விதவையானதால் ஏற்பட்ட தலைகுனிவையும் இனி நினைத்துப் பார்க்க மாட்டாய்.”

  • ஏசாயா 60:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உன்னைக் கொடுமைப்படுத்திய ஜனங்களின் பிள்ளைகள் உன் முன்னால் வந்து தலைவணங்குவார்கள்.

      உன்னை மரியாதை இல்லாமல் நடத்துகிறவர்கள் உன் காலடியில் விழ வேண்டும்.

      அவர்கள் உன்னை யெகோவாவின் நகரம் என்றும்,

      இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுடைய சீயோன் என்றும் அழைக்க வேண்டும்.+

  • மீகா 7:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 என்னை எதிர்ப்பவளே! என் நிலையைப் பார்த்து சந்தோஷப்படாதே.

      நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்.

      நான் இருட்டில் இருந்தாலும் யெகோவா எனக்கு வெளிச்சமாக இருப்பார்.

  • செப்பனியா 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 “மோவாபின் பழிப்பேச்சுகளையும்+ அம்மோனின் அவமரியாதையான பேச்சுகளையும்+ நான் கேட்டேன்.

      என் ஜனங்களைக் கேவலப்படுத்தி, அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றப்போவதாக அவர்கள் பெருமையடித்தார்கள்”+ என்று கடவுள் சொல்கிறார்.

  • செப்பனியா 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உன்னைக் கொடுமைப்படுத்துகிற எல்லாரையும் அந்த நாளில் தண்டிப்பேன்.+

      நொண்டி நொண்டி நடப்பவர்களைக் காப்பாற்றுவேன்.+

      சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன்.+

      அவர்களுக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்.

      தலைகுனிந்து நின்ற இடங்களில் அவர்களைத் தலைநிமிர்ந்து நிற்க வைப்பேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்