உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 25:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில், நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது;+ குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+

  • எரேமியா 37:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.

  • புலம்பல் 1:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவளுடைய மக்கள் எல்லாரும் பெருமூச்சு விடுகிறார்கள்.

      உயிர்வாழ வேண்டும் என்பதற்காக உணவைத் தேடி அலைகிறார்கள்.+

      கொஞ்சம் உணவுக்காகக் கையில் இருக்கிற மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்துவிட்டார்கள்.

      யெகோவாவே, நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்ணாகிவிட்டதைப் பாருங்கள்.

  • புலம்பல் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 பஞ்சத்தில் செத்தவர்களைவிட வாளால் செத்தவர்களே மேல்.+

      வாளைப் போலப் பசி அவர்களைக் கொன்றுபோட்டது.

  • புலம்பல் 5:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 வனாந்தரத்தில் ஆட்கள் வாள்களோடு நிற்பதால் உயிரையே பணயம் வைத்துதான் உணவைப் பெறுகிறோம்.+

      10 பசிக்கொடுமையால் எங்கள் உடம்பெல்லாம் அடுப்புபோல் சுடுகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்