26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+
53 அப்போது நிலைமை படுமோசமாக இருக்கும். எதிரிகள் உங்களை வாட்டி வதைப்பார்கள். பெற்றெடுத்த பிள்ளைகளையே நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் தின்பீர்கள்.+
21 அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.
2 அதாவது, ஜனங்களிடம் எரேமியா, “யெகோவா சொல்வது இதுதான்: ‘கல்தேயர்களிடம் சரணடைகிறவர்கள் உயிர் பிழைத்துக்கொள்வார்கள்.+ ஆனால், இந்த நகரத்திலேயே இருக்கிற எல்லாரும் வாளினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும்+ சாவார்கள்.’
10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+
12 உன்னுடைய ஜனங்களில் மூன்றிலொரு பங்கினர் கொள்ளைநோயினால் அல்லது பஞ்சத்தினால் சாவார்கள். மூன்றிலொரு பங்கினர் உன்னைச் சுற்றிலும் வாளுக்குப் பலியாவார்கள்.+ மிச்சமிருக்கிற மூன்றிலொரு பங்கினரை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு வாளை அனுப்புவேன்.+