-
எசேக்கியேல் 28:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போன இஸ்ரவேலர்களை நான் மறுபடியும் ஒன்றுசேர்க்கும்போது,+ நான் பரிசுத்தமான கடவுள் என்று எல்லா ஜனங்களும் புரிந்துகொள்வார்கள்.+ என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்தில்+ என் ஜனங்கள் குடியிருப்பார்கள்.+ 26 அவர்களைக் கேவலமாக நடத்துகிற சுற்றுவட்டார ஜனங்கள் எல்லாரையும் நான் தண்டித்த பின்பு,+ அவர்கள் அங்கே பாதுகாப்பாக வாழ்வார்கள்.+ வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைத்து,+ பயமில்லாமல் வாழ்வார்கள். அப்போது, நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று தெரிந்துகொள்வார்கள்”’” என்றார்.
-
-
ஆமோஸ் 9:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+
-