-
யோசுவா 7:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 யோசுவாவும் இஸ்ரவேலர்களும் சேர்ந்து, சேராகின் வம்சத்தைச் சேர்ந்த ஆகானையும்+ அவனுடைய மகன்களையும் மகள்களையும் கூட்டிக்கொண்டு ஆகோரின் பள்ளத்தாக்குக்குப்+ போனார்கள். விலை உயர்ந்த அந்த அங்கியையும் வெள்ளியையும் தங்கக் கட்டியையும்+ ஆடுமாடுகளையும் கழுதைகளையும் கூடாரத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள். 25 அப்போது யோசுவா ஆகானிடம், “நீ ஏன் எங்களுக்கு அழிவைக் கொண்டுவந்தாய்?+ இன்றைக்கு யெகோவா உனக்கு அழிவைக் கொண்டுவருவார்” என்று சொன்னார். அப்போது இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் மிருகங்களையும் கல்லெறிந்து கொன்றார்கள்.+ அதன்பின் அந்த உடல்களை நெருப்பில் சுட்டெரித்தார்கள்.+ 26 பின்பு, அவனுடைய உடல்மேல் கற்களைப் பெரிய குவியலாகக் குவித்து வைத்தார்கள். இன்றுவரை அது இருக்கிறது. அவர்கள் அப்படிச் செய்த பின்பு யெகோவாவின் கடும் கோபம் தணிந்தது.+ அதனால்தான், அந்த இடம் இன்றுவரை ஆகோர் பள்ளத்தாக்கு* என்று அழைக்கப்படுகிறது.
-