உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 30:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 உங்கள் முன்னோர்களைப் போல நீங்கள் பிடிவாதமாக இருக்காதீர்கள்.+ யெகோவாவுக்கு அடிபணிந்து நடங்கள். உங்களுடைய கடவுளான யெகோவா நிரந்தரமாகப் புனிதப்படுத்திய ஆலயத்துக்கு வந்து,+ அவருக்குச் சேவை செய்யுங்கள். அப்போதுதான், உங்கள்மீது அவருக்கு இருக்கிற கடும் கோபம் குறையும்.+ 9 நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்தால், உங்களுடைய சகோதரர்களையும் மகன்களையும் பிடித்துக்கொண்டு போனவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள்,+ அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்கே திருப்பி அனுப்புவார்கள்.+ உங்கள் கடவுளான யெகோவா கரிசனையுள்ளவர்,* இரக்கமுள்ளவர்.+ நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் முகத்தைத் திருப்பிக்கொள்ள மாட்டார்”+ என்று சொன்னார்கள்.

  • எரேமியா 18:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைக் கவிழ்க்கப்போவதாகவும் அழிக்கப்போவதாகவும்+ நான் சொன்ன பின்பு, 8 அங்குள்ள ஜனங்கள் கெட்டது செய்வதை விட்டுவிட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+

  • செப்பனியா 2:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 தண்டனைத் தீர்ப்பு நிறைவேறுவதற்கு முன்பே,

      பதரைப் போல அந்த நாள் பறந்துபோவதற்கு முன்பே,

      யெகோவாவின் கோபம் உங்கள்மேல் கொட்டப்படுவதற்கு முன்பே,+

      யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்களுக்கு எதிராக வருவதற்கு முன்பே,

       3 பூமியில் குடியிருக்கிற மனத்தாழ்மையுள்ள* ஜனங்களே,

      யெகோவாவுடைய நீதியான சட்டங்களைப் பின்பற்றுகிறவர்களே,

      யெகோவாவைத் தேடுங்கள்,+ நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்.

      அப்போது, அவருடைய கோபத்தின் நாளிலே நீங்கள் அநேகமாக* பாதுகாக்கப்படலாம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்