உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உங்களுக்கு எதிராகப் பாவம் செய்துவந்த இஸ்ரவேலர்கள் எதிரியிடம் தோற்றுப்போன பின்பு மனம் திருந்தி உங்களிடம் வந்தால்,+ உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தி இந்த ஆலயத்தில் ஜெபம் செய்தால், கருணை காட்டச் சொல்லி உங்களிடம் கெஞ்சி மன்றாடினால்,+ 34 அதை நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள், அவர்களுடைய முன்னோர்களுக்குத் தந்த தேசத்துக்கு அவர்களை மறுபடியும் கொண்டுவாருங்கள்.+

  • சங்கீதம் 106:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 அவர்களுக்காகத் தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.

      அவர்கள்மேல் அளவுகடந்த அன்பு* வைத்திருந்ததால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.*+

  • எரேமியா 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்துங்கள். அப்போது, இந்தத் தேசத்திலேயே நீங்கள் தொடர்ந்து வாழ்வதற்கு நான் அனுமதிப்பேன்.+

  • எரேமியா 26:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர்கள் ஒருவேளை அதைக் கேட்டு தங்களுடைய கெட்ட வழிகளையும் அக்கிரமங்களையும் விட்டுத் திருந்தலாம். அப்போது, நான் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+

  • எசேக்கியேல் 18:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பொல்லாதவன் ஒருவன் எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு, என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து, நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். அவன் சாக மாட்டான்.+

  • யோவேல் 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+

      உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.

      அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*

      ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+

  • யோனா 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதைக் கேட்டதும் நினிவே ஜனங்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் விரதமிருக்க முடிவுசெய்து, துக்கத் துணியை* போட்டுக்கொண்டார்கள்.

  • யோனா 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உடனே ஜனங்கள் தங்களுடைய மோசமான வழிகளைவிட்டுத் திருந்தினார்கள்;+ அதை உண்மைக் கடவுள் பார்த்தார். அதனால், தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு* அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்