உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 11:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார். 12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+

  • ஏசாயா 43:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+

      உன்னுடைய சந்ததியை கிழக்கிலிருந்து கொண்டுவருவேன்.

      மேற்கிலிருந்து உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்.+

       6 நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களைத் திருப்பி அனுப்பு!’ என்று சொல்வேன்.+

      தெற்கைப் பார்த்து, ‘அவர்களைப் பிடித்து வைக்காதே.

      தூரத்தில் இருக்கிற என் மகன்களையும்

      பூமியின் எல்லைகளில் இருக்கிற என் மகள்களையும் கூட்டிக்கொண்டு வா.+

  • ஏசாயா 49:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இதோ, அவர்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள்.+

      வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருகிறார்கள்.

      சீனீம் தேசத்திலிருந்து வருகிறார்கள்.”+

  • எரேமியா 23:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 “ஆனால், காலம் வருகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அதுமுதல் ஜனங்கள், ‘இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’*+ என்று சொல்ல மாட்டார்கள். 8 அதற்குப் பதிலாக, ‘இஸ்ரவேல் வம்சத்தாரை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்றே சொல்வார்கள். அவர்களுடைய சொந்த தேசத்திலேயே அவர்கள் வாழ்வார்கள்.”+

  • எசேக்கியேல் 34:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 சிதறிப்போன ஆடுகளைக் கண்டுபிடித்து கவனித்துக்கொள்கிற மேய்ப்பனைப் போல நான் என்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வேன்.+ கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொண்ட நாளில்+ சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்