உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+ 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+

  • சங்கீதம் 106:47
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, எங்களைக் காப்பாற்றுங்கள்.+

      மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேருங்கள்.+

      அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்.

      சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+

  • ஏசாயா 66:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பின்பு, எல்லா தேசங்களிலும் உள்ள உங்கள் சகோதரர்களை என் பரிசுத்த மலையாகிய எருசலேமுக்குக் குதிரைகளிலும், ரதங்களிலும், கூண்டு வண்டிகளிலும், கோவேறு கழுதைகளிலும்,* வேகமாக ஓடும் ஒட்டகங்களிலும் கூட்டிக்கொண்டு வருவார்கள்.+ இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் தங்கள் காணிக்கைகளை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவது போல அவர்கள் உங்கள் சகோதரர்களை யெகோவாவுக்கு அன்பளிப்பாகக் கொண்டுவருவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.

  • எசேக்கியேல் 36:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 நீங்கள் சிதறிப்போன எல்லா தேசங்களிலிருந்தும் உங்களைக் கூட்டிச்சேர்த்து, மறுபடியும் உங்கள் தேசத்துக்கே கொண்டுவருவேன்.+

  • மீகா 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யாக்கோபே, உங்கள் எல்லாரையும் நான் கண்டிப்பாகக் கூட்டிச்சேர்ப்பேன்.

      மீதியிருக்கும் இஸ்ரவேலர்களை நிச்சயம் ஒன்றுசேர்ப்பேன்.+

      தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்.

      மேய்ச்சல் நிலத்தில் உள்ள ஆடுகளைப் போல அவர்கள் இருப்பார்கள்.+

      ஏராளமான ஜனங்களால் தேசமே கலகலப்பாக இருக்கும்.’+

  • சகரியா 8:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 “பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘கிழக்கிலும் மேற்கிலும் உள்ள தேசங்களிலிருந்து என்னுடைய ஜனங்களை நான் விடுதலை செய்வேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்