உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+ 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+

  • ஏசாயா 11:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+

      அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.

  • ஏசாயா 43:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களைத் திருப்பி அனுப்பு!’ என்று சொல்வேன்.+

      தெற்கைப் பார்த்து, ‘அவர்களைப் பிடித்து வைக்காதே.

      தூரத்தில் இருக்கிற என் மகன்களையும்

      பூமியின் எல்லைகளில் இருக்கிற என் மகள்களையும் கூட்டிக்கொண்டு வா.+

  • ஏசாயா 60:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 கண்களை உயர்த்தி, சுற்றிலும் பார்!

      அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, உன்னிடம் வருகிறார்கள்.

      உன்னுடைய மகன்கள் தொலைதூரத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.+

      உன்னுடைய மகள்களும் இடுப்பில் சுமந்து வரப்படுகிறார்கள்.+

  • ஏசாயா 60:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 தீவுகள் என்மேல் நம்பிக்கை வைக்கும்.+

      தொலைதூரத்திலிருந்து உன் மகன்களையும்,+

      வெள்ளியையும் தங்கத்தையும் ஏற்றிக்கொண்டு,

      தர்ஷீசின் கப்பல்கள் முன்வரிசையில் வருகின்றன.

      உன் கடவுளும் இஸ்ரவேலின் பரிசுத்தருமான யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்க வருகின்றன.

      அவர் உன்னை மகிமைப்படுத்துவார்.*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்