33 இதெல்லாம் நடந்த பிறகும் யெரொபெயாம் தன்னுடைய கெட்ட வழியைவிட்டு விலகவில்லை. லேவியராக இல்லாதவர்களை ஆராதனை மேடுகளில் குருமார்களாக நியமித்து வந்தார்.+ குருவாக வேண்டுமென்று யாராவது ஆசைப்பட்டால், “இவனும் ஆராதனை மேட்டில் குருவாக இருக்கட்டும்”+ என்று சொல்லி நியமித்துவிடுவார்.