9 யெகோவா நியமித்த ஆரோன் வம்சத்து குருமார்களையும் லேவியர்களையும் துரத்திவிட்டு,+ மற்ற தேசத்து மக்களைப் போல் நீங்களே குருமார்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள்.+ ஒரு இளம் காளையையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவந்தவனையெல்லாம் பொய் தெய்வங்களுக்குப் பூஜை செய்கிற குருமாராக்கிவிட்டீர்கள்.