-
2 ராஜாக்கள் 17:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
7 இஸ்ரவேலர்கள் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்கு எதிராக, அதாவது எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து தங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தவருக்கு எதிராக, பாவம் செய்தார்கள்;+ அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்,*+
-
-
எசேக்கியேல் 23:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம்.
5 அகோலாள் என்னுடையவளாக இருந்தபோது விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள்.+ அவளுடைய ஆசைக் காதலர்களான அசீரியர்களை+ மோகத்தோடு தேடிப்போனாள்.+
-