உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:49-51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+ 50 பார்க்கவே அவர்கள் பயங்கரமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுக்கு மதிப்புக் காட்டவோ, வயதில் சிறியவர்களுக்குக் கரிசனை காட்டவோ மாட்டார்கள்.+ 51 நீங்கள் அழியும்வரை உங்களுடைய ஆடுமாடுகளின் குட்டிகளையும் உங்கள் நிலத்தில் விளைகிறவற்றையும் அவர்கள் சாப்பிடுவார்கள். உங்களை ஒழித்துக்கட்டும்வரை தானியத்தையோ புதிய திராட்சமதுவையோ எண்ணெயையோ கன்றுகளையோ ஆட்டுக்குட்டிகளையோ உங்களுக்காக விட்டுவைக்க மாட்டார்கள்.+

  • எரேமியா 5:15-17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 “இஸ்ரவேல் ஜனங்களே, நான் தொலைதூரத்திலிருந்து ஒரு தேசத்தை உங்களுக்கு எதிராக வர வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.

      “அது பழங்காலத்தில் உருவான தேசம்.

      காலம்காலமாக இருக்கிற தேசம்.

      அந்தத் தேசத்து ஜனங்களின் பாஷை உங்களுக்குத் தெரியாது.

      அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரியாது.+

      16 அவர்களுடைய அம்புக்கூடு,* திறந்த சவக்குழியைப் போன்றது.

      அவர்கள் எல்லாருமே போர்வீரர்கள்.

      17 அவர்கள் உங்களுடைய விளைச்சலையும் உணவையும் தின்றுதீர்ப்பார்கள்.+

      உங்கள் மகன்களையும் மகள்களையும் கொன்றுவிடுவார்கள்.

      உங்கள் ஆடுகளையும் மாடுகளையும் கைப்பற்றுவார்கள்.

      உங்கள் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் வெட்டிப்போடுவார்கள்.

      நீங்கள் நம்பியிருக்கிற மதில் சூழ்ந்த நகரங்களைத் தாக்கி நாசமாக்கிவிடுவார்கள்.”

  • எரேமியா 6:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா சொல்வது இதுதான்:

      “வடக்கு தேசத்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வருகிறது.

      பூமியின் தொலைதூரத்திலிருந்து மாபெரும் தேசம் எழும்பி வருகிறது.+

      23 அந்த ஜனங்கள் வில்லையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள்.

      அவர்கள் ஈவிரக்கமே இல்லாத கொடூரர்கள்.

      அவர்களுடைய சத்தம் கடலின் இரைச்சலைப் போல இருக்கும்.

      அவர்கள் குதிரைகளின் மேல் வருவார்கள்.+

      சீயோன் மகளே, அவர்கள் போர்வீரர்களைப் போல அணிவகுத்து வந்து உன்னைத் தாக்குவார்கள்.”

  • எசேக்கியேல் 23:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதனால் அகோலிபாளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ அருவருப்போடு விட்டுவிலகிய உன் காதலர்களை நான் தூண்டிவிடுவேன்.+ அவர்கள் உனக்கு எதிராக எல்லா பக்கத்திலிருந்தும் வரும்படி செய்வேன்.+ 23 பேகோடு,+ சோவா, கோவா என்ற இடங்களைச் சேர்ந்தவர்களையும் பாபிலோனியர்களையும்+ கல்தேயர்களையும்+ அசீரியர்களையும் உனக்கு எதிராக வர வைப்பேன். அவர்கள் எல்லாரும் குதிரைகளில் வரும் அழகான இளம் போர்வீரர்கள். ஆளுநர்களாகவும் துணை அதிகாரிகளாகவும் முக்கிய ஆலோசகர்களாகவும் இருப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்