42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன்.
இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.+
என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+
எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+
2 இவர் சத்தம்போட்டுப் பேசவோ, குரலை உயர்த்திப் பேசவோ,
தெருவில் எல்லாரும் கேட்கும்படி கத்திப் பேசவோ மாட்டார்.+
3 மிதிபட்ட எந்த நாணலையும் ஒடித்துப்போட மாட்டார்.
மங்கியெரிகிற எந்தத் திரியையும் அணைக்க மாட்டார்.+
இவர் உண்மைத்தன்மையோடு நியாயம் செய்வார்.+
4 இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுகிற வரைக்கும் ஓய மாட்டார், சோர்ந்துபோக மாட்டார்.+
தீவுகளில் இருக்கிற ஜனங்கள் இவருடைய சட்டத்துக்காக காத்திருப்பார்கள்.