-
அப்போஸ்தலர் 14:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 இக்கோனியாவில் யூதர்களுடைய ஜெபக்கூடத்துக்கு அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகப் போனார்கள். அங்கே அவர்கள் திறமையாகப் பேசியதால் ஏராளமான யூதர்களும் கிரேக்கர்களும் இயேசுவின் சீஷர்களானார்கள். 2 ஆனால், விசுவாசம் வைக்காத யூதர்கள் மற்ற தேசத்து மக்களுடைய* மனதைக் கெடுத்து, அந்தச் சகோதரர்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிட்டார்கள்.+
-
-
அப்போஸ்தலர் 17:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 இதனால், அவர்களில் சிலர் இயேசுவின் சீஷர்களாகி பவுலோடும் சீலாவோடும்+ சேர்ந்துகொண்டார்கள். அதேபோல், கடவுளை வணங்கிய கிரேக்கர்களில் ஏராளமான ஆட்களும், முக்கியமான பெண்களில் நிறைய பேரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
5 ஆனால் யூதர்கள் பொறாமைப்பட்டு,+ சந்தையில் வெட்டியாகத் திரிந்துகொண்டிருந்த மோசமான ஆட்கள் சிலரைக் கும்பலாகச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். பின்பு, பவுலையும் சீலாவையும் அந்தக் கும்பலிடம் இழுத்து வருவதற்காக யாசோன் என்பவருடைய வீட்டைத் தாக்கி உள்ளே புகுந்தார்கள்.
-