புலம்பல்
א [ஆலெஃப்]*
1 ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே!
ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே!
மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+
ב [பேத்]
2 ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+
அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள்.
ג [கீமெல்]
3 யூதா சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டாள்;+ அங்கே கொடுமைகளை அனுபவிக்கிறாள்.+
அவள் மற்ற தேசத்து ஜனங்களோடுதான் வாழ வேண்டும்;+ அவளுக்கு நிம்மதியே கிடையாது.
அவள் கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து எதிரிகள் அவளைப் பிடித்துவிட்டார்கள்.
ד [டாலத்]
4 சீயோனுக்குப் போகிற சாலைகள் புலம்புகின்றன; ஏனென்றால், பண்டிகைக்கு யாரும் வரவில்லை.+
அவளுடைய நுழைவாசல்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன;+ அவளுடைய குருமார்கள் பெருமூச்சுவிடுகிறார்கள்.
அவளுடைய கன்னிப்பெண்கள்* அழுது புலம்புகிறார்கள்; அவள் தீராத வேதனையில் துடிக்கிறாள்.
ה [ஹே]
5 அவளுடைய எதிரிகள் இப்போது அவளுடைய எஜமான்களாக இருக்கிறார்கள்; அவளுடைய விரோதிகளுக்கு இப்போது கவலையே இல்லை.+
அவள் பாவத்துக்குமேல் பாவம் செய்ததால் யெகோவா அவளைச் சோகத்தில் தள்ளிவிட்டார்.+
அவளுடைய பிள்ளைகளை எதிரிகள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+
ו [வா]
6 சீயோன் மகளுடைய மகிமையெல்லாம் மங்கிவிட்டது.+
அவளுடைய அதிகாரிகள், புல் இல்லாமல் தவிக்கிற மான்களைப் போல இருக்கிறார்கள்.
அவர்களைத் துரத்துகிறவர்களுக்கு முன்பாகச் சக்தியே இல்லாமல் நடந்து போகிறார்கள்.
ז [ஸாயின்]
7 எருசலேம் வீடுவாசலை இழந்து கஷ்டப்படும்போது,
ஒருகாலத்தில் தான் அனுபவித்த அருமையான காரியங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.+
அவளுடைய ஜனங்கள் எதிரிகளின் கையில் சிக்கியபோது யாரும் உதவிக்கு வரவில்லை.+
அவள் அழிந்துபோனதைப் பார்த்து எதிரிகள் கைகொட்டிச் சிரித்தார்கள்.+
ח [ஹேத்]
8 எருசலேம் மகா பெரிய பாவம் செய்தாள்.+
அதனால்தான், எல்லாராலும் அருவருக்கப்படுகிறாள்.
அவளை உயர்வாக மதித்தவர்கள் இப்போது அவளைக் கேவலமாக நடத்துகிறார்கள்.
ஏனென்றால், அவளுடைய நிர்வாணத்தை அவர்கள் பார்த்தார்கள்.+
அவள் குமுறிக்கொண்டு,+ அவமானத்தில் திரும்பிக்கொள்கிறாள்.
ט [டேத்]
9 அவளுடைய பாவாடை தீட்டுப்பட்டிருக்கிறது.
அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.+
அவளுக்குப் பயங்கரமான அழிவு வந்தது; அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
யெகோவாவே, நான் படுகிற வேதனையைப் பாருங்கள். என்னுடைய எதிரி ஜெயித்துவிட்டதாகப் பெருமையடிக்கிறான்.+
י [யோத்]
10 அவளுடைய எல்லா பொக்கிஷங்களின் மேலும் எதிரி கை வைத்துவிட்டான்.+
எந்த ஜனங்கள் உங்கள் சபைக்குள் வரக் கூடாது என்று கட்டளை கொடுத்தீர்களோ
அந்த ஜனங்களே அவளுடைய ஆலயத்துக்குள் வருவதை அவள் பார்த்தாள்!+
כ [காஃப்]
11 அவளுடைய மக்கள் எல்லாரும் பெருமூச்சு விடுகிறார்கள்.
உயிர்வாழ வேண்டும் என்பதற்காக உணவைத் தேடி அலைகிறார்கள்.+
கொஞ்சம் உணவுக்காகக் கையில் இருக்கிற மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்துவிட்டார்கள்.
யெகோவாவே, நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்ணாகிவிட்டதைப் பாருங்கள்.
ל [லாமெத்]
12 சாலையில் போகிறவர்களே, இது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையா?
என்னைக் கொஞ்சம் பாருங்கள்!
எனக்கு வந்த வேதனையைவிட பயங்கரமான வேதனை வேறு ஏதாவது இருக்கிறதா?
யெகோவாதான் அவருடைய கடும் கோபத்தின் நாளில் என்னை இப்படித் தண்டித்துவிட்டார்.+
מ [மேம்]
13 மேலிருந்து அவர் என்னுடைய எலும்புகளுக்குள் நெருப்பை அனுப்பி,+ எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கிவிட்டார்.
என் கால்களைச் சிக்க வைக்க வலையை விரித்தார்; என்னைத் திரும்பிப் போக வைத்துவிட்டார்.
கைவிடப்பட்டவளைப் போல என்னை ஆக்கிவிட்டார்.
நாளெல்லாம் நான் சுகமில்லாமல் கிடக்கிறேன்.
נ [நூன்]
14 அவர் தன்னுடைய கையால் என்னுடைய குற்றங்களையெல்லாம் கட்டி
ஒரு நுகத்தடியைப் போல என் கழுத்தின் மேல் வைத்தார்; என் தெம்பெல்லாம் போய்விட்டது.
என்னால் எதிர்க்க முடியாதவர்களின் கையில் யெகோவா என்னைக் கொடுத்துவிட்டார்.+
ס [சாமெக்]
15 என்னுடைய பலசாலிகள் எல்லாரையும் யெகோவா தூக்கி வீசிவிட்டார்.+
என்னுடைய வாலிபர்களை நொறுக்க ஒரு படையை வர வைத்தார்.+
கன்னிப்பெண்ணாகிய யூதாவைத் திராட்சரச ஆலையில் யெகோவா மிதித்துப்போட்டார்.+
ע [ஆயின்]
16 இதையெல்லாம் நினைத்து நான் கதறுகிறேன்;+ என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.
எனக்கு ஆறுதல் சொல்லவோ புதுத்தெம்பு தரவோ யாரும் இல்லை, எல்லாரும் தூரமாகப் போய்விட்டார்கள்.
எதிரி ஜெயித்துவிட்டதால் என் மகன்களுடைய வாழ்க்கையே பாழாய்ப் போய்விட்டது.
פ [பே]
17 சீயோன் தன்னுடைய கைகளை விரித்திருக்கிறாள்;+ அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
யாக்கோபைத் தாக்கச் சொல்லி அவனைச் சுற்றியுள்ள எல்லா எதிரிகளுக்கும் யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.+
அந்த எதிரிகளுக்கு எருசலேமைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.+
צ [சாதே]
18 யெகோவா நீதியுள்ளவர்.+ நான்தான் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனேன்.+
ஜனங்களே, கேளுங்கள்; என்னுடைய வேதனையைப் பாருங்கள்.
என்னுடைய கன்னிப்பெண்களும்* வாலிபர்களும் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+
ק [கோஃப்]
19 நான் என்னுடைய காதலர்களைக் கூப்பிட்டேன்; ஆனால், அவர்கள் எனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+
நகரத்திலே என்னுடைய குருமார்களும் பெரியோர்களும்* உயிர்வாழ்வதற்காக உணவு தேடி அலைந்தார்கள்.
ஆனால் ஒன்றும் கிடைக்காமல் செத்துப்போனார்கள்.+
ר [ரேஷ்]
20 யெகோவாவே, நான் தவிக்கிற தவிப்பைப் பாருங்கள்.
என் குடல் துடிக்கிறது. துக்கம் என் நெஞ்சத்தைப் பிழிகிறது.
நான் உங்களுக்குக் கொஞ்சமும் கீழ்ப்படியாமல் போய்விட்டேனே!+
வெளியே வாள் எல்லாரையும் வெட்டிச் சாய்க்கிறது;+ வீட்டுக்குள்ளும் சாவுதான் விழுகிறது.
ש [ஷீன்]
21 ஜனங்கள் என்னுடைய பெருமூச்சைக் கேட்டார்கள்; எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
எனக்கு வந்த அழிவைப் பற்றி எல்லா எதிரிகளும் கேள்விப்பட்டார்கள்.
நீங்கள் என்னைத் தண்டித்ததைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.+
ஆனால், நீங்கள் சொன்ன நாள் வரும்போது+ அவர்களும் என்னைப் போல ஆகிவிடுவார்கள்.+
ת [ட்டா]
22 என்னுடைய குற்றங்களுக்காக நீங்கள் என்னைக் கடுமையாகத் தண்டித்தது போலவே,
அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக அவர்களையும் கடுமையாகத் தண்டியுங்கள்.+
நான் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறேன். என் நெஞ்சு வலிக்கிறது.
א [ஆலெஃப்]
2 ஐயோ! யெகோவாவின் கோபம் சீயோன் மகளை மேகம்போல் மூடிவிட்டதே!
இஸ்ரவேலின் மகிமையை அவர் வானத்திலிருந்து மண்ணுக்குத் தள்ளிவிட்டார்.+
தன்னுடைய கோபத்தின் நாளில் தன்னுடைய கால்மணையை+ அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
ב [பேத்]
2 யாக்கோபு குடியிருந்த இடங்களையெல்லாம் யெகோவா கரிசனை இல்லாமல் அழித்துவிட்டார்.
யூதா மகளின் கோட்டைகளைக் கோபத்தோடு இடித்துப்போட்டார்.+
அவளைத் தரைமட்டமாக்கி, அவளுடைய தேசத்துக்கும் தலைவர்களுக்கும்+ அவமானத்தை வர வைத்துவிட்டார்.+
ג [கீமெல்]
3 கோபத் தீயினால் இஸ்ரவேலின் அதிகாரத்தையெல்லாம் அழித்துவிட்டார்.
எதிரி வந்தபோது இஸ்ரவேலுக்குக் கைகொடுத்து உதவாமல் போய்விட்டார்.+
அவருடைய கோபம் யாக்கோபின் மேல் நெருப்பாய்ப் பற்றியெரிந்தது.
அவனைச் சுற்றியிருந்த எல்லாவற்றையும் அது சுட்டெரித்தது.+
ד [டாலத்]
4 எதிரியைப் போலத் தாக்குவதற்காக அவர் வில்லை வளைத்து, வலது கையைத் தயாராக வைத்தார்.+
கண்களுக்கு அருமையான எல்லாரையும் கொன்றுபோட்டார்.+
சீயோன் மகளுடைய கூடாரத்துக்குள்+ கோபத்தைத் தீ போலக் கொட்டினார்.+
ה [ஹே]
அவளுடைய எல்லா கோபுரங்களையும் தரைமட்டமாக்கிவிட்டார்.
அவளுடைய எல்லா கோட்டைகளையும் நாசமாக்கிவிட்டார்.
யூதாவைப் பயங்கரமாக அழுது புலம்ப வைத்துவிட்டார்.
ו [வா]
6 தோட்டத்தில் இருக்கிற பந்தலைப் போலத் தன்னுடைய கூடாரத்தைப் பிரித்தெறிந்தார்.+
தன்னுடைய பண்டிகைக்கு முடிவுகட்டினார்.+
பண்டிகையையும் ஓய்வுநாளையும் சீயோன் மறந்துபோகும்படி யெகோவா செய்துவிட்டார்.
பயங்கர கோபத்தினால் ராஜாக்களையும் குருமார்களையும் வெறுத்து ஒதுக்கிவிட்டார்.+
ז [ஸாயின்]
சீயோனின் கோட்டைச் சுவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.+
பண்டிகை நாளின் ஆரவாரத்தைப் போல யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடைய ஆரவாரம் கேட்கிறது.+
ח [ஹேத்]
8 சீயோன் மகளுடைய மதிலை இடித்துப்போட+ யெகோவா தீர்மானம் செய்துவிட்டார்.
அளவுநூலை எடுத்து அளந்துவிட்டார்.+
அழிவைக் கொண்டுவர அவர் தயங்கவில்லை.
அரணையும் மதிலையும் அழுது புலம்ப வைத்தார்.
அவற்றின் பலமெல்லாம் போய்விட்டது.
ט [டேத்]
9 அவளுடைய வாசல் கதவுகள் மண்ணில் புதைந்துவிட்டன.+
அவளுடைய தாழ்ப்பாள்களை அவர் உடைத்தெறிந்தார்.
அவளுடைய ராஜாக்களும் அதிகாரிகளும் வேறு தேசத்து ஜனங்களோடு இருக்கிறார்கள்.+
சட்டத்தை* யாரும் கடைப்பிடிப்பது இல்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக்கூட யெகோவாவிடமிருந்து எந்தத் தரிசனமும் கிடைப்பதில்லை.+
י [யோத்]
10 சீயோன் மகளின் பெரியோர்கள்* ஒன்றும் பேசாமல் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.+
தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள்; துக்கத் துணியை* உடுத்தியிருக்கிறார்கள்.+
எருசலேமின் கன்னிப்பெண்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
כ [காஃப்]
11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+
என் குடல் துடிக்கிறது.
என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.
என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+
பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+
ל [லாமெத்]
12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.
“சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டே
தங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள்.
מ [மேம்]
13 எருசலேம் மகளே, நான் உனக்கு எதை ஆதாரமாகக் காட்டுவேன்?
உன்னை எதனோடு ஒப்பிடுவேன்?
கன்னிப்பெண்ணாகிய சீயோனே, நான் உன்னை எதனோடு ஒப்பிட்டு ஆறுதல் சொல்வேன்?
உன்னுடைய காயம் கடலைப் போலப் பெரிதாக இருக்கிறதே.+ யாரால் உன்னைக் குணமாக்க முடியும்?+
נ [நூன்]
14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+
அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+
பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+
ס [சாமெக்]
15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+
எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி,
“இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம்,
உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.
פ [பே]*
16 உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள்.
பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+
இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது!
நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள்.
ע [ஆயின்]
கரிசனை காட்டாமல் அழித்துவிட்டார்.+
உன்னைப் பார்த்து எதிரி சந்தோஷப்படும்படி செய்துவிட்டார்.
உன் விரோதிகளுக்கு அதிக பலம் தந்துவிட்டார்.
צ [சாதே]
18 சீயோன் மகளின் மதிலே, ஜனங்கள் யெகோவாவிடம் கதறுகிறார்கள்.
ராத்திரி பகலாகக் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடட்டும்.
நீ ஓய்வெடுக்காதே; உன் கண்களுக்கு ஓய்வே கொடுக்காதே.
ק [கோஃப்]
19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு!
யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு.
பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காக
அவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.
ר [ரேஷ்]
20 யெகோவாவே, உங்களிடம் கடுமையான தண்டனை பெற்றவளைப் பாருங்கள்.
பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளையே சாப்பிட வேண்டுமா?+
குருமார்களும் தீர்க்கதரிசிகளும் யெகோவாவின் ஆலயத்தில் கொல்லப்பட வேண்டுமா?+
ש [ஷீன்]
21 சிறுவர்களும் பெரியவர்களும் தெருக்களில் செத்துக் கிடக்கிறார்கள்.+
என்னுடைய வாலிபப் பெண்களும்* வாலிபப் பையன்களும் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+
உங்களுடைய கோபத்தின் நாளில் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள்.
கரிசனை காட்டாமல் அவர்களை வெட்டிப்போட்டீர்கள்.+
ת [ட்டா]
22 பண்டிகைக்காக+ ஜனங்களை வரவழைப்பது போல,
எல்லா திசைகளிலிருந்தும் நீங்கள் திகிலை வரவழைத்திருக்கிறீர்கள்.
யெகோவாவுடைய கோபத்தின் நாளில் யாருமே தப்பிக்கவில்லை, யாருமே பிழைக்கவில்லை.+
நான் பெற்றெடுத்து வளர்த்தவர்களை எதிரி கொன்றுபோட்டான்.+
א [ஆலெஃப்]
3 கடவுளுடைய கடும் கோபத்தின் பிரம்பினால் அடி வாங்கி வேதனைப்படுகிறவன் நான்.
2 அவர் என்னை விரட்டிவிட்டார்; வெளிச்சத்தில் நடக்க வைக்காமல் இருட்டில் நடக்க வைக்கிறார்.+
3 நாள் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார்.+
ב [பேத்]
4 என்னுடைய சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்.
என் எலும்புகளை உடைத்துவிட்டார்.
5 என்னை வளைத்துப் பிடித்தார்; கசப்பான விஷத்தையும் கஷ்டத்தையும் எல்லா பக்கத்திலிருந்தும் கொடுத்தார்.+
6 ரொம்பக் காலத்துக்குமுன் இறந்தவர்களைப் போலவே என்னையும் இருட்டான இடத்தில் தள்ளிவிட்டார்.
ג [கீமெல்]
7 என்னால் தப்பிக்கவே முடியாதபடி சுற்றிலும் சுவர் எழுப்பினார்.
கனமான செம்பு விலங்குகளை என் கால்களில் மாட்டினார்.+
8 உதவிக்காக நான் கெஞ்சிக் கதறுவதை அவர் கேட்கவே இல்லை.+
ד [டாலத்]
10 பதுங்கியிருந்து தாக்கும் கரடியையும் சிங்கத்தையும் போல என்னைத் தாக்குவதற்குக் காத்திருந்தார்.+
12 வில்லை வளைத்து, என்னைக் குறிவைத்தார்.
ה [ஹே]
13 தன் அம்புக்கூட்டில் உள்ள அம்புகளால் என் சிறுநீரகங்களைக் குத்திக் கிழித்தார்.
14 எல்லா ஜனங்களும் என்னைக் கேலி செய்கிறார்கள்; நாளெல்லாம் என்னைக் கிண்டல் செய்து பாட்டுப் பாடுகிறார்கள்.
15 கசப்பானவற்றால் அவர் என்னை நிரப்பியிருக்கிறார்; எட்டியைக் கொடுத்து திணறடித்திருக்கிறார்.+
ו [வா]
17 என்னுடைய நிம்மதியைப் பறித்துவிட்டீர்கள்; சந்தோஷத்தையே* நான் மறந்துவிட்டேன்.
18 அதனால் நான், “என்னுடைய மகிமை போய்விட்டது; யெகோவாமேல் நான் வைத்திருந்த நம்பிக்கையும் போய்விட்டது” என்று சொல்கிறேன்.
ז [ஸாயின்]
19 என் கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். நான் வீடுவாசல் இல்லாமல் தவிக்கிறேன்,+ எட்டியையும் கசப்பான விஷத்தையும் விழுங்குகிறேன்.+
20 நீங்கள் கண்டிப்பாக என்னை நினைத்துப் பார்ப்பீர்கள், இறங்கி வந்து* எனக்கு உதவுவீர்கள்.+
21 இதை ஞாபகத்தில் வைத்து, உங்களுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+
ח [ஹேத்]
22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+
அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+
23 ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் புதுப்புது விதங்களில் இரக்கம் காட்டுகிறார்.+ கடவுளே, நீங்கள் எப்போதுமே நம்பகமானவர்.+
24 “யெகோவாதான் என்னுடைய பங்கு.+ அதனால், நான் அவருக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்”+ என்று சொன்னேன்.
ט [டேத்]
25 யெகோவா தன்னை நம்புகிறவர்களுக்கும்+ தன்னைத் தேடுகிறவர்களுக்கும்+ நல்லவராக இருக்கிறார்.
26 யெகோவா தருகிற மீட்புக்காக அமைதியாய்* காத்திருப்பது நல்லது.+
27 சிறு வயதிலேயே பாரமான சுமைகளைச் சுமப்பது* ஒருவனுக்கு நல்லது.+
י [யோத்]
28 கடவுள் அவன்மேல் அந்தச் சுமைகளைச் சுமத்தும்போது அவன் தனியாக உட்கார்ந்து, அமைதியாக இருக்கட்டும்.+
29 அவன் குப்புற விழுந்து, தன்னுடைய வாயை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளட்டும்;+ அவனுக்கு விடிவுகாலம் வரலாம்.+
30 அடிக்கிறவனுக்கு அவன் தன்னுடைய கன்னத்தைக் காட்டட்டும்; எவ்வளவு அவமானம் வந்தாலும் தாங்கிக்கொள்ளட்டும்.
כ [காஃப்]
31 யெகோவா நம்மை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ள மாட்டார்.+
32 அவர் நமக்கு வேதனை தந்திருந்தாலும் அளவுகடந்த அன்போடு* இரக்கம் காட்டுவார்.+
33 ஏனென்றால், மனுஷர்களை வேதனையால் வாட்ட வேண்டும் என்று அவர் நினைப்பதே இல்லை.+
ל [லாமெத்]
34 உலகத்திலுள்ள கைதிகளைக் காலடியில் போட்டு மிதிப்பவர்களையும்,+
35 உன்னதமான கடவுளுக்குமுன் நியாயம் வழங்காமல் இருப்பவர்களையும்,+
36 வழக்கில் யாரையாவது ஏமாற்றுகிறவர்களையும்
யெகோவா பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.
מ [மேம்]
37 யெகோவா கட்டளை கொடுக்காமல் ஒருவரால் எதையாவது சொல்லி அதை நிறைவேற்ற முடியுமா?
38 உன்னதமான கடவுளுடைய வாயிலிருந்து
நல்லதும் கெட்டதும் சேர்ந்து வராது.
39 செய்த பாவத்துக்குத் தண்டனை* அனுபவிக்கிறவன் அதைப் பற்றி ஏன் புலம்ப வேண்டும்?+
נ [நூன்]
40 நாம் நம்முடைய வழிகளை நன்றாகச் சோதித்துப் பார்த்து+ யெகோவாவிடம் திரும்பிவிடலாம்.+
41 முழு இதயத்தோடு நம்முடைய கைகளை உயர்த்தி, பரலோகத்தில் உள்ள கடவுளிடம்,+
42 “நாங்கள் குற்றம் செய்துவிட்டோம்; கீழ்ப்படியாமல் போய்விட்டோம்;+ நீங்கள் எங்களை மன்னிக்கவில்லை.+
ס [சாமெக்]
43 எங்கள் மேலுள்ள கோபத்தினால் உங்களிடம் வரவிடாமல் தடுத்துவிட்டீர்கள்.+
எங்களைத் துரத்திப் பிடித்து, கரிசனை இல்லாமல் கொன்றுவிட்டீர்கள்.+
44 எங்கள் ஜெபங்கள் உங்களிடம் வந்து சேராதபடி மேகத்தால் அவற்றைத் தடுத்துவிட்டீர்கள்.+
45 ஜனங்கள் மத்தியில் எங்களைக் குப்பைக்கூளம் போல அசிங்கமாக்கிவிட்டீர்கள்” என்று வேண்டிக்கொள்ளலாம்.
פ [பே]*
46 எங்களுடைய எதிரிகள் எல்லாரும் எங்களைக் கிண்டல் செய்கிறார்கள்.+
47 எங்கள்முன் இருப்பதெல்லாம் திகிலும் படுகுழியும்தான்;+ நாங்கள் சீரழிந்தும் சிதைந்தும் போய்விட்டோம்.+
48 என் ஜனங்களுடைய அழிவைப் பார்த்து என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தோடுகிறது.+
ע [ஆயின்]
49 ஓய்வே இல்லாமல் எந்நேரமும் கண்ணீர் விடுகிறேன்.+
50 யெகோவா பரலோகத்திலிருந்து எங்களைப் பார்க்கும்வரை+ அழுதுகொண்டே இருப்பேன்.
51 என் நகரத்தின் மகள்களுடைய நிலைமையைப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்.+
צ [சாதே]
52 ஒரு பறவையை வேட்டையாடுவது போல எதிரிகள் காரணமே இல்லாமல் என்னை வேட்டையாடினார்கள்.
53 என்னைக் குழியில் தள்ளி, என் மூச்சை அடக்கிவிட்டார்கள். என்மேல் கற்களை வீசிக்கொண்டே இருந்தார்கள்.
54 தண்ணீர் என் தலைக்கு மேல் புரண்டது; “அவ்வளவுதான், நான் தொலைந்தேன்!” என்று சொன்னேன்.
ק [கோஃப்]
55 யெகோவாவே, ஆழமான குழியிலிருந்து நான் உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.+
56 காப்பாற்றும்படி நான் கெஞ்சிக் கதறுவதைக் கேளுங்கள்; உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள்.
57 நான் உங்களைக் கூப்பிட்ட நாளில் என் பக்கத்தில் வந்தீர்கள். “பயப்படாதே” என்று சொன்னீர்கள்.
ר [ரேஷ்]
58 யெகோவாவே, நீங்கள் எனக்காக வழக்காடினீர்கள். என் உயிரை மீட்டீர்கள்.+
59 யெகோவாவே, எனக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். தயவுசெய்து எனக்கு நியாயம் செய்யுங்கள்.+
60 என்னுடைய எதிரிகள் எப்படியெல்லாம் சதித்திட்டம் தீட்டி என்னைப் பழிவாங்குகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.
ש [ஸீன்] அல்லது [ஷீன்]
61 யெகோவாவே, அவர்கள் எனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுவதையும் என்னைப் பழித்துப் பேசுவதையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.+
62 நாள் முழுக்க அவர்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
63 அவர்களைப் பாருங்கள்; உட்கார்ந்தாலும் நின்றாலும் என்னைக் கேலி செய்து பாட்டுப் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ת [ட்டா]
64 யெகோவாவே, அவர்களுக்கு நீங்கள் சரியான கூலி கொடுப்பீர்கள்!
65 சுரணைகெட்ட இதயத்தை ஒரு சாபமாக அவர்களுக்குக் கொடுப்பீர்கள்.
66 யெகோவாவே, நீங்கள் அவர்களைக் கோபத்தோடு துரத்திக்கொண்டு போய், பூமியிலிருந்தே ஒழித்துக்கட்டுவீர்கள்.
א [ஆலெஃப்]
4 ஐயோ! பளபளப்பான சொக்கத்தங்கம் இப்படி மங்கிப்போனதே!+
பரிசுத்த இடத்தின் கற்கள்+ தெரு முனைகளில் இப்படிச் சிதறிக் கிடக்கிறதே!+
ב [பேத்]
2 சொக்கத்தங்கம் போன்ற சீயோனின் மகன்கள்
குயவனின் கைவேலைப்பாடான மண்ஜாடிகளைப் போல ஆகிவிட்டார்களே!
ג [கீமெல்]
3 நரிகள்கூட குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்.
ஆனால், என் மகளாக இருக்கும் மக்கள் வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழிகள்+ போலக் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்.+
ד [டாலத்]
4 பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு வறண்டுபோய் மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.
பிள்ளைகள் உணவுக்காகக் கெஞ்சுகிறார்கள்,+ ஆனால் யாரும் எதுவும் கொடுப்பதில்லை.+
ה [ஹே]
5 விதவிதமான உணவு சாப்பிட்டவர்கள் பஞ்சத்தில் அடிபட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்.+
விலை உயர்ந்த துணிமணிகளை உடுத்தி வளர்ந்தவர்கள்+ குப்பைமேட்டில் கிடக்கிறார்கள்.
ו [வா]
6 உதவி செய்ய யாரும் இல்லாமல் ஒரே நொடியில் அழிக்கப்பட்ட சோதோமைவிட+
என் ஜனங்கள் பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்.+
ז [ஸாயின்]
7 அவர்களுடைய நசரேயர்கள்+ பனியைவிட தூய்மையாகவும் பாலைவிட வெண்மையாகவும் இருந்தார்கள்.
பவளங்களைவிட சிவப்பாக இருந்தார்கள்; நீலமணிக்கற்களைப் போலப் பளபளப்பாக இருந்தார்கள்.
ח [ஹேத்]
8 ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.
தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை.
அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது.
ט [டேத்]
י [யோத்]
10 என் ஜனங்களுக்கு அழிவு வந்தபோது
பாசமான தாய்கள்கூட தங்களுடைய குழந்தைகளை வேக வைத்துத் தின்றார்கள்.+
כ [காஃப்]
சீயோனில் நெருப்பு மூட்டினார்; அது அவளுடைய அஸ்திவாரங்களைப் பொசுக்கியது.+
ל [லாமெத்]
12 எதிரிகள் எருசலேமின் நுழைவாசலுக்குள் புகுந்துவிட்டார்கள்.+
உலகத்திலுள்ள எந்த ராஜாவும் ஜனமும் இதை எதிர்பார்க்கவே இல்லை.
מ [மேம்]
13 தீர்க்கதரிசிகளும் குருமார்களும் செய்த பாவங்களால்தான் இந்தக் கதி!+
அவர்கள் நீதிமான்களின் இரத்தத்தை அங்கே சிந்தினார்கள்.+
נ [நூன்]
14 தீர்க்கதரிசிகளும் குருமார்களும் குருடர்களைப் போலத் தெருக்களில் அலைந்து திரிந்தார்கள்.+
அவர்களுடைய துணிகளில் இரத்தக் கறை படிந்திருக்கிறது.+
யாரும் அந்தத் துணிகளைத் தொடுவதற்குத் துணிவதில்லை.
ס [சாமெக்]
15 அவர்கள் வீடுவாசலைப் பறிகொடுத்துவிட்டு அலைகிறார்கள்.
ஜனங்கள் அவர்களைப் பார்த்து, “பக்கத்தில் வராதீர்கள்! நீங்கள் தீட்டுப்பட்டவர்கள்!” என்று கத்துகிறார்கள்.
“போய்விடுங்கள்! போய்விடுங்கள்! எங்களைத் தொடாதீர்கள்!” என்று அலறுகிறார்கள்.
மற்ற தேசத்து ஜனங்களும், “அவர்கள் நம்மோடு வாழக் கூடாது” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள்.+
פ [பே]*
இனி யாரும் இந்தக் குருமார்களையும் பெரியோர்களையும்* மதிக்க மாட்டார்கள்”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
ע [ஆயின்]
17 உதவி கிடைக்குமென்று எதிர்பார்த்து எதிர்பார்த்து எங்கள் கண்கள் பூத்துப்போயின.+
எங்களைக் காப்பாற்ற முடியாத தேசத்துக்காகக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்துபோனோம்.+
צ [சாதே]
18 எதிரிகள் எங்களை வேட்டையாடுகிறார்கள்;+ அதனால், பொது சதுக்கங்களில் எங்களால் நடந்துபோக முடியவில்லை.
இனி எங்கள் கதி அவ்வளவுதான்! எங்களுக்கு அழிவு நெருங்கிவிட்டது! எங்களுடைய காலம் முடிந்துவிட்டது!
ק [கோஃப்]
19 எதிரிகள் கழுகுகளைவிட வேகமாக எங்கள்மேல் பாய்ந்தார்கள்.+
மலைகளில் எங்களைத் துரத்தினார்கள்; வனாந்தரத்தில் பதுங்கியிருந்து தாக்கினார்கள்.
ר [ரேஷ்]
20 யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை+ அவர்கள் பிடித்துவிட்டார்கள்; எங்களுக்கு உயிர்மூச்சாக இருந்தவரைப் படுகுழியில் விழ வைத்தார்கள்.+
“மற்ற தேசத்தாரின் நடுவே அவருடைய நிழலில் வாழ்வோம்” என்று நாங்கள் நம்பியிருந்தோமே!
ש [ஸீன்]
21 ஊத்ஸ் தேசத்தில் வாழ்கிற ஏதோம் மகளே, சந்தோஷமாக ஆடிப் பாடு!+
உன்னிடமும் கிண்ணம் கொடுக்கப்படும்;+ நீ போதை ஏறுமளவுக்குக் குடித்து, ஆபாசமாகக் கிடப்பாய்.+
ת [ட்டா]
22 சீயோன் மகளே, உன்னுடைய தண்டனை முடிந்துவிட்டது.
அவர் மறுபடியும் உன்னைச் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு விடமாட்டார்.+
ஆனால் ஏதோம் மகளே, அவர் உன்னுடைய அக்கிரமங்களைக் கணக்கெடுப்பார்.
உன்னுடைய பாவங்களை அம்பலமாக்குவார்.+
5 யெகோவாவே, எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள்.
எங்களுக்கு வந்த அவமானத்தைக் கொஞ்சம் பாருங்கள்.+
2 எங்களுடைய சொத்து அன்னியர்களின் கைக்குப் போய்விட்டது. எங்களுடைய வீடுகளை வேறு தேசத்து ஜனங்கள் எடுத்துக்கொண்டார்கள்.+
3 நாங்கள் அப்பா இல்லாத பிள்ளைகளைப் போல ஆகிவிட்டோம்; எங்களுடைய அம்மா விதவைபோல் ஆகிவிட்டாள்.+
4 குடிக்கிற தண்ணீரைக்கூட விலை கொடுத்துதான் வாங்குகிறோம்;+ காசு கொடுத்தால்தான் விறகு கிடைக்கிறது.
5 எங்களைத் துரத்துகிறவர்கள் எங்கள் பக்கத்தில் வந்துவிட்டார்கள்; எப்போது வேண்டுமானாலும் எங்கள் கழுத்தைப் பிடித்துவிடுவார்கள்.
எங்களுக்கு ஓய்வே இல்லை, நாங்கள் களைத்துப்போய்விட்டோம்.+
6 எகிப்திடமும்+ அசீரியாவிடமும்+ உணவுக்காகக் கையேந்தி நிற்கிறோம்.
7 எங்களுடைய முன்னோர்கள் இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும் அவர்கள் செய்த பாவத்துக்காக நாங்கள் கஷ்டப்படுகிறோம்.
8 இப்போது எங்களுடைய வேலைக்காரர்கள் எங்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுடைய கையிலிருந்து எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.
9 வனாந்தரத்தில் ஆட்கள் வாள்களோடு நிற்பதால் உயிரையே பணயம் வைத்துதான் உணவைப் பெறுகிறோம்.+
10 பசிக்கொடுமையால் எங்கள் உடம்பெல்லாம் அடுப்புபோல் சுடுகிறது.+
11 சீயோனில் இருக்கிற கல்யாணமான பெண்களையும் யூதாவின் நகரங்களில் இருக்கிற கல்யாணமாகாத பெண்களையும் அவர்கள் கெடுத்துவிட்டார்கள்.+
12 அதிகாரிகளுடைய கையைக் கட்டி அவர்களைத் தொங்கவிட்டார்கள்;+ பெரியோர்களை* மரியாதை இல்லாமல் நடத்தினார்கள்.+
13 வாலிபர்கள் மாவு அரைக்கும் கல்லை* தூக்கிக்கொண்டு போகிறார்கள்; சிறுவர்கள் விறகுக் கட்டுகளைச் சுமக்க முடியாமல் தடுமாறி விழுகிறார்கள்.
14 நகரவாசலில் பெரியோர்கள் யாரும் இல்லை.+ வாலிபர்கள் இசைக் கருவிகளை வாசிப்பது இல்லை.+
15 எங்கள் உள்ளத்திலிருந்த சந்தோஷமெல்லாம் போய்விட்டது. ஆடிப்பாடிக்கொண்டிருந்த நாங்கள் இப்போது அழுது புலம்புகிறோம்.+
16 எங்கள் தலையிலுள்ள கிரீடம் கீழே விழுந்துவிட்டது. எங்கள் கதி அவ்வளவுதான்! நாங்கள் பாவம் செய்துவிட்டோம்.
17 அதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது.+
கண்கள் இருண்டுபோகின்றன.+
18 சீயோன் மலை பாழாய்க் கிடக்கிறதே!+ அங்கே குள்ளநரிகள் சுற்றித் திரிகின்றனவே!
19 யெகோவாவே, நீங்கள் என்றென்றும் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.
உங்கள் சிம்மாசனம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.+
20 நீங்கள் ஏன் எங்களை இவ்வளவு காலமாகக் கைவிட்டீர்கள்? எங்களை அடியோடு மறந்துவிடுவீர்களா?+
21 யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களிடமே திரும்பி வந்துவிடுகிறோம்.+
பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்.+
22 இப்போது எங்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களே!
எங்கள்மேல் இன்னமும் பயங்கர கோபத்தோடு இருக்கிறீர்களே!+
முதல் நான்கு அதிகாரங்கள் ஒப்பாரி வைத்துப் பாடப்பட்ட பாட்டுகள். எபிரெய எழுத்துக்களின் வரிசைப்படியே இவை 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த பகுதியின் மேலே அந்தந்த எபிரெய எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வே.வா., “இளம் பெண்கள்.”
வே.வா., “இளம் பெண்களும்.”
வே.வா., “மூப்பர்களும்.”
வே.வா., “அறிவுரையை.”
வே.வா., “மூப்பர்கள்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “ஆச்சரியத்தில் விசில் அடித்து.”
எபிரெய அகரவரிசையில் “பே” என்று எழுத்து “ஆயின்” என்ற எழுத்துக்கு அடுத்ததாக வரும் என்றாலும், இங்கே அதற்கு முன்னதாக வருகிறது.
வே.வா., “கன்னிப் பெண்களும்.”
அல்லது, “பேச்சுமூச்சில்லாமல் கிடக்க வைத்தார்.”
வே.வா., “நல்லதையே.”
நே.மொ., “கீழே குனிந்து.”
வே.வா., “பொறுமையாய்.”
வே.வா., “கஷ்டங்களை அனுபவிப்பது.”
வே.வா., “மாறாத அன்போடு.”
வே.வா., “பாவத்தின் விளைவுகளை.”
எபிரெய அகரவரிசையில் “பே” என்று எழுத்து “ஆயின்” என்ற எழுத்துக்கு அடுத்ததாக வரும் என்றாலும், இங்கே அதற்கு முன்னதாக வருகிறது.
எபிரெய அகரவரிசையில் “பே” என்று எழுத்து “ஆயின்” என்ற எழுத்துக்கு அடுத்ததாக வரும் என்றாலும், இங்கே அதற்கு முன்னதாக வருகிறது.
வே.வா., “மூப்பர்களையும்.”
வே.வா., “மூப்பர்களை.”
வே.வா., “திரிகைக் கல்லை.”