பேசாத கற்கள் பேசுகின்றன
மெக்ஸிக்கோ “விழித்தெழு!” நிருபர்
பிப்ரவரி 21, 1978 அன்று நகர மின்சார நிறுவனத்தின் சில வேலையாட்கள் மெக்ஸிகோ நகரின் புறநகர்ப்பகுதியில் ஒரு குழி வெட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சிற்பக்கலைப் பொருளைக் கண்டெடுத்தனர். இது மெக்ஸிகோ சரித்திரத்தில் தொல்பொருளாராய்ச்சியின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பாக இருப்பதில் விளைவடைந்தது.
இந்தக் கற்சிற்பம் டெனாச்டிட்லனின் ஆஸ்டெக்நகரின் பிரதான ஆலயம் இருந்த அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சேதமடைந்த அந்த ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் இன்று தோண்டி எடுக்கப்படுகின்றன. இவற்றைப் பார்க்க வரும் ஆட்களில் சிலர் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் மற்றவர்களோ பூர்வீக மெக்ஸிக்கன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஆஸ்டெக்ஸ் மக்கள் குறித்து இந்த இடிபாடுகள் என்ன சொல்லக்கூடும் என்பதை அறிந்துகொள்வதில் அக்கறை செலுத்துகின்றனர். ஏனென்றால் பேசாத இந்தக் கற்கள் சொல்லுவதற்கு கிளர்ச்சியூட்டும் ஒரு கதை இருக்கிறது.
அந்தப் பிரதான ஆலயம்
தோண்டப்பட்ட அந்தப் பகுதிக்கு அருகாமையிலிருப்பதுதான் ஸோக்காலோ சுரங்கபாதை ரயில்நிலையம். அந்தப் பிரதான ஆலயம் எப்படி தோற்றமளித்திருக்கும் என்று கருதப்பட்ட ஒரு மாதிரி வரைபடத்தை இங்கு காணலாம். அது கூம்பு வடிவங்கொண்டதும் உச்சியில் இரண்டு கோபுரங்கள்போன்ற அமைப்பும் கொண்டது. ஆஸ்டெக்ஸ் வணக்கத்தின் பிரதான மையமாக, அது டெனாச்டிட்லன் மைய சதுக்கத்தில் மற்ற கோவில்களால் சூழப்பட்டிருந்தன. இங்குதான் ஆஸ்டெக்ஸ் மக்கள் வணங்கிய முக்கிய சிலைகள் இருந்தன, அதாவது போர் தெய்வமாகிய ஹூலிட்ஜிலோ பாஷ்ட்லி, மற்றும் மழை தெய்வமாகிய ட்லாலாக் சிலைகள்.
ஸ்பேன் மக்கள் வந்தபோது டெனாச்டிட்லன், ஏரிகள் மிகுந்த பள்ளத்தாக்கில் ஒரு தீவாக இருந்தது. அதன் தெருக்களுக்கு இணையாக இடையிடையே வாய்க்கால்கள் இருந்தன, இவற்றின் வாயிலாக சரக்குகள் சாலுப்பாஸில், அதாவது சிறிய படகுகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். சுவாஹ்டமாக் என்ற தனது புத்தகத்தில் சால்வடார் டாஸ்கானோ நமக்காக விளக்குவதாவது: “அந்தப் பிரதான ஆலயத்தின் மகா சதுக்கம் அந்தத் தீவின் மத்தியிலிருந்தது. மற்றும் அதன் மகிமையையும் தனித்தன்மையையும் விவரித்து சொல்ல மொழி இல்லை, 500 பேருடைய வீடுகளைக் கட்டுமளவுக்கு அது பெரியதாக இருந்தது”’ என்று கோர்ட்ஸ் விளக்குகிறார். ‘அந்தச் சதுக்கம் வணக்கத்திற்கான பல பிரமிட்களையும், பந்தாட்டங்களுக்காக ஒரு விளையாட்டு மைதானத்தையும், பூசாரிகளுக்கான வீடுகளும், கபால மேடைகளும் (ஜாம்பான்ட்லிஸ்) வெட்டப்பட்ட கற்களாலும் மணங்கமழும் கேதுரு மரங்களாலும் கட்டப்பட்ட கோயில்களும் இருந்தன. இந்தப் பல காரியங்களைத் தவிர போர் தெய்வமாகிய சூரிய தெய்வத்திற்கு, ஹூவிட்ஜிலோபாஷ்ட்லி என்ற தெய்வத்திற்குப் பிரதான ஆலயமும் இருந்தது. இது 30 மீட்டர் [100 அடி] உயரம்-உச்சி வரையாக 116 படிகள்-இது அந்தத் தீவின் காட்சியை மேன்படுத்தியது.”
அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு விஜயம்
இந்த தகவல்களை மனதில் கொண்டவர்களாக, அந்த முழு இடத்தையும் பார்க்க அகழ்வுகளுக்கு வழிநடத்தும் இடத்திற்கு நடப்போம் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? முதலில் நீங்கள் சிதைவுற்ற பொருட்கள் சேகரிக்கப்பட்டிருப்பதையே பார்க்கிறார்கள்! அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் இருந்தவிதமாகவே விடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சில காரியங்களே திரும்ப சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை சற்று கிட்டே போய் பார்ப்பது சில அரிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
உதாரணமாக, அந்த அகழ்விடங்களின் மத்திய பகுதியில் ஹூவிட்ஜிலோபாஷ்ட்லி மற்றும் ட்லாலாக் தெய்வங்கள் வணங்கப்பட்ட இடங்களைப் பார்க்கிறீர்கள். அக்கறைக்குரிய காரியம் என்னவெனில் கோர்ட்ஸ் விவரித்த உருவம் இதைவிட மிக பெரியது ஸ்பேன் மக்கள் ஆஸ்டெக்ஸ் கலாச்சாரத்தையும் இரத்தவெறி பிடித்த மதம் என்று தாங்கள் கருதிய காரியத்தையும் முற்றிலும் அகற்றிட விரும்பினர். எனவே இந்தப் பட்டணத்தை 1521-ல் கைப்பற்றிய பின்பு அவர்கள் ஆலயத்தை சுக்குநூறாக அழித்தனர். சிதைவுகள் மட்டுமே விடப்பட்டன பின்பு அந்த இடத்தில் தங்களுடைய சொந்த கட்டிடங்களை எழுப்பினர்.
என்றபோதிலும் இவர்கள் அழித்த ஆலயம் அவர்கள் கட்டிய தொடர்ச்சியான கோவில்களில் கடைசியானவைதான். முதல் கட்டிடம் ஏழு முறை பெரிதுபடுத்தப்பட்டது. அதில் ஒவ்வொரு விஸ்தரிப்பும் அதற்கு முன்னானதைப் புதைப்பதாயிருந்தது. எனவே, ஆலயத்தின் சில பாகங்கள் ஸ்பேன் மக்களின் அழிக்கும் பணியையும் தப்பிப்பிழைத்தன. நாம் இங்கு பார்க்கும் அந்த இரண்டு வணக்க ஸ்தலங்களும் இரண்டாவது முறை பெரிதுபடுத்தப்பட்ட கட்டிடத்தின் பாகமாயிருக்கிறது.
இரத்த வெறிகொண்ட மதம்.
இந்த வணக்க ஸ்தலங்களில்தான் நர பலிகள் செலுத்தப்பட்டன. இந்த பலிகள்தானே ஆஸ்டெக்ஸ் மதத்தை இரத்த வெறிகொண்ட மதமாக ஆக்கியிருக்கிறது. என்றபோதிலும் அந்த மதத்தை தற்போதைய மதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. டாமினிக் வீரட் என்பவரின் கருத்து கவனிக்கப்படத்தக்கது: “ஆஸ்டெக்ஸ் நாகரீகம் ஓர் இயக்கமாக நர பலிகளை செலுத்தும் கொடுமையை தொடருகிறது. அதன் சார்பாக வாதாடும் அநேகரைக் கொண்டிருக்கும் ஒரு கலாச்சார செயலாக இருக்கிறது: என்றாலும் அதன் விரோதிகளின் அது அருவெறுப்புணர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. அவர்கள் கத்தோலிக்க மதத்திற்கு முரணான கோட்பாடுகளை ஒடுக்குதலின் காலத்தையும் நாசிச காலத்தையும் மறந்துவிட்டிருக்கின்றனர்.”
என்றபோதிலும் ஹூவிட்ஜிலோ பாஷ்ட்லிக்கு முன்பு இருக்கும் நர பலி மேடைகளைப் பார்க்கும்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது. இந்தக் கல்லின் மேல்பரப்பில்தான் பலியிடப்படுகிறவர்கள் கடத்தப்பட்டார்கள். அவர்களுடைய முகம் மேல் நோக்கியிருக்க தங்களுடைய இருதயம் பிளந்து அந்தத் தெய்வங்களுக்கு அதை அற்பணிக்க ஆயத்தமாயிருந்தனர்.
மற்றொரு சிலை, கொயோல் ஷாக்வி என்ற பெண் தெய்வத்தின் சிலை ஆஸ்டெக்ஸ் வணக்கத்தின் மற்றொரு அம்சத்தை சுட்டிக் காட்டுகிறது. கொயோல் ஹூட்ஸிலோ போச்டில்லின் சகோதிரியைக் கொன்று துண்டாக வெட்டினான். எனவே அந்தத் தட்டையான கற்சிற்பம் அவளை உருப்பற்றவளாகப் பிரதிநிதித்துவஞ் செய்கிறது. தலை கழுத்திலிருந்து தனியே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே அங்கமிழந்து உருகுலைந்த நிலையிலிருக்கும் ஒரு தேவதையை வணங்குவதை அந்த ஆஸ்டெக்ஸ் மக்கள் தடையாக உணரவில்லை.
ஒப்பீடுகள்—பூர்வீகமும் நவீனமும்
நர பலிகள் செலுத்துவது பொய் மதத்தின் பாகமாக இருந்துவந்திருக்கிறது என்பதை பைபிள் வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். கானானியரும், சில சமயங்களில் விசுவாச துரோக இஸ்ரவேலருங்கூட தங்களுடைய பிள்ளைகளைப் பேய்த் தெய்வங்களுக்கு பலி செலுத்தினார்கள். (2 இராஜாக்கள் 23:10; எரேமியா 32:35) இந்த ஆஸ்டெக்ஸ் மக்களும்கூட பிள்ளைகளைப் பலி கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதைக்குறித்து நாம் எல் டெம்ப்லோ மேயர் என்ற புத்தகத்தில் வாசிக்கிறோம்: “பலி செலுத்தப்பட்ட இந்தப் பிள்ளைகளின் எஞ்சிய பாகங்களும் அத்துடன் மழை தெய்வத்தின் சின்னங்களும் இந்த அகழ்வுகள் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டன. பஞ்சத்தின்போது செலுத்தப்பட்ட விசேஷ பலிகளாக இவை இருக்கக் கூடுமா?”
பக்கம் 219-ல் அதே புத்தகம் தொடர்ந்து கூறுவதாவது: “மனார்குவியா இந்தியான (இந்திய முடியாட்சி) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜூவான் டி டார்க்வமேடா இதைக்குறித்து சில காரியங்களைக் கூறுகிறார்: ‘பிள்ளைகள் இந்தப் பலி செலுத்தப்படும் இடத்திற்கு விலையுயர்ந்த உடை அணிந்தவர்களாகக் கொண்டு செல்லப்பட்டனர். ஏராளமான பூக்களாலும் இறகுகளாலும் ஜோடனை செய்யப்பட்ட சிறிய மேடைகளில் அல்லது பீடங்களில் அமர்த்தப்பட்டு பூசாரிகளாலும் மற்ற பணிவிடைக்காரர்களாலும் தோளில் சுமந்து செல்லப்பட்டனர். மற்றவர்கள் அவர்களுக்கு முன்பாக இசை முழங்க பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்வார்கள். இப்படித்தான் அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தப்படும் ஸ்தலங்களுக்குக் கூட்டிச் செல்லப்படுவார்கள்.”
ஆஸ்டெக்ஸ் மதத்துக்கும் பழைய உலக மதங்களுக்குமிடையே ஒத்திருக்கும் அம்சங்களைக் குறிப்பிடும்போது, ட்லாலாக் தெய்வம் இனவிருத்தி தெய்வமாகவும் இருந்தது என்று அறிக்கை செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு முக்கியமான பீடம் அந்தத் தெய்வத்துக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மற்றும் அந்த ஆலயத்தில் இரு பெரிய சர்ப்பங்களின் சின்னமும் இருந்தன, சர்ப்பம் இனவிருத்தியின் சின்னமாக இருந்தது. அதேபோல, பழைய உலகின் பூர்வீக புறமதங்கள் பல இனவிருத்தி தெய்வத்தைக் கொண்டிருந்தன. அக்கறை தூண்டும் இன்னொரு காரியம்,ஹூவிட்ஜிலோ பாஷ்ட்லி கோட்விக்கியுக்குப் பிறந்ததாகக் கூறப்படுகிறது, இந்த அம்மன் தெய்வம் பின்னால் “தெய்வங்களுக்கெல்லாம் தாய்” என்பதாக அழைக்கப்பட்டது.
ஆஸ்டெக் மதத்தார் புதிய மதத்துக்கு தங்களை வளைந்துகொடுக்கின்றனர்
மெக்ஸிக்கோவிலிருந்து ஆஸ்டெக்ஸ் மதத்தை வேரோடழிக்க ஸ்பேன் மக்கள் கடினமாக முயன்றனர். வன்முறை வழிகளையும் கையாண்டனர். அநேக சமயங்களில் அவர்கள் பழைய கட்டிடங்களின் கற்களை பயன்படுத்தி ஆஸ்டெக்ஸ் ஆலயங்கள் மீதே தங்களுடைய சர்ச்சுகளைக் கட்டினர். ஆஸ்டெக்ஸ் விக்கிரகங்களின் பகுதிகள்கூட கட்டிட பொருட்களாயின.
என்றபோதிலும் ஆஸ்டெக்ஸ் மதத்தால் புதி மதத்துக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வது அவ்வளவு கடினமாயிருக்கவில்லை. கற்சிலைகளுக்குப் பதிலாக மரச் சிலைகளும் பீங்கான் சிலைகளும் பயன்படுத்தப்பட்டது. இந்தப் புதிய சிலைகள் பார்வைக்கு மனித சாயலிலிருந்தாலும் அவை விக்கிரகங்களே. பழைய மதத்தின் பல கருத்துக்கள் மெக்ஸிகோ கலாச்சாரத்தின் பாகமாகிவிட்டன. உதாரணமாக, மரித்தவர்களுக்காக செய்யப்படும் சடங்குமுறை இன்னும் தொடர்ந்தது: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இது அனுசரிக்கப்பட்டு வருகிறது. மெக்ஸிக்கோவின் பூர்வீக குடிகளைப்போல இந்தப் புதிய மதத்தைப் பின்பற்றியவர்களும்கூட ஆத்துமா அழியாமை என்ற கோட்பாட்டை நம்புகின்றன.
அந்தப் பிரதான ஆலயத்தின் பேசாத சிதைவுகள் இப்பொழுது பயணிகள் விஜயத்திற்கு திறக்கப்பட்டிருக்க, என்றுமாகக் கடந்துபோன ஒரு சாம்ராஜ்யத்தையும் கலாச்சாரத்தையும் மனதுக்குத் திரும்ப கொண்டுவருகிறது. அவை வித்தியாசமான மதத்திலும் இருந்துவரும் கொடூரமான மத சடங்காச்சாரங்களையும் இன்றும் காக்கப்பட்டிருக்கும் பழக்கவழக்கங்களையும் வணங்கப்பட்டுவராத தெய்வங்களையும் நம் நினைவுக்குக்கொண்டுவருகிறது. மற்றும் பழைய உலகின் பொய்மதங்களுக்கும் புதிய உலகின் மதங்களுக்கும் இடையே ஒத்திருக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்களையும் நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. (g87 2/8)
[பக்கம் 27-ன் படம்]
கோட்லிக்கியு பெண் தெய்வம்
[படத்திற்கான நன்றி]
Nat’l Institute of Anthropology and History, Mexico
[பக்கம் 28-ன் படம்]
கொயோல்ஷாக்வி பெண் தெய்வம்
[படத்திற்கான நன்றி]
Nat’l Institute of Anthropology and History, Mexico