உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 11/8 பக். 30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எய்ட்ஸ் முன்னறிவிப்பு
  • புதிய தொலைபேசி பணிகள்
  • தெருப் பிள்ளைகள்
  • பர்மா இப்பொழுது மியான்மார் என்றழைக்கப்படுகிறது
  • வாடகைக்கு ஒரு விருந்தாளி
  • தொலைக்காட்சி கொலையோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது
  • எய்ட்ஸ் ஏன் இவ்வளவு பரவலாகப் பரவியிருக்கிறது?
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 11/8 பக். 30

உலகத்தைக் கவனித்தல்

எய்ட்ஸ் முன்னறிவிப்பு

2000 ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உலகமுழுவதிலும் பத்து மடங்காக உயரும், இது தற்போதைய மொத்த எண்ணிக்கையாகிய 4,50,000-லிருந்து 50,00,000-ஆக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு முன்னறிவித்திருக்கிறது. எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி மக்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. “1980-களில் நாம் கண்ட எய்ட்ஸ் நோய் நிலை 1990-களின் பத்தாண்டுகளின்போது மிக மோசமாக இருக்கும் என்று இந்த ஆய்வுக் கணிப்புகள் காண்பிக்கின்றன” என்றார் எய்ட்ஸ் நோய்த் தடுப்புச் செயல் திட்ட இயக்குநர் டாக்டர் ஜோனத்தான் மேன். விரைவில் ஒரு நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், இது, இப்பொழுதுக்கும் 1990-க்குமிடையில் எய்ட்ஸ் நோய் ஏற்படுத்துகிறவர்களைத் தடைச் செய்யாது, ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே அந்நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள். (g89 9/22)

புதிய தொலைபேசி பணிகள்

ஞாபகத் திறனுடைய தொலைபேசிகள், எண்களைத் தானாக இயக்குதல், கைகள் பயன்படுத்தாமலேயே இயங்குதல், எண்கள் திரையில் தோன்றுவது, போன்ற காரியங்களைக் கொண்டிருக்கும் தொலைபேசிகள் சர்வசாதாரணமாகிவிட்டிருக்கின்றன. ஆனாலும் ஒருவர் தொலைபேசியில் அழைக்கும்போதுதானே மணியடிக்கிறது. அது இப்பொழுது மாறிக்கொண்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள தொலைபேசி நிறுவனங்கள் புதிய அழைப்பொலிகளை அமைத்திடுகையில் நீங்கள் ஒரு சில பட்டன்களை அழுத்தினால் அவைப் பல புதியப் பணிகளைச் செய்கின்றன. அவற்றில் உட்பட்டிருப்பவை: அழைப்பு கணிப்பு—ஓர் அழைப்பு மிகக்குறுகியதாக இருந்தாலும், அழைப்பவர் பேசாமற்போனாலும் இது அழைப்பவரின் தொலைபேசி எண்ணை தொலைபேசி நிறுவனத்துடன் பதிவு செய்கிறது; அழைப்புத் தடை—தொலைபேசியில் ஓர் எண் அழைக்கப்படும்போது, நீங்கள் அந்தச் சமயத்தில் பேசுவதற்கு ஆயத்தமாயில்லை என்று சொல்லும் தகவலை அது கொண்டிருக்கிறது; திரும்ப அழைத்தல்—30 நிமிடங்களுக்கு உங்களுக்குத் தேவையான எண்ணைத் திரும்பத் திரும்ப முயன்று பார்க்கிறது, அதே சமயத்தில் நீங்கள் மற்ற எண்களை அழைக்கவோ அல்லது அழைப்புகளைக் கையாளவோ அனுமதிக்கிறது; மறு அழைப்பு—நீங்கள் மணியடித்துக்கொண்டிருக்கும் தொலைபேசியைக் கையில் எடுப்பதற்கு முன் மணியடித்தல் நின்றுவிட்டால், உங்களை அழைக்க முற்பட்ட அந்தக் கடைசி நபரின் எண்ணுடன் தொடர்பு கொள்ளுகிறது; முதல் முக்கியத்துவம் கொண்ட அழைப்பு—ஒரு சில எண்களிலிருந்து வரும் அழைப்புகளின் அழைப்பு ஒலி தனித்தன்மைக் கொண்டதாயிருக்கும்; அழைப்பவர் ID—அதற்கென்ற ஒரு திரையில் அழைக்கும் நபரின் எண் தோன்றும். (g89 12/8)

தெருப் பிள்ளைகள்

உலகின் தெருக்களில் ஏறக்குறைய பத்துகோடி பிள்ளைகள் வாழ்கிறார்கள் என்று அறிக்கைகள் காண்பிக்கின்றன. அவர்கள் தெரு வியாபாரிகளாக, திருடர்களாக, பிச்சைக்காரர்களாக ஒரு பரதேசி வாழ்க்கை வாழ்கிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு உதவுவதற்கு முற்பட்ட ஒரு குழுவின் செயலியக்குனர் பீட்டர் டேக்கன் குறிப்பிடுகிறபடி, அநேகர் பாலுறவுக்காக பிள்ளைகளை வியாபாரம் செய்யும் செழித்தோங்கும் அந்தத் தொழிலுக்குப் பலியாட்களாகி, அப்படிப்பட்ட பிள்ளைகள் தங்களை கவனிக்கும் அமைப்புகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 5,000 புதிய “தெருக்கான வேட்பாளர்கள்” பிறக்கிறார்கள் என்று டேக்கன் கூறுகிறார்.

பர்மா இப்பொழுது மியான்மார் என்றழைக்கப்படுகிறது

பர்மா என்று முன்னதாக அழைக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாட்டுக்கு இப்பொழுது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட புதிய பெயர் மியான்மார். மற்றும், இந்தத் தேசத்தின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான ரங்கூன் இப்பொழுது யாங்கோன் என்று மாற்றப்பட்டது. இந்த மொழிபெயர்ப்புகள் இப்பொழுது பர்மா மொழியில் பயன்படுத்தப்படும் முறைக்கு இசைவாக இருக்கிறது. இந்தத் தேசத்தின் புதிய பெயர் ஜூன் 22, 1989-ல் ஐக்கிய நாடுகளால் நிறைவேற்றப்பட்டது.

வாடகைக்கு ஒரு விருந்தாளி

வீட்டை சுத்தப்படுத்தும் வேலைக்கும் பொருட்கள் வழங்கும் சேவைக்கும் ஆட்களைக் கூலிக்கு அனுப்பும் அந்தப் பணியுடன்கூட, ஜப்பானில் ஒரு நிறுவனம் வாடகைக்கு விருந்தாளிகளையும் வழங்குகிறது. இந்த வாடகை விருந்தாளிகள் விவாகத்திலிருந்து சாவு வரையான சம்பவங்களுக்குப் பதிலாட்களாக கிடைக்கப்பெறுகிறார்கள். விவாக வைபவங்களில் அவர்கள் மாப்பிள்ளையின் தோழர்களாகவோ அல்லது பெண்ணின் தோழிகளாகவோ அல்லது மாப்பிள்ளையின் சிறுபிராய வகுப்புத்தோழனாகவோ அல்லது தங்களுடைய வேலையின் ஒரு செயலதிகாரியாகவோ அல்லது தூரத்திலிருந்து வந்த ஓர் உறவினராகவோ அல்லது அவர்களுடைய பெற்றோரில் ஒருவராகவோ பெயரளவில் இருக்கக்கூடும். இதுவரை இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பணி, ஒரு விவாக வைபவமாகும். அந்த வைபவத்திற்கு வந்திருந்த 80 விருந்தாளிகளில் அது 60 விருந்தாளிகளை வழங்கியது. அந்தப் பணிக்கான வாடகை ஒருவருக்கு 15,000 முதல் 25,000 யென் (ரூ. 1,700 முதல் ரூ. 2,700 வரையாக இருந்தது.)

தொலைக்காட்சி கொலையோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது

தொலைக்காட்சி பார்ப்பது சமுதாயத்தில் வன்முறை சம்பவங்களுக்கு இடமளித்திருக்கின்றனவா? அமெரிக்கன் ஜர்னல் ஆஃ எபிடிமியாலஜி என்ற பத்திரிகையில், பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வு மூன்று நாடுகளை உட்படுத்தி, அது உண்மை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டு 10 முதல் 15 ஆண்டுகள் கழித்து கொலைகள் எண்ணிக்கை உயர்ந்தது. தொலைக்காட்சி பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நாடுகளில் வன்முறயும் பின்னரே உயர்ந்தது. “நம்முடைய சமுதாயத்தில் வன்முறக்கு தொலைக்காட்சி ஒன்றே காரணமாக இல்லையென்றாலும் தொலைக்காட்சி இல்லாமலிருந்திருந்தால், ஓராண்டுக்கு 10,000 கொலைகள் குறைவாயிருந்திருக்கும்” என்று ஐக்கிய மாகாணங்கள் பற்றிய அந்த ஆய்வின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். (g89 10/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்