ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை கண்டடைதல்
இந்தக் குழப்பமான, தலைகீழாக இருக்கும் உலகத்தில் அநேகர் வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கேட்கிறார்கள்: நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? நாம் எங்கிருந்து வந்தோம்? எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது? விடைகளைக் தேடி அநேகர் கடவுளிடம் திரும்புகின்றனர், அவர் அவர்களை ஏமாற்றமடைய செய்வதில்லை. (மத்தேயு 7:7, 8) கிரீஸிலுள்ள ஒரு பெண்மணியின் அனுபவம் அவ்விதமே இருக்கிறது. அவள் சொல்லுகிறாள்:
◻ “மனிதனைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் நான் சிந்திக்க ஆரம்பித்தபோது 14 வயதாக இருந்தேன். பள்ளியில் மனித இன நூலை படித்தபோது என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் மருத்துவம் விடையளிக்குமென்று நினைத்தேன், ஆனால் அது மனிதனின் ஆரம்பத்தைக் குறித்து எனக்கு விளக்க முடியாததினால் அப்படிப்பட்ட சிந்தனைகளை நான் அகற்றினேன்.” அவள் மேலுமாக தொடருகிறாள்: “என்னுடைய சிந்தனை சோதிடத்தினிடமாக திரும்பியது, கிழக்கத்திய மதங்களாகிய முகமதிய மதம், திபெத் தேசத்தின் மதம் ஆகியவற்றை படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய வாழ்க்கையில் லாமாவின் போதனைகளையும் ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட காரியங்களையும் பொருத்த ஆரம்பித்தேன். ஆவிகளோடு தொடர்பு வைத்தபோது, நான் சத்தியத்தை கண்டைந்ததாக உணர்ந்தேன். மேற்கத்திய மதங்கள் பைபிளின் மீது தங்களுடைய நம்பிக்கைகளை வைத்திருப்பதாக உரிமை பாராட்டினர், ஆனால் பள்ளியில் என்னுடைய மத ஆசிரியர் பைபிளிலிருந்து என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததனால் ஆவியுலகத் தொடர்பு கோட்பாடு சம்பந்தப்பட்ட காரியங்களையும், நட்சத்திர சாஸ்திரங்களையும், மந்திர சக்தியால் மயக்கத்தை ஏற்படுத்துவது போன்றவற்றை கடைபிடித்து வந்தேன்.”
1982-ல் இந்த பெண்மணி யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தாள், ஆனால் இவள் விவரிப்பதாவது: “நான் கற்று வந்த கடினமான போதனைகளை ஒப்பிடும்போது, அவர்கள் பைபிளை விளக்கினது அதிக எளிதாக இருந்தது. ஆனால் ஏதோவொன்று பைபிளை நான் கற்றறிய என்னை உந்துவித்தது. எனவே நான் சாட்சிகளை தவறென்று நிரூபிக்க வேண்டுமென்ற அகம்பாவத்தினால் ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டேன்.
ஒரு வருட காலமாக யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்த பிறகு, அவள் விளக்குகிறாள்: “உண்மையான சத்தியத்தை அறிந்துக் கொள்ள எனக்கு உதவி செய்த யெகோவாவுக்கு நான் இப்போது முழு இருதயத்தோடு நன்றி செலுத்துகிறேன். கடைசியாக, நான் எல்லா பொய் கோட்பாடுகளிலிருந்தும் மற்றும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறேன். சத்தியம் மிக எளிதான ஒன்றாகவும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து எளிதில் கண்டுபிடிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. கடைசியாக என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலை நான் கண்டு பிடித்துவிட்டேன்; இப்போது நான் மனிதனின் ஆரம்பத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் அறிந்திருக்கிறேன்.”
◻ கமியூனிஸ கொள்கையைப் பின்பற்றி வந்த 27 வயதான ஒரு கிரேக்க மனிதன், வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை கண்டடைந்தான். அவன் ஜெர்மனியில் பொறியில் படித்து, கிரீஸுக்கு திரும்பிச் சென்று அங்கு இராணுவத்தில் பதிவு செய்து கொண்டான். தன்னுடைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் அதை மேம்படுத்தும் நிலையில் மனிதன் இல்லையென்றும், அவனுடைய அனுபவங்கள் உறுதிபடுத்தின. இந்த மனிதன் ஜெர்மனிக்குப் போகும் முன்பு, யெகோவாவின் சாட்சியான ஒரு அயலகத்தார் அவனிடம் பைபிளைப் பற்றி பேசினார். அவன் இப்போது அந்த சம்பாஷணைகளை நினைவுகூர்ந்தான். எனவே, இராணுவத்திலிருந்து வெளியேறும்போது, அவனுடைய தலைமை அதிகாரியிடம் பின்வருமாறு சொன்னான்: “நான் இனிமேலும் என்னை ஒரு இராணுவ வீரன் என்று கருதுவதில்லை!“ அவனுடைய குடும்பத்தார் அவனுக்கு மனக்கோளாறுகள் இருக்குமென்று நினைத்து உளநோய் மருத்துவரிடம் சென்று பார்க்கும்படி வற்புறுத்தினர். இது அவன் அநேக விதமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ள செய்ததினால், அவனை சரீர பிரகாரமாகவும் மனப்பிரகாரமாகவும் பாதித்ததினால் அவன் அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டான்.
வீட்டுக்கு விடு ஊழியத்தில் இரண்டு சாட்சிகள் அவரைக் கண்டு, அவரோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார்கள். யெகோவாவின் தேவைகளுக்கேற்ப தன்னுடைய வாழ்க்கையை அமைத்தபோது, நற்செய்தியை மும்முரமாக பிரஸ்தாபிக்க ஆரம்பித்தார். 1984-ல் அவருடைய உறவினர்களில் பத்து பேரொடு ஞாபகார்த்த தினத்தன்று ஆஜரானார்.
ஆம், வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருப்பதைக் கண்டுபிடித்தார், யெகோவாவை ஒரு விசேஷித்த பயனியராக (முழு நேர ஊழியராக) சேவிக்க ஆர்வமுள்ளவராக இருக்கிறார். நீதியான கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனை அடைய வேண்டுமென்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கிறது.—ஏசாயா 65:17, 18. (w85 10/1)