உண்மையான சுயாதீனம் —எந்த மூலகாரணத்திலிருந்து?
“தன் நடையை நடத்துவதும் நடக்கிற மனிதனுக்குரியதல்ல. யெகோவாவே. என்னைத் திருத்தும்.”—எரேமியா 10:23, 24, NW.
1, 2. பெரும்பான்மையர் சுயாதீனத்தை எவ்வாறு கருதுகின்றனர், ஆனால் வேறு எதுவும் கருதப்பட வேண்டும்?
சந்தேகமில்லாமல் நீங்கள் உண்மையான சுயாதீனத்தை மதிக்கிறீர்கள். உங்கள் சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திக்கூற சுயாதீனராயும், நீங்கள் எங்கே மற்றும் எவ்வாறு வாழ்வதென்பதைத் தீர்மானிக்கச் சுயாதீனராயும் இருக்கும்படி நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் செய்யும் வேலையை நீங்களே தெரிந்துகொள்ள, உங்கள் உணவை, இன்னிசையை, நண்பர்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். சிறியவையும் பெரியவையுமான பல காரியங்களில் உங்களுக்குரிய தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. இயல்பான நிலையிலுள்ள ஒருவரும், சிறிதே அல்லது சுயாதீனத் தெரிவே இல்லாமல், சர்வாதிகார அதிபதிகளுக்கு அடிமைத்தனத்துக்குட்பட்டிருக்க விரும்புகிறதில்லை.
2 எனினும், நீங்களும் உங்களோடுகூட மற்றவர்களும் உண்மையான சுயாதீனத்திலிருந்து நன்மையடையும் ஓர் உலகத்தை நீங்கள் விரும்புவீர்களல்லவா? எல்லாருடைய வாழ்க்கையும் மிக முழுதளவான பண்பாட்டு தெரிவிப்பை உடையதாயிருக்கும்படி சுயாதீனம் பாதுகாக்கப்படும் ஓர் உலகத்தை நீங்கள் விரும்புவீர்களல்லவா? மேலும், கூடுமானால், பயம், குற்றச்செயல், பசி, வறுமை, தூய்மைக்கேடு, நோய், மற்றும் போர் ஆகியவற்றிலிருந்து விடுதலையான ஓர் உலகத்தையும் நீங்கள் விரும்புவீர்களல்லவா? நிச்சயமாகவே இத்தகைய சுயாதீனங்கள் மிக அதிகமாய் விரும்பத்தக்கவை.
3. நாம் ஏன் சுயாதீனத்தை உயர்வாய் மதிக்கிறோம்?
3 சுயாதீனத்தைப்பற்றி மனிதர் ஏன் அவ்வளவு உறுதிவாய்ந்த முறையில் உணருகின்றனர்? பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “ஆண்டவரின் [யெகோவாவின், NW] ஆவி எங்கேயோ அங்கே சுயாதீனமுண்டு.” (2 கொரிந்தயர் 3:17, தி.மொ.) ஆகவே யெகோவா சுயாதீனக் கடவுள். அவர் நம்மை அவருடைய ‘சாயலிலும் ரூபத்தின்படியும்’ படைத்ததனால், நாம் சுயாதீனத்தை மதித்துணர்ந்து அதிலிருந்து நன்மையடையக்கூடும்படி தன்விருப்பத் தேர்வு சுயாதீனத்தை அளித்தார்.—ஆதியாகமம் 1:26.
சுயாதீனம் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டது
4, 5. சரித்திரம் முழுவதிலும் எவ்வாறு சுயாதீனம் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
4 மற்றவர்கள் தங்கள் தெரிவு சுயாதீனத்தைத் தவறான முறையில் பயன்படுத்தினதால் லட்சக்கணக்கான ஆட்கள் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அல்லது கொல்லப்பட்டது சரித்திர முழுவதிலும் நடந்திருக்கிறது. ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்னால், “எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள். அவர்கள் ஜீவனும் அவர்களுக்குக் கசந்து போகும்படி அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.” (யாத்திராகமம் 1:13, 14) பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில், ஏதன்ஸிலும் மற்றும் இரண்டு கிரேக்க நகரங்களிலும் இருந்த அடிமைகள் சுயாதீன ஜனங்களை 4-க்கு 1 அதிகம் என்ற விகித எண்ணிக்கையில் மிகைப்பட்டிருந்தனரென தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா கூறுகிறது. “தொடக்கத்தில் ரோமில் அடிமைக்கு எந்த உரிமைகளும் இல்லை. மிகச் சிறிய குற்றத்துக்குங்கூட அவனைக் கொன்றுவிடலாம்,” என்றும் இந்தத் தகவல் ஊற்றுமூலம் கூறுகிறது. காம்ப்டன்ஸ் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ரோமில் அடிமை உழைப்பே அந்த அரசாங்கத்தின் ஆதாரமாயிருந்தது. . . . வயல்களில் இந்த அடிமைகள் விலங்கிடப்பட்டு வேலைசெய்தனர். இரவில் அவர்கள் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்டு பெரிய சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டனர், இவை நிலத்தின்கீழ் பாதியளவு புதைந்திருந்தன.” அந்த அடிமைகள் பலர் ஒரு காலத்தில் சுயாதீனராய் இருந்ததனால், அவர்களுடைய முறிந்த வாழ்க்கையின் மனக்கசப்பு எவ்வாறிருந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்!
5 நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டலம் கொடுங்கோன்மையான ஓர் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது. தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு கூறுகிறது: “1500-லிருந்து 1800 வரையான ஆண்டுகளில், ஐரோப்பியர் ஏறக்குறைய 1 கோடி கறுப்பு அடிமைகளை ஆப்பிரிக்காவிலிருந்து மேற்குக் கோளார்த்தத்துக்குக் கப்பலில் அனுப்பினர்.” இந்த 20-ம் நூற்றாண்டில் அரசாங்க செயற்திட்ட காரியமாக, லட்சக்கணக்கான கைதிகள் நாஜி கான்சன்ட்ரேஷன் முகாம்களில் சாகும்படி கடும் உழைப்புக்குட்படுத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இதற்குப் பலியானவர்களில் யெகோவாவின் சாட்சிகள் பலர் அடங்கியிருந்தனர், இவர்கள் அந்தக் கொலைபாதக நாஜி ஆட்சிமுறையை ஆதரிக்க மறுத்ததால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பொய் மதத்துக்கு அடிமைப்பட்டிருப்பது
6. பூர்வ கானானில் எவ்வாறு பொய்மதம் ஜனங்களை அடிமைத்தனத்துக்கு உட்படுத்தினது?
6 பொய் மதத்தைக் கடைப்பிடிப்பதன் விளைவாக உண்டாகும் அடிமைத்தனமும் உண்டு. உதாரணமாக, பூர்வ கானானில், பிள்ளைகளை மோளேகுக்குப் பலியிட்டார்கள். இந்தப் பொய்க் கடவுளின் மிகப் பெரிய சிலைக்குள் ஒரு நெருப்புச் சூளை கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்ததென சொல்லப்படுகிறது. உயிருடன் பிள்ளைகள் இந்தச் சிலையின் நீட்டிய புயங்களுக்குள் எறியப்பட்டனர், அவற்றினூடே கீழிருந்த நெருப்புக்குள் விழுந்தனர். இஸ்ரவேலரில் சிலருங்கூட இந்தப் பொய் வணக்கத்தில் ஈடுபட்டனர். ‘அவர்கள் மேளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணினார்கள், இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று தாம் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது தம் மனதில் தோன்றினதுமில்லை,’ என்று கடவுள் சொல்கிறார். (எரேமியா 32:35) மோளேகு தன்னை வணங்கினவர்களுக்கு என்ன நன்மையைக் கொண்டுவந்தான்? அந்தக் கானானிய தேசத்தாரும் மோளேகுவின் வணக்கமும் இன்று எங்கே? அவர்கள் எல்லாரும் ஒழிந்துபோய்விட்டனர். அது பொய் வணக்கம், சத்தியங்களில் அல்ல பொய்களில் ஆதாரங்கொண்ட வணக்கம்.—ஏசாயா 60:12.
7. என்ன பயங்கரமான பழக்கம் அஸ்டெக் மதத்தின் பாகமாயிருந்தது?
7 நூற்றாண்டுகளுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில், அஸ்டெக்குகள் பொய் மதத்துக்கு அடிமைப்பட்டிருந்தனர். தனி மனிதருக்குரிய தெய்வங்கள் இருந்தன, இயற்கை சக்திகள் கடவுட்களாக வணங்கப்பட்டன, அனுதின வாழ்க்கையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அதனதன் கடவுளைக் கொண்டிருந்தது, தாவரங்கள் அவற்றின் கடவுட்களைக் கொண்டிருந்தன, தற்கொலைகளுங்கூட ஒரு கடவுளை உடையனவாயிருந்தன. அமெரிக்காக்களின் பூர்வ சூரிய ராஜ்யங்கள் என்ற ஆங்கில புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: “அஸ்டெக் மெக்ஸிக்கோவின் அரசாங்கம், நீடித்திருக்கவும், இவ்வாறு காணக்கூடாத வல்லமைகளுக்குக் கொடுக்கக்கூடிய அத்தனை பல மனித இருதயங்களையும் கொடுத்து அவற்றைச் சாந்தப்படுத்தவும் கூடியதாயிருக்கும்படி மேலிருந்து கீழ் வரையாக ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டது. இரத்தமே அந்தத் தெய்வங்களின் பானம். அந்தத் தெய்வங்களுக்குப் பலியாகச் செலுத்துவதற்குத் தகுந்த கைதி பலிகளை அடைவதற்கு இடைவிடாது சிறு போர்கள் நடந்துகொண்டிருந்தன.” 1486-ல் ஒரு பெரிய கூர்நுனிக் கோபுரக் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, பலிசெலுத்தப்படும்படி ஆயிரக்கணக்கான ஆட்கள் “பலிக்குரிய கல்லின்மீது கைகால் பரப்பி மல்லாக்கப் படுக்கவைக்கப்படுவதற்குக் காத்துக்கொண்டு வரிசைவரிசையாக நிற்கும்படி செய்யப்பட்டனர். இவர்களுடைய இருதயங்கள் வெட்டியெடுக்கப்பட்டு சூரியனுக்குச் சிறிது நேரம் ஏந்தப்பட்டன,” சூரியக் கடவுளைச் சாந்தப்படுத்துவதற்கு அவ்வாறு செய்யப்பட்டது. தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு கூறுகிறது: “வணங்குகிறவர்கள் சில சமயங்களில் பலிக்கு ஆளானவனுடைய உடலின் பாகங்களைச் சாப்பிட்டனர்.” எனினும், அந்தப் பழக்கங்கள் அந்த அஸ்டெக் பேரரசையோ அதன் பொய் மதத்தையோ பாதுகாக்கவில்லை.
8. சுற்றிக் காட்டினவர், அஸ்டெக் ஜனங்களுக்குள் நடந்ததைப் பார்க்கிலும் மிகப் பேரளவான ஒரு தற்கால படுகொலையைப்பற்றி என்ன சொன்னார்?
8 பார்வையாளர்கள் ஒரு பொருட்காட்சி சாலையில் சுற்றி வந்தனர், அங்கே ஒரு காட்சி-பெட்டி அஸ்டெக் பூஜாரிகள் ஒரு வாலிபனின் இருதயத்தை வெட்டியெடுக்கும் காட்சியைக் காட்டினது. சுற்றிக் காட்டினவர் அந்தக் காட்சியை விளக்கினபோது, சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தொகுதியில் சிலர் திடுக்குற்று மூச்சுத் திணறினர். அப்பொழுது சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தவர் பின்வருமாறு கூறினார்: “வாலிபரை புறமதக் கடவுட்களுக்குப் பலிசெலுத்தும் இந்த அஸ்டெக் பழக்கம் உங்களை மனசங்கடமடைய செய்வதை நான் காண்கிறேன். எனினும், இந்த 20-ம் நூற்றாண்டில், லட்சக்கணக்கான வாலிபர்கள் போர்க் கடவுளுக்குப் பலிசெலுத்தப்பட்டிருக்கின்றனர். இது எவ்வகையிலாவது மேம்பட்டதா?” போரில், ஒரே மதத்தைச் சேர்ந்த ஆட்கள் ஒருவருக்கொருவர் எதிர்சார்பிலிருந்து ஒருவரையொருவர் கொன்றுகொண்டிருக்கிறபோதிலும், எல்லா தேசங்களின் மதத் தலைவர்களும் வெற்றிக்காக ஜெபித்து சேனைகளை ஆசீர்வதிக்கின்றனரென்பது உண்மை நிகழ்ச்சியே.—1 யோவான் 3:10-12; 4:8, 20, 21; 5:3.
9. எந்தப் பழக்கம், சரித்திரத்தில் நடந்த வேறு எதையும் பார்க்கிலும் அதிக இளம் உயிர்களைக் கொல்கிறது?
9 பிறவாத குழந்தைகளைக் கருச்சிதைவுசெய்து கொல்வது, இளைஞரை மோளேகுக்கு, அஸ்டெக் கடவுட்களுக்கு, அல்லது போருக்குப் பலிசெலுத்துவதையும் மிஞ்சிவிட்டிருக்கிறது, உலகமுழுவதிலும் ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 4 அல்லது 5 கோடி கருச்சிதைவுகள் செய்யப்படுகின்றன. கடந்த இந்த மூன்று ஆண்டுகளில்தானே கருச்சிதைவு செய்யப்பட்ட எண்ணிக்கை, இந்த நூற்றாண்டின் எல்லா போர்களிலும் கொல்லப்பட்ட பத்துக்கோடி ஆட்களைப் பார்க்கிலும் மிகுந்துள்ளது. நாஜி ஆட்சியின் 12 ஆண்டுகளில் கொலைசெய்யப்பட்ட எல்லா ஆட்களைப் பார்க்கிலும், பல மடங்குகள் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டிலும் கருச்சிதைவு செய்யப்படுகின்றனர். மோளேகுக்கு அல்லது அஸ்டெக் கடவுட்களுக்குப் பலிசெலுத்தப்பட்ட அந்த எல்லாரையும் பார்க்கிலும் பல ஆயிரக்கணக்கான மடங்குகள் மிகைப்பட்ட குழந்தைகள் சமீப பத்தாண்டுகளில் கருச்சிதைவு செய்யப்பட்டனர். எனினும், கருச்சிதைவு செய்துகொள்வோரில் (பெரும்பான்மையர் அல்லாவிடினும்) பலர், அல்லது அவற்றை நடப்பிக்கிறவர்கள், ஒரு மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்கின்றனர்.
10. ஆட்களைப் பொய்மதத்துக்கு அடிமைப்படுத்தும் மற்றொரு வழி என்ன?
10 பொய்மதம் மற்ற வழிகளிலும் ஆட்களை அடிமைப்படுத்துகிறது. உதாரணமாக, மரித்தோர், ஆவி உலகத்தில் உயிருடனிருக்கிறார்களென பலர் நம்புகின்றனர். இத்தகைய பொய் நம்பிக்கையின் ஒரு விளைவானது, மரித்த மூதாதைகளிடமிருந்து வரும் நன்மைகளென்று எண்ணிக்கொள்வதை அடைய அவர்களுக்குப் பயப்படுவதும் அவர்களை வணங்குவதுமாகும். இது, மரித்தோரைச் சாந்தப்படுத்த உயிருள்ளோருக்கு உதவி செய்பவர்களென கருதப்பட்டு ஆட்கள் உதவி நாடி செல்லும், பில்லி சூனிய மருத்துவர்களுக்கும், ஆவி மத்தியஸ்தர்களுக்கும், மத குருமார்களுக்கும் அவர்களை அடிமைப்படுத்துகின்றன. சரியாகவே இந்தக் கேள்வி கேட்கப்படலாம், இத்தகைய அடிமைத்தனத்திலிருந்து வெளியேற ஏதாவது வழி உண்டா?—உபாகமம் 18:10-12; பிரசங்கி 9:5, 10.
[பக்கம் 4, 5-ன் படம்]
சரித்திரம் முழுவதிலும் சிலர் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்குத் தங்கள் சுயாதீனத் தெரிவைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்