திறம்பட்ட வேலையாட்கள் கடவுளுடைய வார்த்தையை சரியாக பயன்படுத்துகின்றனர்
1 கிறிஸ்தவ ஊழியர்கள் சரியாகவே “தேவனுடைய உடன் வேலையாட்கள்” என்றழைக்கப்படுகின்றனர். (1 கொரி. 3:9) வேலையாட்களாக “சத்திய வசனத்தை சீராக” கையாளுவதற்கான திறமையை விருத்தி செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்.—2 தீமோ. 2:15.
2 கிறிஸ்தவ ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருப்பதற்குரிய உதவியை நமக்கு கொடுப்பதற்காக, ஆங்கிலத்தில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் அநேக தனித்தன்மையான அம்சங்களை சங்கம் சேர்த்திருக்கிறது. நீங்கள் அவற்றை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? உங்களுடைய வெளி ஊழியத்திலும் உங்களுடைய தனிப்பட்ட படிப்பிலும் நீங்கள் இந்த அம்சங்களை பயன்படுத்துகிறீர்களா?
பல்வேறு வகையில் பயன்படும் ஓர் ஏற்பாடு
3 1950-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் வெளியிடப்பட்டபோது மாற்று மேற்கோள்கள், அதிலுள்ள அடிக்குறிப்புகள், பிற்சேர்க்கை மற்றும் தொடர் மேற்கோள்கள் நமது ஊழியத்தில் மற்றும் கூட்டங்களுக்காக தயார் செய்கையில், பொதுவான தனிப்பட்ட படிப்புகளில், அதிக உதவியாக இருப்பதை நாம் கண்டோம். பின்பு 1984-ல் புதிய உலக மொழிபெயர்ப்பின் ஒத்துவாக்கிய பைபிளை பெற்றுக்கொண்டபோது நாம் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தோம்! கடவுளுடைய வார்த்தையை சரியாக பயன்படுத்தும் திறம்பட்ட வேலையாட்களாவதற்கு நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு உதவிசெய்ய என்னே ஓர் உயர்மதிப்புள்ள ஏற்பாடு! நமக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பலமான ஆவிக்குரிய பண்புகளை வளர்த்துருவாக்குவதற்கு முன்பைவிட நாம் இப்பொழுது மேம்பட்ட வகையில் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம்.—மத். 7:24; 1 தீமோ. 4:16; எபி. 5:14.
4 ஊழியத்தில் ஈடுபடும்போது, நீங்கள் ஒருவேளை உண்மை மனதுள்ள ஒரு கத்தோலிக்கனை சந்திக்க நேரிட்டு, அவன் பேதுருவே அந்தக் கல் என்றும் அதன் மீதே கத்தோலிக்க சர்ச் கட்டப்பட்டிருக்கிறது என்றும் சொல்லி, மத்தேயு 16:18-ஐ அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டலாம். அப்படி சம்பவிக்குமானால், மாற்று மேற்கோள்களைக் கொண்ட உங்கள் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் நீங்கள் அந்த வேதவசனத்தை எடுத்துப் பார்க்கலாம். அங்கே “கற்பாறை” என்ற வார்த்தையின்பேரில் ஐந்து வேதவசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை காண்பீர்கள். இந்த வேத வசனங்கள் பேதுரு அல்ல, கிறிஸ்துவே சபையின் அஸ்திபாரம் என்று காட்டுகின்றன. இதே வேதவசனத்தை புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிளில் எடுத்துப் பார்ப்பீர்களானால், “கற்பாறை” என்ற வார்த்தையின் பேரில் அடிக்குறிப்பில் கூடுதலான தகவலை நீங்கள் காண்பீர்கள். மூல கிரேக்க மொழியில் அதன் அர்த்தம் விளக்கப்பட்டிருக்கிறது.
5 “பைபிள் கலந்தாலோசிப்புக்குப் பேச்சுப் பொருள்கள்” என்ற தலைப்பைக் கொண்ட மற்றொரு அம்சமும் வெளி ஊழியத்துக்கு உதவியாக நிரூபித்திருக்கிறது. அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியங்களில் வேலை செய்யும்போது நம் ராஜ்ய ஊழியம் பிரதியில் கொடுக்கப்பட்டிருப்பவற்றிலிருந்து வித்தியாசப்பட்ட ஒரு தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பக்கூடும். “பூமி,” “ராஜ்யம்,” “கடைசி நாட்கள்” போன்ற தலைப்புகளின் கீழ் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அல்லது ஒரு மறுசந்திப்பின்போது வேதப்பூர்வ கலந்தாலோசிப்பை செய்கையில் பயன்படுத்தப்படக்கூடிய வேத வசனங்களை நீங்கள் காண்பீர்கள்.
நினைப்பூட்டும் உதவிகள்
6 ஒரு பைபிள் உரையாடல் நடைபெறும் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட வேதவசனம் எங்கே இருக்கிறதென்று உங்களுக்கு ஞாபகம் இல்லையென்றால் உங்கள் பைபிளின் கடைசி பக்கங்களில் பைபிள் வார்த்தைகள் அடங்கிய “அகரவரிசை அட்டவணை” கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தேவைப்பட்ட உதவியை பெறலாம். இந்த மதிப்புள்ள அம்சத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
7 பக்கம் 5-ல் காணப்படும் முகவுரைக் குறிப்பு இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பு புலமை பெற்றவரின் வேலைப்பாடு என்பதை காண்பிப்பதற்கு நம்பவைக்கும் ஆதாரச் சான்றுகளை கொடுக்கிறது. அதிலுள்ள பிற்சேர்க்கை தெய்வீக பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது ஏன் பொருத்தமானது என்பதற்குத் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கிறது. மேலும் அது “கெஹென்னா,” “ஹேடீஸ்,” “ஷியோல்” மற்றும் “ஆத்துமா” எதைக் குறிக்கிறது என்பதை வேதப்பூர்வமாக நிரூபிக்கிறது. கூடுதலாக பக்கங்கள் 1546-7-ல் உள்ள “பைபிள் புத்தகங்களின் பெயர் பட்டியலை” எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புத்தகத்தின் பேரிலும், அதை எழுதினது யார், எங்கே எழுதப்பட்டது, எப்பொழுது எழுதப்பட்டது, எந்தக் காலப்பகுதியைப் பற்றி அதில் அடங்கியுள்ளது என்ற விவரங்களைக் கண்டுபிடிக்கலாம்.
8 மெய்யாகவே, “எந்த நற்கிரியையும் செய்ய [முற்றிலும், NW] தகுதியுள்ளவனாக” இருப்பதற்கு எது தேவையோ அதை யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார். (2 தீமோ. 3:17) நாம் அளிக்கும் பைபிள் பிரசுரத்தோடு புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு நியமிக்கப்பட்ட வேலையை நாம் பயன்தரும் முறையில் செய்யலாம். (லூக். 6:47, 48) கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தி திறம்பட்ட வேலையாளனாக நாம் நம்மை நிரூபிக்கும்போது எஜமானர் பின்வருமாறு சொல்வதை நாம் திடநம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்: “நன்றாகச் செய்தாய்”!—மத். 25:21, NW.