சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
மார்ச் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 180 (100)
10 நிமி: சபை அறிவிப்புகள். மே மாதத்தில் பயனியர் சேவையை துவங்குவதற்கு இப்பொழுதே திட்டமிடுங்கள். ஏப்ரல், மே மாதங்களுக்குத் தேவைப்படும் கூடுதலான பத்திரிகைகளை ஆர்டர் செய்யுங்கள். என்ன பழைய புத்தகங்கள் கையிருப்பிலிருக்கின்றன என்று சபைக்குத் தெரியப்படுத்துங்கள்.
20 நிமி: “திறம்பட்ட வேலையாட்கள் கடவுளுடைய வார்த்தையை சரியாக பயன்படுத்துகின்றனர்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நேரம் அனுமதிக்குமானால் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்களை வாசியுங்கள். நாம் ஊழியர்கள் என்பதை மிக முக்கியமாக வலியுறுத்துங்கள். பைபிளை உபயோகிப்பதில் திறமைவாய்ந்தவர்களாக இருங்கள். வெறும் இலக்கியங்களை அளிப்பதோடு திருப்தியடைந்துவிடாதீர்கள். பள்ளிக் கண்காணி அல்லது ஊழியக் கண்காணி புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் (1984 பதிப்பு) தனி அம்சங்களை அறிந்துகொள்ள புதிய பிரஸ்தாபிக்கு உதவுவதை நடித்துக் காட்டவும்.
15 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பரால் பேச்சு. இந்த அறிவுரையை சபையின் தேவைக்கு ஏற்றார்போல் சாதுரியமாக ஆனால் திட்டவட்டமாக பொருத்துங்கள். சபையாரை கலந்தாலோசிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
பாட்டு 190 (107), முடிவு ஜெபம்.
மார்ச் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 85 (44)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த வாரக் கடைசியில் அனைவரும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்தவும். சபை பிராந்தியத்தில் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தக்கூடிய இந்த மாத பிரதிகளிலுள்ள கட்டுரைகளை விமர்சிக்கவும். கணக்கு அறிக்கை. பிப்ரவரி மாதத்தின்போது சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடையைப் பற்றி அறிவிக்கவும். சபையின் தேவைகளுக்கு ஆதரவாக சகோதரர்கள் கொடுக்கும் நன்கொடைக்காக பாராட்டுதல் தெரிவிக்கவும்.
15 நிமி: “தனிச்சிறப்பு பத்திரிகைகள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன.” பேச்சும் சில கேள்விகளுடன் கட்டுரையின் பேரில் கலந்தாலோசிப்பும். தெரு ஊழியம், சந்தர்ப்ப சாட்சி அல்லது பத்திரிகை மார்க்கம் ஆகியவற்றில் பிரஸ்தாபிகள் பத்திரிகை அளித்துள்ள ஒருசில உள்ளூர் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளவும்.
20 நிமி: பத்திரிகை அளிப்பிற்கு நடைமுறை ஆலோசனைகள். பின்வரும் ஆலோசனைகளைக் கலந்தாலோசித்து அவற்றைப் பொருத்தினதன் காரணமாக பிரஸ்தாபிகள் அனுபவித்திருக்கும் வெற்றியைப் பற்றி குறிப்பு சொல்லும்படி அழைக்கவும்: (1) பத்திரிகையை வாசித்து கட்டுரைகளை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (2) உங்கள் பிராந்திய மக்களுக்கு விசேஷ ஆர்வமுள்ள கட்டுரைகளை தேர்ந்தெடுங்கள். (3) பத்திரிகைகளோடு மாலை வெளி ஊழியத்தை செய்ய முயலுங்கள். (4) ஒரு பொருளின் பேரில் மட்டுமே பேசுங்கள், ஒரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டுங்கள், மற்றொரு பத்திரிகையை துணைப்பத்திரிகையாக அளியுங்கள். (5) நிதானமாகவும் தெளிவாகவும் சிநேகப் பான்மையான தொனியில் பேசுங்கள். சபை பிராந்தியத்தில் பத்திரிகை அளிக்க பிரயாசப்படுகையில் இந்த நடைமுறை ஆலோசனைகளை பயன்படுத்தி பார்க்க அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 6 (4), முடிவு ஜெபம்.
மார்ச் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 207 (112)
8 நிமி: சபை அறிவிப்புகள். வாரக் கடைசி வெளி ஊழிய ஏற்பாடுகளை சேர்த்துக்கொள்ளவும். தேவராஜ்ய செய்திகள்.
7 நிமி: ஒழுங்கான பைபிள் படிப்பின் பயன்கள். பேச்சு. குடும்ப அங்கத்தினர்களோடு ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பை நடத்தும்படி குடும்பத்தலைவர்களை யெகோவாவின் அமைப்பு பல பத்தாண்டுகளாக உற்சாகப்படுத்தி வந்திருக்கிறது. இது நடத்தப்படும் இடங்களில் அநேக நன்மைகள் விளைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட படிப்பு அன்பு மற்றும் சமாதானத்தின் ஆவியை குடும்ப வட்டாரத்தில் உண்டுபண்ணியிருக்கிறது. பிள்ளைகள் யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியராக ஆகும் நிலைக்கு முன்னேறியிருக்கின்றனர். தங்கள் சபையில் ஒரு சீரான செல்வாக்கை செலுத்தியிருக்கின்றனர், மேலும் பெரும்பாலும் முழுநேர சேவையில் ஈடுப்பட்டிருக்கின்றனர். இது கிறிஸ்தவ பெற்றோர்களுக்கும் அவர்கள் செய்திருக்கும் முன்னேற்றத்தை கவனித்த மற்றவர்களுக்கும் பெருத்த மகிழ்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது.
17 நிமி: இளைஞரின் இருதயத்தை எட்டுதல். விசேஷமாக இளைஞருக்கென்று திட்டமிட்டமைக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை பிரசுரங்களிலிருந்து மூப்பர் சுருக்கமாக கலந்தாலோசிக்கிறார். ஒழுங்கான குடும்ப படிப்போடுகூட சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஆவிக்குரிய உரையாடல்களிலிருந்து குடும்ப அங்கத்தினர் நன்மை அடைகின்றனர். பிள்ளைகளுடன் ஒரு தந்தை கொண்டிருக்கக்கூடிய அனலான உரையாடலை நடித்துக் காட்டுங்கள். அவர்களுடைய உரையாடல் இயற்கையான கருத்து பரிமாற்றமாக இருக்கிறது. கேள்வி-பதில் நிகழ்ச்சி அல்ல. குடும்பத்திலுள்ள ஒரு பிள்ளை தான் அண்டை வீட்டு பிள்ளையுடன் பந்து விளையாடலாமா என்று கேட்கிறது. இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற ஆங்கில புத்தகம் பக்கம் 64-7-ல் உள்ள தகவலை விருத்திச் செய்யலாம். பிள்ளை புரிந்துகொண்டதா, உட்பட்டிருக்கும் வேத நியமங்களை ஒத்துக்கொண்டதா என்பதை அறிந்துகொள்ள பெற்றோர் ஆராயும் கேள்விகளைக் கேட்கின்றனர். நெருக்கமான நண்பர் என்பது ஒரே வயதினராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை காட்டுங்கள். இந்தப் புத்தகத்தின் பகுதிகளை ஏற்கெனவே படித்திருக்கும் இளைஞரை தேர்ந்தெடுங்கள், அதைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களைக் கேளுங்கள். இந்தப் பொருளடக்கம் ஏன் பயனுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும்படி சொல்லுங்கள். புத்தகத்தைப் படிக்கும்படி இளைஞரை உற்சாகப்படுத்துங்கள். குடும்பப் படிப்பில் பொருத்தமான குறிப்புகளை சேர்த்துக்கொள்வதற்கு பெற்றோர் அந்தப் புத்தகத்தின் பொருளடக்கத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள்.
13 நிமி: சத்தியத்தில் பிள்ளைகளை வளர்த்ததில் அல்லது வளர்ப்பதில் வெற்றியைக் கண்டிருக்கும் பெற்றோரை மூப்பர் பேட்டிக்காணுகிறார். பெற்றுக்கொள்ளப்பட்ட மகிழ்ச்சியையும் ஒழுங்கான அர்த்தமுள்ள குடும்பப் படிப்பையும் கலந்தாலோசிப்புகளையும் கொண்டிருப்பதற்கு எது உதவியாக இருந்ததாக அவர்கள் கண்டார்கள் என்பதையும் வலியுறுத்தவும். பெற்றோர்கள் ஒழுங்கான ஒரு குடும்ப படிப்பை நடத்தவும் மற்றும் இளைஞர் அத்துடன் ஒத்துழைக்கவும் இருதயப்பூர்வ அழைப்பைக் கொடுங்கள். சூழ்நிலைமைகள் எப்பொழுதுமே சாதகமாயிராது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்கவேண்டும். அப்படி செய்வதால் ஜீவனுக்குப் போகும் பாதையில் நிலைத்திருக்க அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளக்கூடும்.—1 தீமோ. 4:16.
பாட்டு 123 (63), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 172 (92)
5 நிமி: சபை அறிவிப்புகள். தப்பிப்பிழைத்தல் புத்தகத்தின் தேவைப்படும் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவும் இந்த வாரக் கடைசியில் வெளி ஊழியத்தில் அதை அளிப்பதில் முழு பங்கை கொண்டிருக்கவும் உற்சாகப்படுத்துங்கள்.
22 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—உறுதியான நம்பிக்கையுடன்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
18 நிமி: “பயனியர் சேவை செய்வதன் மூலம் யெகோவாவின் மீது நம்பிக்கையை வெளிக்காட்டுதல்.” ஊழியக்கண்காணியின் மூலம் அனலான உற்சாகமூட்டும் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஓரிரண்டு பயனியர்களைப் பேட்டிகாணவும். சில பிரச்னைகளை மேற்கொண்டதும் அடைந்த மகிழ்ச்சியை சிறப்பித்துக் காட்டலாம். பயனியர்களுக்கு நடைமுறையான உதவி கொடுப்பதற்கு உங்கள் சபையில் என்ன செய்யப்படுகிறது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
பாட்டு 14 (6), முடிவு ஜெபம்.