சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
மே 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 87 (47)
8 நிமி: சபை அறிவிப்புகள். விசேஷ பேச்சுக்கும் ஞாபகார்த்த தினத்திற்கும் ஆஜரானவர்களுக்குத் தொடர்ந்து உதவிசெய்ய வேண்டிய அவசியத்தை நினைப்பூட்டுங்கள். அவர்கள் ஆவிக்குரிய முன்னேற்றமடைய உதவ வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர்களைச் சந்திக்கிறோமா?
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தாக்களை தைரியமாக அளிப்பதன் மூலம்.” கேள்வி-பதில். பாரா 4-க்கு பின்பு, புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளைப் பயன்படுத்தி நடிப்பைக் காட்டுங்கள். காவற்கோபுரத்தில் சமாதானம் பேரில் தலையங்க கட்டுரைகளிலுள்ள குறிப்புகளைப் பயன்படுத்துங்கள். அளிப்பு செய்பவர் சந்தாவை அளிக்கையில் நம்பிக்கையான மனநிலையுள்ளவராக இருக்கவேண்டும்.
17 நிமி: “புதிய வெளியீடுகள் தேவ பக்தியினிடமாக நம்மை பயிற்றுவிக்க உதவுகின்றன.” எல்லாரும் புதிய பிரசுரங்களுடன் நன்கு அறிமுகமாவதற்கு உற்சாகமூட்டும் பேச்சு. இந்தப் பிரசுரங்களை உபயோகித்தவர்களிடமிருந்து ஓரிரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போற்றுதல் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 181 (10), முடிவு ஜெபம்.
மே 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 148 (50)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். 30 முதல் 60 வினாடிகளில், இம்மாதப் பத்திரிகைகளை விநியோகிப்பதெப்படி என்று இரண்டு நடிப்புகளால் காட்டவும். ஏப்ரல் மாத வெளி ஊழிய அறிக்கையைக் குறித்து சபையாருக்குத் தெரிவிக்கவும். சாதிக்கப்பட்ட சிறந்த வேலைக்காக பாராட்டுதல் தெரிவியுங்கள்.
18 நிமி: “இயேசு கிறிஸ்துவை கனப்படுத்துங்கள்—அவர் நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
17 நிமி: நம்முடைய வாழ்க்கையில் நற்செய்தியின் மதிப்பு. பேச்சு. ஜனவரி 1, 1990 காவற்கோபுரம் (ஆங்கிலம்), பக்கங்கள் 4-6-ல் தகவல்களைக் காணலாம். (இந்திய மொழிகளில்: “யெகோவாவில் நம்பிக்கையை வளருங்கள், அவருடைய வார்த்தையை ஊக்கமாய் படிப்பதன் மூலம்.” நவம்பர் 1, 1989 காவற்கோபுரம்) தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவிக்க நற்செய்தி எவ்வாறு தங்களுக்கு உதவிசெய்தது என்பதை சபையார் முன்கூட்டியே தயாரித்து பதில் கூறும்படி ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 193 (103), முடிவு ஜெபம்.
மே 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 23 (40)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
20 நிமி: “நற்செய்தியை தைரியமாக அறிவியுங்கள்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நேரம் அனுமதிக்குமானால் பாராக்களை வாசியுங்கள்.
15 நிமி: பைபிளின் கருத்து. பேச்சும் நடிப்பும். ஜூலை 8, 1985 விழித்தெழு! இதழ் முதற்கொண்டு தோன்றும் “பைபிளின் கருத்து” என்ற அம்சம் பத்திரிகையின் அக்கறைக்குரியதாக இருந்திருக்கிறது. ஒருவர் பைபிளை நம்பினாலும்சரி நம்பாவிட்டாலும்சரி, விசாரித்தரிய மனமுள்ள ஆட்களுக்காகவே இங்கு கலந்தாலோசிக்கப்படும் பைபிளின் கருத்துப் பற்றிய இந்தப் பொருளடக்கங்கள் திட்டமிட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சத்தை நாம் வெளி ஊழியத்தில் பயன்படுத்துகிறோமா? உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமான இந்தக் கட்டுரைகளின் பலவற்றை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். ஊழியத்தில் இந்தக் கட்டுரை எவ்வாறு சிறப்பித்துக் காட்டப்படலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். (இந்திய மொழிகளில்: மாற்றீடாக “இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்” பயன்படுத்தப்படலாம். பிராந்தியத்துக்குப் பொருத்தமான கட்டுரையை தேர்ந்தெடுங்கள்.)
பாட்டு 92 (51), முடிவு ஜெபம்.
மே 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 106 (55)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். பேச்சாளர் சபையாருடன் மே 1 காவற்கோபுரம் இதழைச் சிறப்பித்துக் காட்டுகையில் என்ன சொல்லப்படலாம் என்பதையும் கலந்தாலோசிக்க வேண்டும். பலமாக உறுதியளிக்கக்கூடிய ஓர் ஆட்சியாளர் மூலமாக மட்டுமே உண்மையான சமாதானம் வரும் என்று ஒருவர் சொல்லலாம். கிறிஸ்துவினுடைய தலைமையின் கீழிருக்கும் கடளுடைய ராஜ்யமே மிகுதியான சமாதானத்தைக் கொண்டுவரும் என்று சங்கீதம் 72:7 சொல்லுகிறது. நீதியுள்ள அரசராக அவர் துன்மார்க்கத்தை ஒழித்து, மரித்தவர்களுக்கும்கூட உயிர்த்தெழுதலை நிச்சயப்படுத்தக்கூடும். (சங். 37:10, 11) பத்திரிகை நாளில் அல்லது சந்தா அளிக்கையில் பயன்படுத்தப்படக்கூடிய திட்டவட்டமான குறிப்புகளை மே 1, இதழிலிருந்து சுட்டிக்காட்டுங்கள்.
25 நிமி: “ஞானமுள்ளவர்களாயிருங்கள்—கற்றுக்கொள்ளும் காரியங்களைக் கடைப்பிடியுங்கள்.” இந்தக் கட்டுரையை சபையாருடன் ஒரு மூப்பர் கலந்தாலோசிக்கிறார். பிரசுரங்களைக் கவனமாக படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள். அப்பொழுது கற்றுக்கொண்டவைகளை நினைவில் வைக்கவும், கடைப்பிடிக்கவும் கூடும். சபைக்குப் பொருந்தக்கூடிய சமீப கால பிரசுரங்களிலிருந்து நடைமுறை குறிப்புகளை எடுத்துக் கூறுங்கள். உதாரணமாக, இளைஞர் பள்ளியிலுள்ள சூழ்நிலைமைகளை எப்படிச் சம்மாளிக்கலாம்; வேலைசெய்யுமிடத்தில் எழும்பும் பிரச்னைகளை எப்படிக் கையாளுவது; சகோதரர்கள் மத்தியில், விவாகத் துணைவர்களுக்கிடையே பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது போன்ற சபை பிராந்தியத்துக்கு அதிக பயனுள்ள தகவலை பயன்படுத்துங்கள்.
10 நிமி: நாம் கற்றுக்கொண்ட காரியங்களைக் கடைப்பிடிப்பதிலிருந்து வரும் ஆசீர்வாதங்கள். தாங்கள் கற்ற காரியங்களை எப்படி பொருத்தி பிரயோகித்தார்கள். அவ்வாறு செய்ததனால் தனி நபர்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள் பற்றிய அனுபவங்களை முன்கூட்டியே தயாரித்தவற்றை கூறும்படி அழைக்கவும். உள்ளூர் அனுபவங்கள் சிறந்தவை. மேலும் தேவைப்படுமானால் 1990 வருடாந்தர புத்தகத்திலுள்ள அனுபங்களைப் பயன்படுத்தலாம்.—பக்கங்கள் 7-9, 43-5, 50-3, 57-8, 64 பார்க்கவும்.
பாட்டு 75 (58), முடிவு ஜெபம்
ஜூன் 4 துவங்கும் வாரம்
பாட்டு 200 (108)
10 நிமி: சபை அறிவிப்புகள். சபையாரால் அளிக்கப்பட்ட சந்தாக்களின் எண்ணிக்கையை அறிவியுங்கள். இந்த மாதத்தின்போது துணைப் பயனியர் செய்பவர்களுக்கு கிடைத்த அனுபவங்களைக் கேளுங்கள்.
10 நிமி: நல்ல ஆவிக்குரிய சமயங்களுக்காக முன்னரே திட்டமிடுதல். வரக்கூடிய மாதங்களுக்காக செய்யப்பட வேண்டிய திட்டங்களையும் விசேஷ மாநாட்டு தினத்தைப் பற்றியும் சபையாரோடு ஊழியக் கண்காணி கலந்தாலோசிக்கிறார். அதிக உஷ்ணமான மாதங்களில் விடுமுறை நாட்களிலிருக்கும் இளைஞர் தங்கள் நடவடிக்கைகளை அதிகரிக்க நேரம் அனுமதிக்கிறது.
25 நிமி: “சகிப்புத் தன்மையோடு கனிக்கொடுத்தல்.” 1990 வருடாந்தர புத்தகத்தின் 253-5 பக்கங்களிலுள்ள தகவலிலிருந்து பேச்சு. (இந்திய மொழிகளில்: “யெகோவாவுக்குச் சாட்சி கொடுப்பதில் சோர்ந்து போகாதிருங்கள்.” ஜனவரி 1, 1990 காவற்கோபுரம்.) சோதனைகள், மற்றும் தொல்லையான சூழ்நிலைமைகள் மத்தியிலும் தைரியமாக சாட்சி கொடுப்பதிலும் கனி கொடுப்பதிலும் உள்ளூர் சபை கொண்டிருக்கும் பங்கிற்காக பிரஸ்தாபிகளுக்கு அனலுடன் பாராட்டுதல் தெரிவியுங்கள்.
பாட்டு 72 (58), முடிவு ஜெபம்.