புதிய மாநாட்டு வெளியீடுகளோடு அறிமுகமாகுங்கள்
1. இரண்டு புதிய வெளியீடுகள், ஒரு புத்தகம் மற்றும் ஒரு புரோஷூரும், செழிப்பான ஆவிக்குரிய உணவு களஞ்சியத்தோடு சேர்க்கப்பட்டிருக்கின்றன. “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய பிரசுரங்கள், சுத்தமான பாஷையை அதிக தெளிவாக நாம் அனைவரும் பேசுவதற்கு உதவிசெய்வதோடு கூட நம் வெளி ஊழியத்தில் ஒரு வல்லமையான விளைவை உடையதாயிருக்கும் என்று நிச்சயமாயிருக்கலாம்.—செப். 3:9.
2. புதிய புரோஷூரை வெளியிடுகையில் மாநாட்டு பேச்சாளர் சொன்னார்: “வெளி ஊழியத்தில்—வீட்டுக்கு வீடு, மறுசந்திப்புகளில் மற்றும் பைபிள் படிப்புகளின் போது. நாம் ஏன் இரத்தம் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்விக்கு விடையளிக்க உங்களுக்கு உதவ, ஒரு புதிய பிரசுரத்தை வெளியீடுவது மகிழ்ச்சியூட்டுகிறது. அது இந்தப் பத்திரிகை அளவான புரோஷூர், இரத்தம் எவ்வாறு உங்கள் ஜீவனை பாதுகாக்கும்?” கவனமாக வாசிப்பதன் மூலம் இந்தப் புரோஷூரிலிருக்கும் முக்கியமான தகவலை உங்களுடைய சொந்தமானதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய சொந்த விசுவாசத்தை பலப்படுத்துவதற்கும், இரத்தத்தின் பேரில் கிறிஸ்தவ நோக்குநிலையை மற்றவர்கள் புரிந்து கொள்ள உதவி செய்வதற்கு தயாராக இருக்கவும் நீங்கள் அவ்வாறு செய்வது முக்கியம் நீங்கள் அவ்வாறு செய்வது முக்கியமானதாயிருக்கிறது.—.15:28, 29
3. புரோஷூரில் இருக்கும் நல்ல ஆதாரப்பூர்வமான தகவல் எந்த மருத்துவருக்கும் உங்கள் நிலைநிற்கையையும், விருப்பங்களையும் விளக்க இன்னுமதிகமாக உங்களுக்கு உதவும். என்றபோதிலும், இந்தப் புதிய புரோஷூர் முக்கியமாக மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அல்ல. இது திட்டவட்டமாக பொது மக்களுக்காக அமைக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது. அதனுடைய இரட்டிப்பான நோக்கம், இந்தக் காலத்தில் நம் உபயோகத்திற்காக அதை எவ்வாறு ஓர் அதிக மதிப்புவாய்ந்த கருவியாக ஆக்குகிறது என்பதை நீங்கள் காணலாம். அதனுடைய ஓரிரண்டு பிரதிளை உங்களோடு வெளி ஊழியத்துக்கு எடுத்துசெல்வது ஆலோசனை கொடுக்கப்படுகிறது. உங்களுடைய தனிப்பட்ட நன்மைக்காகவும், இரத்தத்திற்கு சரியான மரியாதையை மற்றவர்கள் காண்பிப்பதற்கு உதவி செய்யவும் இந்த மதிப்பு வாய்ந்த தகவலை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
ஒரு புதிய புத்தகம்
4. நம் ஊழியத்தில் நமக்கு உதவி செய்ய கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் என்ற புதிய புத்தகத்தின் மதிப்பை சற்று கற்பனை செய்து பாருங்கள். அதை படிப்பது, மற்ற மதங்களையும் அவற்றின் சரித்திரப்பூர்வ பின்னணிகளையும் பற்றி ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதலை நமக்கு கொடுக்கும். கிறிஸ்தவ மண்டல ஜனங்களிடமும் பிரசங்கிக்க அது நம்மை மேலும் தகுதியுள்ளவர்களாக ஆக்க உதவும். இந்த 20-ம் நூற்றாண்டின் போது பெரும் எண்ணிக்கையான ஜனத்தொகை இடத்துக்கு இடம் செல்வதால் வீட்டுக்கு வீடு நாம் பிரசங்கிக்கையில் அநேக வித்தியாசமான மொழிகளையும் மற்றும் மதங்களையும் சார்ந்த ஜனங்களை நாம் காணலாம். இந்த ஜனங்களின் நம்பிக்கைகளோடும் மற்றும் வழக்கங்களோடும் நாம் அறிமுகமற்று இருந்தால் இது ஒரு மெய்யான சவாலை அளிக்கிறது. இப்புதிய புத்தகத்தின் உதவி இருப்பதால் நம் பிராந்தியத்தில் பல்வேறு மத பின்னணிகளை உடைய ஜனங்களை நாம் எதிர்படும்போது நாம் தகுதியற்றவர்கள் என்று உணரவேண்டியதில்லை.
5. இந்தப் புதிய புத்தகத்தின் உள்ள தகவல் கலந்தாலோசிக்கப்பட்ட பொருள்களோடு முழுமையாக அறிமுகமாகியிருக்கும் தனிப்பட்ட ஆட்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டும் மற்றும் விமர்சிக்கப்பட்டும் இருக்கிறது. ஆகையால் இந்தப் புத்தகத்தில் காணப்படும் கூற்றுகளை உபயோகிக்கையில் நாம் அதிகாரத்தோடு பேசலாம். நிச்சயமாகவே இப்பேர்ப்பட்ட தகவலை இந்த நேரத்தில் ஏற்பாடு செய்வது எல்லா தேசங்களிலுமுள்ள ஜனங்களுக்கான யெகோவாவின் பெரிதான அன்பின் மற்றொரு வெளிக்காட்டாகும். இந்தப் புதிய பிரசுரத்தோடு நன்கு அறிமுகமாவதற்கு நாம் ஒருமுகமாய் முயற்சி செய்வோமாக. பின்பு வித்தியாசமான தேசீய மற்றும் மத பின்னணிகளையுடைய உண்மை மனதுள்ள ஜனங்களுக்கு உதவிசெய்வதில் திறம்பட்டவிதமாக இதை உபயோகிப்பது நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் எல்லாவிதமான ஜனங்களுக்கும் நற்செய்தியை நாம் அறிவிக்கிறோம் என்ற திருப்தியை நமக்கு கொடுக்கும்.—மத். 28:19, 20; தீத்து 2:11.