செப்டம்பர் மாத ஊழியக் கூட்டங்கள்
செப்டம்பர் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 162 (89)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். சமீபத்திய பத்திரிகைகளிலுள்ள பேச்சுக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். இந்த வார இறுதியின்போது எல்லாரையும் வெளிஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “அக்கறையைத் தூண்டும் அறிமுகங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ல் உள்ள குறிப்புகளை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “மேலும் முன்னேறுவதற்கு நம்பிக்கையோடு செயற்படுதல்.” இடைச்சேர்க்கையிலுள்ள முதல் இரண்டு பாராக்களை ஒரு பேச்சாகக் கொடுங்கள். கட்டுரையில் மற்ற பகுதியை கேள்வி-பதில் மூலம் சிந்தியுங்கள். சபையாருக்கு பொருந்தக்கூடிய குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுங்கள். சுருக்கக் குறிப்புகளோடு முடித்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 155 (85), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133 (68)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. சங்கம் நன்கொடையைப் பெற்றதற்கு அனுப்பும் கடிதத்தை வாசித்துக் காட்டுங்கள். சபைக்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கும் கொடுக்கப்படும் நிதியுதவிக்காக சபையைப் பாராட்டுங்கள்.
20 நிமி: மறுசந்திப்பு செய்வதற்கு அக்கறையை வளர்த்துக்கொள்ளுதல். ஊழியக் கண்காணி கலந்துபேசுகிறார். ஜனங்களோடு பேசி, பிரசுரங்களை விட்டுவருவதை அநேகர் மகிழ்ச்சிதருவதாகக் காண்கின்றனர். (om பக். 87-8) நாம் பேசும் நபர்களுடைய மனதில் அக்கறையை வளர்க்கவைப்பதும் நம்முடைய உத்தரவாதமாக இருக்கிறது. முதல் சந்திப்பில் எந்த ஒரு பிரசுரமும் அளிக்கப்பட்டிராத நபரை மறுசந்திப்பு செய்யும்போது எப்படி ஒரு துண்டுப்பிரதியைக்கொண்டு அக்கறையைத் தூண்டி வளர்க்கலாம் என்பதைச் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். ஓரிரண்டு குறிப்புகளை மட்டும் முக்கியமாய் எடுத்துக்காட்டுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் பொருளடக்க அட்டவணையிலுள்ள தகவலையுங்கூட எப்படி உபயோகிக்கலாம் என்று சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். பைபிளில் அக்கறையை வளர்க்க பயன்படுத்தக்கூடிய, பிரசுரத்திலுள்ள சுருக்கமான மற்றும் நேரடியான குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுங்கள். தொடர்ந்து சந்திப்பதற்கு எப்படி ஏற்பாடு செய்யலாம் என்பதைக் காட்டுங்கள்.
15 நிமி: “மகா பாபிலோன்.” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், 49-53 பக்கங்களின்பேரில் கலந்தாலோசிப்பு. நடிப்பு: பிரஸ்தாபி பைபிள் மாணாக்கரோடு அவர் செய்திருக்கும் முன்னேற்றத்தைக் கலந்துபேசுகிறார். யெகோவாவுடைய பார்வைக்குப் பரிசுத்தமுள்ளவராக காணப்படுவதும், அவருடைய உதவிக்கும் ஆசீர்வாதத்துக்கும் தகுதியுள்ளவராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திக் காட்டுகிறார். (1 பேதுரு 1:15, 16) பாபிலோனை விட்டு வெளியே வந்து யெகோவாவுடைய பரிசுத்த அமைப்போடு கூட்டுறவுகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டுகிறார். நடத்துனர், அமைப்பினிடமாக மாணாக்கரை வழிநடத்த பிரசுரங்களை பயன்படுத்தும்படியும் மூப்பர்கள் கொடுக்கும் உதவியை அனுகூலப்படுத்திக்கொள்ளும்படியும் சகோதரரை உற்சாகப்படுத்தி முடித்துக்கொள்கிறார்.
பாட்டு 129 (66), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 113 (62)
15 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். “தெளிந்த புத்தியும் நீதியும் உள்ளவர்களாய் ஜீவிப்பது” என்ற கட்டுரையின் பேரில் கலந்தாலோசிப்பு. 1993-ன் ஊழிய ஆண்டின்போது நடக்கவிருக்கும் விசேஷ அசெம்பளி தினத்தின் நிகழ்ச்சிக்கு ஆஜராவதற்கு முன்கூட்டியே திட்டங்களைச் செய்யுமாறு சகோதரரை உற்சாகப்படுத்துங்கள். தெரியுமானால், அசெம்பளி நடக்கவிருக்கும் தேதியையும் இடத்தையும் அறிவியுங்கள். மேலும் வார-இறுதி வெளிஊழியத்தில் பங்குகொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மறுசந்திப்புகளைச் செய்வதன் சவால்.” கேள்வி-பதில்கள். பாரா 5-ஐயும் 6-ஐயும் சிந்தித்தப் பிற்பாடு, இரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள். (1) பைபிள் படிப்பை தொடங்க எப்படி ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்தலாம் என்று காட்டுங்கள். (2) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து, மறுசந்திப்பின்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்க அதை எப்படி பயன்படுத்தலாம் என்று காட்டுங்கள். செய்துபழகிப்பார்ப்பதன் நற்பயனை முக்கியப்படுத்திக் காட்டவும். அக்கறை காட்டும் எல்லாரையும் திரும்பவும் சென்று சந்திக்குமாறு உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: உவாட்ச்டவர், ஏப்ரல் 15, 1992-ன் பிரதியில் “உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்ற கட்டுரையின்பேரில் கலந்தாலோசிப்பு. ஆங்கிலத்தைத் தவிர மாதம் இருமுறை அச்சடிக்கப்படும் காவற்கோபுரத்தை வேறு மொழியில் பயன்படுத்தும் சபைகள் ஜூலை 15, 1992 பிரதியில், “உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்ற கட்டுரையின்பேரில் சிந்திக்கலாம். காவற்கோபுரம் மாதாந்தரமாக வரும் மொழியைப் பயன்படுத்தும் சபைகள் அதே தலைப்பின்கீழ் ஜூன் 1, 1992 பிரதியிலுள்ள அந்தக் கட்டுரையை பயன்படுத்தலாம். பத்திரிகைகளைப் படிப்பதற்கு ஒரு நல்ல அட்டவணையைக் கொண்டிருக்குமாறு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுங்கள்.
பாட்டு 130 (58), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 72 (39)
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “வீட்டுக்கு வீடு ஊழியத்தைப் பலன்தரும் முறையில் செய்தல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. அக்டோபரில் துணைப் பயனியர் செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள். துணைப் பயனியர் செய்பவர்கள் எப்போதுமே அதைத் தொடர்ந்து வரும் மாதங்களிலும் சேவையில் அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பதைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி: சிருஷ்டிப்பு புத்தகத்தை அக்டோபரில் அளிப்பாகக் கொடுங்கள். நடிப்போடுகூடிய பேச்சு. சிருஷ்டிப்பு புத்தகத்தை அளிக்கையில் அதில் எடுத்துக்காட்டக்கூடிய பேச்சுக் குறிப்புகளையும் விளக்கப்படங்களையும் பற்றிக் கலந்துபேசுங்கள். வேண்டுமானால், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் “சிருஷ்டிப்பு” என்ற தலைப்பின்கீழ் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தலாம். 16-வது 19-ம் அதிகாரங்களில் உள்ள பொருள்கள், “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” மேலும் “விரைவில் வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸ்” போன்ற பொருள்கள், வீட்டுக்காரருடைய கவனத்தை கவர்ந்திழுக்கக்கூடும். நீதிமொழிகள் 2:21, 22-ஐயும் பக்கம் 197-ல் உள்ள படத்தையும் பயன்படுத்தி, கடவுள் பூமியைச் சிருஷ்டித்ததன் முதல் காரணம் சீக்கிரத்தில் நிறைவேற்றமடையவிருக்கிறதென்று முக்கியப்படுத்திக் காட்டி அளிப்பை கொடுப்பதுபோன்று ஒரு தகுதிவாய்ந்த பிரஸ்தாபி நடித்துக் காட்டும்படி செய்யுங்கள்.
10 நிமி: “மறுசந்திப்புகளில் என்றும் வாழலாம் புத்தகத்தைப் பயன்படுத்துதல்.” முதல் இரண்டு பாராக்களிலுள்ள குறிப்புகளைச் சுருக்கமாக கலந்தாராயுங்கள். பின்னர், ஒரு பைபிள் படிப்பை தொடங்குவதற்கு நேரடியான அணுகுமுறையைப் பயன்படுத்தி மறுசந்திப்பு செய்யப்படுவதை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 126 (25), முடிவு ஜெபம்.
அக்டோபர் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30 (91)
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் முன்னேறிவருகிறீர்களா? மூப்பர் இதை கலந்தாலோசிக்கிறார். கடந்த ஊழிய ஆண்டின்போது சபையார் அடையவேண்டுமென்றிருந்த குறிப்பிட்ட இலக்குகளை அடைந்துவிட்டார்களா? அடையவில்லையென்றால், ஏன்? சாத்தியமான இலக்குகளைக் குறிப்பிடுங்கள். ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்ள முன்னேற்றம் அவசியமாயிருக்கிறது. (பிலிப். 3:16) சுருக்கமான ஒரு நடிப்பு. ஒரு குடும்பம். குடும்ப படிப்பின்போது, எந்த அம்சத்தில் தாங்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கத் தங்கள் சொந்த ஊழியத்தை விமர்சித்துப் பார்க்கின்றனர்.
10 நிமி: சபையின் தேவைகள் அல்லது மூப்பர், சபையின் வெளிஊழிய நடவடிக்கையைக் கலந்துபேசுகிறார்.
15 நிமி: உங்களுடைய பிள்ளைகள் கடவுளுடைய எண்ணங்களைத் தங்கள் இருதயங்களில் வைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லும்படி அனுப்புங்கள். மூப்பர் கொடுக்கும் பேச்சு. உலகம் தன்னுடைய மாதிரியில் நம்மைத் திணித்து உருப்படுத்தி வைக்கும்படியான மனச்சாய்வை கொண்டிருக்கிறது. இது நம்முடைய இளைஞர் விஷயத்தில் மிகவும் உண்மையாயிருக்கிறது. பெற்றோர் அவர்களுடைய தேவைகளைக் குறித்தும் பிரச்னைகளைக் குறித்தும் உணர்வுள்ளவர்களாயிருப்பது அவசியம். (நீதி. 20:5) பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் அன்போடுகூட கடவுளுடைய சட்டங்களையும் அவருடைய அன்பையும் அவர்களுடைய உள்ளத்தில் மீண்டும் மீண்டும் ஆழப்பதியச் செய்யுங்கள். நடிப்பு: பள்ளி என்ற ஆங்கில புரோஷுரை எப்படி பயன்படுத்தலாம் என்று குடும்பத்தார் கலந்துபேசுகின்றனர். ஒரு பிள்ளை முதல் முறையாகப் பள்ளிக்கு செல்கிறது. ஆனால் மற்ற இரு பிள்ளைகளும் ஒருசில வருடங்களாக பள்ளியில் படித்துவருகிறார்கள். ஒவ்வொரு பிள்ளையினுடைய சூழ்நிலைக்கும் பொருந்துமாறு ஒரு குறிப்பை தெரிந்துகொள்ளுங்கள். ஆசிரியர் பாகத்தை வகிக்கும் பெற்றோரிடம் பிள்ளைகள் தங்களுடைய சொந்த வார்த்தைகளில் தங்கள் மனதிலுள்ளவற்றை எடுத்துச்சொல்கிறார்கள். உட்பட்டிருக்கிற நியமங்களைப் பிள்ளைகள் புரிந்துகொண்டிருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இதைக் கையாளும் சகோதரர், குடும்ப பைபிள் படிப்பை உற்சாகப்படுத்துகிறார், பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு நெருக்கமான பந்தத்தைக் கொண்டிருப்பது அவசியமாயிருக்கிறது என்பதை அவர் வலியுறுத்திக் காட்டுகிறார்.
பாட்டு 109 (119), முடிவு ஜெபம்.