உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/93 பக். 2
  • ஜனவரி மாத ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி மாத ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • துணை தலைப்புகள்
  • ஜனவரி 4-ல் துவங்கும் வாரம்
  • ஜனவரி 11-ல் துவங்கும் வாரம்
  • ஜனவரி 18-ல் துவங்கும் வாரம்
  • ஜனவரி 25-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 1/93 பக். 2

ஜனவரி மாத ஊழியக் கூட்டங்கள்

ஜனவரி 4-ல் துவங்கும் வாரம்

பாட்டு 23 (119)

10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.

25 நிமி:“யெகோவாவின் சாட்சிகளுடைய 1993 ‘தெய்வீக போதனை’ மாவட்ட மாநாடு.” செயலர் இடைச்சேர்க்கையைக் கேள்வி பதில் மூலம் கலந்தாலோசிப்பார். மாநாட்டுக்கு ஆஜராக உடனடியாக திட்டம்செய்ய எல்லோரையும் அனலோடு உற்சாகப்படுத்துங்கள். மாநாட்டிலும் தங்கும் இடங்களிலும் நம்முடைய நடத்தை ஒரு நற்சாட்சியாக அமையும் என்பதை வலியுறுத்திக் காட்டுங்கள். நேர்மைத்தன்மை, கீழ்ப்படிதல், மற்றவர்கள்பேரில் அன்பான அக்கறை ஆகியவற்றின்பேரிலுள்ள பைபிள் நியமங்களைக் கட்டுரையிலிருந்து வலியுறுத்திக் காட்டுங்கள். மாநாடுகளுக்கு ஆஜராவதற்கு எடுக்கும் முயற்சிக்கும் சங்கத்தின் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருவதற்கும் அனைவரையும் பாராட்டுங்கள்.

10 நிமி:“தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.” தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணி கொடுக்கும் உற்சாகமான பேச்சு. பேச்சு எண் 2 எப்படி கொடுக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டுங்கள். பைபிள் சிறப்புக் குறிப்புகள் கொடுக்க நியமிக்கப்படுபவர்கள் பேச்சு எண் 2-ற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பைபிள் பகுதியிலிருந்து அநேக குறிப்புகளைச் சொல்லக்கூடாது என்பதை நினைவுபடுத்துங்கள்.

பாட்டு 139 (74), முடிவு ஜெபம்.

ஜனவரி 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 162 (89)

10 நிமி:சபை அறிவிப்புகள். ஜனவரி 18 அன்று விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகள் ஏதாகிலும் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிடுங்கள்.

20 நிமி:“சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் வழிநடத்தும் கடவுளுடைய வழியைப் பிரசங்கியுங்கள்.” கட்டுரையை கேள்வி-பதில் மூலம் சிந்திக்கவேண்டும். வெளி ஊழியத்தில் துண்டுப்பிரதிகளை உபயோகிக்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். பாரா 4 சிந்தித்தப் பிறகு, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை பயன்படுத்தி நன்கு தயாரிக்கப்பட்ட பிரஸ்தாபி எவ்வாறு முதல் சந்திப்பிலோ மறுசந்திப்பிலோ ஒரு பைபிள் படிப்பைத் துவங்குகிறார் என்பதை நடித்துக் காட்டுங்கள். பிரஸ்தாபி: “வணக்கம். வாழ்க்கையின் தரத்தைக் குறித்து நாங்கள் இன்று மக்களிடம் பேசிக்கொண்டு வருகிறோம். இன்று மக்களுடைய வாழ்க்கையில் நடைபெற்று வருகிற காரியங்களைப் பார்த்து நீங்கள் திருப்தியுடையவர்களாயிருக்கிறீர்களா?” வீட்டுக்காரர்: “நிச்சயமாக இல்லை.” பிரஸ்தாபி: “இந்த நிலைமை முன்னேற்றமடையும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” வீட்டுக்காரர்: “தெரியவில்லை.” பிரஸ்தாபி துண்டுப்பிரதியை அளித்தப் பின்னர் இவ்வாறு சொல்கிறார்: “நடைபெறும் காரியங்கள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடக்கிறது என்றும் சமீபத்தில் நல்ல ஓர் உலகம் வர இருக்கிறது என்றும் சிலர் நம்புகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” வீட்டுக்காரர்: “எனக்குத் தெரியாது. அது ஒருவேளை கூடும் என்று நான் நினைக்கிறேன்.” பின்னர் பிரஸ்தாபி துண்டுப்பிரதியைக் காட்டி யெகோவா கூடிய சீக்கிரத்தில் பூமியில் பரதீஸிய நிலைமையை ஸ்தாபிப்பார் என்று விளக்குகிறார். தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவு சமீபமாயிருக்கிறது என்பதைக் குறித்து அடுத்த முறை பைபிள் அத்தாட்சியைக் கொண்டு சிந்திப்பதற்கு பிரஸ்தாபி அவரோடு ஏற்பாடு செய்கிறார்.

15 நிமி:இரத்தம் ஏற்றும் பிரச்னைகளைத் தவிருங்கள்—அட்வான்ஸ் மெடிக்கல் டைரக்டிவ்-ஐ புதுப்பியுங்கள். இந்தக் கார்டுகளை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கக்கூடிய அக்டோபர் 15, 1991 தேதியிட்ட கடிதத்தை, இந்தப் பகுதியைக் கையாளும் மூப்பர் கவனமாக சிந்திக்கிறார். தயாரிக்கும்போது, ஜனவரி 1, 1990 தேதியிட்ட சங்கத்தின் கடிதத்தை முழுவதுமாக விமர்சியுங்கள். கார்டை வைத்திருக்கும் நபர் தங்கள் முன்னிலையில் கையொப்பமிடுவதை, சாட்சிகளாக கையொப்பமிடும் நபர்கள் பார்க்கவேண்டும். அன்றைய கூட்டத்தில் புதிய கார்டுகளை வாங்கிக்கொண்டு ராஜ்ய மன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அனைவரும் அவற்றைப் பூர்த்திசெய்யுமாறு உற்சாகப்படுத்துங்கள். முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் தங்களுடைய அட்வான்ஸ் மெடிக்கல் டைரக்டிவ்/ரிலீஸ் கார்டு இல்லாமல் வீட்டிற்குச் செல்லக்கூடாது. சாட்சி பெற்றோரையுடைய முழுக்காட்டப்படாத சிறு பிள்ளைகள் எப்போதும் ஓர் அடையாள அட்டையைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும். சமீபத்தில் ஒரு சபை கூட்டத்தில் செய்யப்பட்ட பரிசோதிப்பு 5 பிரஸ்தாபிகளில் 1 நபர் தன்னோடு கார்டை வைத்தில்லை என்பதையும் எந்தப் பிள்ளையும் தன்னோடு அடையாள அட்டையை வைத்தில்லை என்பதையும் எடுத்துக்காட்டியது. முடிவாக, நீதிமொழிகள் 22:3 வாசித்து அதைப் பொருத்திக் காட்டுங்கள்.

பாட்டு 151 (25), முடிவு ஜெபம்.

ஜனவரி 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 130 (58)

10 நிமி:சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். கணக்கு அறிக்கையை வாசியுங்கள். சபை நன்கொடை அனுப்பியதற்கு சங்கம் அனுப்பிய போற்றுதல் கடிதத்தையும் வாசித்துக் காட்டுங்கள். உள்ளூர் சபைக்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கும் சபை உண்மையோடு கொடுத்துவரும் நிதிஉதவிக்காக பாராட்டுதல் தெரிவியுங்கள்.

20 நிமி:“ஞானமாய் முக்கியமான சாதனங்களைப் பயன்படுத்துவது.” நடத்துபவர் இதற்குச் சுருக்கமான அறிமுகத்தை அளித்தப் பின்பு பாராக்கள் 2 முதல் 5 வரை குறிப்பிடப்பட்டிருக்கிற பொருளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நடிப்புகள் இருக்கும். முதல் நடிப்பின் முடிவில் வீட்டுக்காரர் இரண்டு பத்திரிகைகளை எடுத்துக்கொள்கிறார். கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? என்ற கேள்விக்கு பிரஸ்தாபி திரும்ப வந்து விடை கொடுக்க ஒத்துக்கொள்கிறார். இரண்டாம் நடிப்பின் முடிவில், பொருத்தமான ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி ஒரு வீட்டு பைபிள் படிப்பு துவங்கப்படுகிறது. வெளி ஊழியத்தில் இந்த வார இறுதியில் வேலை செய்கையில் ஒரு வேதப்பூர்வ கலந்தாலோசிப்பில் வீட்டுக்காரரை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி:கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தத்துக்கு விலகியிருக்கிறார்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 70-2-ல் “இரத்தம்” என்ற தலைப்பின் கீழுள்ள சொற்பொருள் விளக்கத்தையும் மூன்று உபதலைப்புகளையும் அடிப்படையாகக்கொண்டு ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு.

பாட்டு 177 (163), முடிவு ஜெபம்.

ஜனவரி 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 128 (10)

10 நிமி:சபை அறிவிப்புகள். “கேள்விப் பெட்டி.” சகோதரர்கள் தங்களிடம் உள்ள கேள்விகளுக்குச் சொந்த ஆராய்ச்சியை செய்வதற்கு உற்சாகப்படுத்துங்கள். ஆனால் வேதப்பூர்வ விடைகளைப் பெறுவதற்கு எப்போது வேண்டுமானாலும் அவர்கள் சபை மூப்பர்களை அணுகலாம் என்பதையும் தேவைப்பட்டால், சங்கத்தையும் அணுகலாம் என்பதைக் குறிப்பிடுங்கள்.

15 நிமி:“ஒரு பயனியராக யெகோவாவை நீங்கள் சேவிக்க முடியுமா?” சபையாரோடு கலந்தாலோசிப்பு. ஓர் ஒழுங்கான பயனியராயிருக்கும் ஓர் இளம் நபரையோ ஓர் இளம் நபராயிருந்தபோது பயனியர் ஊழியம் செய்த பிரஸ்தாபியையோ பேட்டிக் காணுங்கள். பெற்றோரும் மற்ற நபர்களும் எப்படி அவர்கள் பயனியர் என்னும் இலக்கை அடைவதற்கு உற்சாகப்படுத்தலாம் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுங்கள். முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்குரிய சாத்தியக்கூறுகளை உள்ளார்ந்த அக்கறையோடு யோசித்துப் பார்க்கும்படி எல்லோரையும் அனலோடு கேட்டுக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு இப்போதே திட்டமிடுங்கள்.

20 நிமி:“பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்வதன் மூலம் அக்கறையைக் கட்டியெழுப்புங்கள்.” சுருக்கமான பேச்சு. பின்பு, இதைத் தொடர்ந்து பாரா 3-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் உரையாடலின் நடிப்பு. நேரம் இருந்தால், பிரசங்கத்தில் இருக்கிற முக்கிய காரியங்களைக் குறித்து, அறிமுகத்தையோ வேதப்பூர்வ வசனத்தினிடம் படிப்படியாக பிரசங்கத்தை மாற்றியமைப்பதையோ குறித்து மறுபடியும் நடித்துக்காட்டுங்கள்.

பாட்டு 160 (88), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்