தேவராஜ்ய செய்திகள்
சிலி: ஏப்ரலில் அறிக்கைசெய்த 42,778 பிரஸ்தாபிகளில், 8,680 பேர் பயனியர்களாக இருந்தார்கள். ஒரு புதிய உச்சநிலையாக ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை 2,820-ஐ சென்றெட்டியது. ஏப்ரலில் அறிக்கைசெய்யப்பட்ட மொத்த மணிநேரங்கள் 10,09,001.
லெசோதோ: ஏப்ரலில் அறிக்கைசெய்த பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கை 1,895, இது கடந்த வருடத்தின் சராசரியைவிட 19-சதவிகித அதிகரிப்பாகும்.
போர்த்துகல்: ஏப்ரலில் 41,472 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது. மொத்த மணிநேரங்கள், மறு சந்திப்புகள், வீட்டு பைபிள் படிப்புகள் ஆகியவற்றிலுங்கூட புதிய உச்சநிலைகள் இருந்தன.
வெனிசவேலா: ஏப்ரலின்போது 62,074 பிரஸ்தாபிகளின் கடின உழைப்பானது, மணிநேரங்கள், மறு சந்திப்புகள், மற்றும் வீட்டு பைபிள் படிப்புகளிலுங்கூட புதிய உச்சநிலைகளில் விளைவடைந்தது.