செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
கவனியுங்கள்: மாநாட்டு காலப்பகுதியின்போது உள்ள ஒவ்வொரு வாரத்திற்கும் ஊழியக் கூட்டத்தை நம் ராஜ்ய ஊழியம் அட்டவணையிடும். சபைகள், “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதை அனுமதிப்பதற்காகவும் அதைத் தொடர்ந்து வருகிற வாரத்தின் ஊழியக் கூட்டத்தில் அந்நிகழ்ச்சிநிரல் சிறப்புக்குறிப்புகளை 30-நிமிடம் மறுபார்வைசெய்வதற்காகவும் தேவைப்படுகிற சரிப்படுத்தல்களைச் செய்யலாம்; மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் ஒவ்வொரு நாள் மறுபார்வையை, முக்கியமான குறிப்புகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடியவர்களாய் இருக்கும் தகுதியுள்ள இரண்டு அல்லது மூன்று சகோதரர்களுக்கு முன்கூட்டியே நியமிக்கவேண்டும். நன்கு-தயாரிக்கப்பட்ட இந்த மறுபார்வையானது, தனிப்பட்ட பொருத்தத்துக்கான முக்கிய குறிப்புகளை நினைவுகூருவதற்கும் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கும் சபையாருக்கு உதவிசெய்யும். சபையாரிடமிருந்துவரும் குறிப்புகளும் சம்பந்தப்பட்ட அனுபவங்களும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருக்கவேண்டும்.
செப்டம்பர் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 164 (73)
5 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
15 நிமி:உங்களுடைய பிள்ளைகளைப் பள்ளிக்காகப் பலப்படுத்துங்கள். பேட்டிகள் மற்றும் நடிப்புடன் பேச்சு. கிறிஸ்தவ இளைஞர், சபையிலுள்ள பெரும்பாலான பிரஸ்தாபிகள் கற்பனைசெய்துங்கூட பார்க்கமுடியாத பிரச்னைகளை இன்றைக்கு எதிர்ப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் உத்தமத்தின் சோதனைகளைச் சமாளிப்பதற்கு அவர்களைப் பலப்படுத்துவதற்காக, இந்தப் பிரச்னைகளைக்குறித்து விசேஷமாக அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும். வித்தியாசமான வயதுகளிலுள்ள மூன்று இளைஞரைப் பேட்டிகாணுங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளியில் கையாளவேண்டிய சில குறிப்பிட்ட அழுத்தங்கள் யாவை? யெகோவாவோடு தங்களுடைய நல்ல உறவைக் காத்துக்கொள்வதற்கு எது அவர்களுக்கு உதவுகிறது? ஒரு குடும்பத்தினர் ஒன்றாகச்சேர்ந்து பள்ளி சிற்றேட்டில் பக்கம் 11-ல் பத்திகள் 2 மற்றும் 3-ஐச் சிந்திப்பதை நடிப்பதற்காக ஏற்பாடுசெய்யுங்கள். பைபிளின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களை கடைப்பிடிப்பதற்காக கேலிசெய்யப்படுவதாகவும் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களாய் உணருவதாகவும் பிள்ளைகள் சொல்லுகிறார்கள். குடும்பத் தலைவர் அவர்களுடைய முன்மாதிரியினால் தாங்கள் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதன்மூலமும் அவர்களுடைய நடத்தை யெகோவாவை மிகவும் பிரியப்படுத்துகிறது என்பதை நினைப்பூட்டுவதன் மூலமும் உற்சாகப்படுத்துகிறார். (நீதி. 27:11) இந்தப் பகுதியைக் கையாளுகிற சகோதரர், சபையிலுள்ள இளைஞருடைய நல்ல செயல்களுக்காகப் போற்றி, இந்தப் பள்ளி ஆண்டு முழுவதும் ஆவிக்குரிய விதமாகப் பலப்படுத்தப்பட்டவர்களாய் இருப்பதற்காக தங்களுடைய பெற்றோருடன் பேச்சுத் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தி முடிக்கிறார்.
10 நிமி:“ஒரு பெரிய பொக்கிஷத்தைக் கண்டுணர மற்றவர்களுக்கு உதவிசெய்தல்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.
15 நிமி:“1993 ‘தெய்வீக போதனை’ மாவட்ட மாநாட்டிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்”—பகுதி 1. பத்திகள் 1-16 சபையாருடன் கலந்தாலோசிப்பு. பிரஸ்தாபிகள், தங்களோடு மாநாட்டில் கலந்துகொள்ளவருகிற பைபிள் மாணாக்கருடன் பொருத்தமான குறிப்புகளைக் கலந்தாலோசிக்கவேண்டும்.
பாட்டு 108 (95), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 112 (59)
5 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை ஒப்புகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சபையின் தேவைகளுக்காகவும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்காகவும் அளித்த தயாள ஆதரவுக்காகச் சபையாரைப் பாராட்டுங்கள்.
10 நிமி:“பத்திரிகைகளைப் பயன்படுத்துவதன்மூலம் மற்றவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.” நடிப்புகளுடன் பேச்சு. தற்போதைய மற்றும் பழைய பத்திரிகைகளின் வெளியீடுகள் இரண்டையும் முழுமையாகப் பயன்படுத்துவதன் மதிப்பைச் சிறப்பித்துக்காட்டுங்கள். இரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள், ஒன்று தற்போதைய பத்திரிகையை முக்கியப்படுத்திக்காட்டுகிறது, ஒன்று வீட்டுக்காரரின் குறிப்பிட்ட தேவையைப் பூர்த்திசெய்வதற்குப் பழைய வெளியீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டுகிறது.
15 நிமி:“இந்த ஊழிய ஆண்டின்போது நாம் எதை நிறைவேற்றுவோம்?” சபையார் கலந்தாலோசிப்புடன் பேச்சு. நடத்தும் கண்காணியால் கையாளப்படவேண்டும். சபையின் கடந்த வருட சேவையை மறுபார்வைசெய்து, 1994 ஊழிய ஆண்டின்போது அதிகரிக்கப்படும் நடவடிக்கைக்காகத் திட்டங்கள் செய்வதற்கு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“1993 ‘தெய்வீக போதனை’ மாவட்ட மாநாட்டிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்”—பகுதி 2. பத்திகள் 17-19-ஐச் சபையாரோடு கலந்தாலோசித்து, “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்”-ஐக் கவனமாக மறுபார்வைசெய்யுங்கள். ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 15, 1989, பக்கங்கள் 10-20-லுள்ள தகவலின் அடிப்படையில் பொருத்தமான நினைப்பூட்டுதல்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள், அல்லது மாநாட்டிற்கு ஆஜராவதற்கு முன்பாக இந்தக் கட்டுரைகளிலுள்ள குறிப்புகளை மறுபார்வைசெய்வதற்குக் குடும்பத் தொகுதிகளை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 17 (12), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 100 (28)
10 நிமி:சபை அறிவிப்புகள். இந்த வார வெளி ஊழியத்தில் முக்கியப்படுத்திக் காட்டக்கூடிய தற்போதைய பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளைச் சிறப்பித்துக்காட்டுங்கள்.
20 நிமி:“செம்மறியாடுபோன்ற மக்கள் உறுதியான அஸ்திபாரத்தின்மீது கட்டுவதற்கு உதவுங்கள்.” சபையாருடன் கலந்தாலோசியுங்கள். ஒவ்வொரு மறு சந்திப்புக்காகவும் தயார்செய்யவேண்டியதன் அவசியத்தைச் சிறப்பித்துக்காட்டுங்கள். முன்பு என்றும் வாழலாம் புத்தகத்தை எடுத்துக்கொண்ட நபரை, பத்தி 3 அல்லது 5-லுள்ள தகவலைப் பயன்படுத்தி, தகுதிவாய்ந்த பிரஸ்தாபி மறு சந்திப்புச் செய்வதை நடித்துக்காட்டுவதற்கு ஏற்பாடுசெய்யுங்கள்.
15 நிமி:“வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்.” கேள்விகளும் பதில்களும். பத்தி 4-க்குப் பிறகு, ஆலோசனை கொடுக்கப்பட்டபடி, பைபிளை மட்டுமே பயன்படுத்துகிற ஆனால் என்றும் வாழலாம் அல்லது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் பகுதிகளை ஆதாரமாகக்கொண்ட மறு சந்திப்பு நடிப்பை உற்சாகமாக அறிமுகப்படுத்துங்கள்.
பாட்டு 84 (30), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 109 (18)
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள்.
20 நிமி:மரித்திருக்கிற நம்முடைய அன்பானவர்கள் எங்கே இருக்கிறார்கள்? குடும்ப கலந்தாலோசிப்பு. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 98-100-லுள்ள தெரிந்தெடுக்கப்பட்ட விஷயத்தைப் பயன்படுத்தி, நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவரை மரணத்தில் இழந்ததைக் குடும்பத் தலைவர் சிந்திக்கிறார். பைபிளின் நோக்குநிலையைப் புரிந்துகொள்வதற்குத் தன்னுடைய பிள்ளைகளுக்கு உதவிசெய்வதன்பேரில் அவர் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார். மரணம் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதையும் தங்களுடைய வயதுக்கு ஏற்றவாறு தாங்களே தெளிவாக சொல்லக்கூடியவர்களாய் இருக்கிறார்களா என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு அவர் கேள்விகள் கேட்கிறார். அதோடு, மற்றவர்களை ஆறுதல்செய்வதற்கு அவர்கள் எவ்வாறு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்தலாம் என்பதையும் அவர் காட்டுகிறார்.
15 நிமி:அக்டோபரில் பத்திரிகைகளை அளியுங்கள். மூன்று நடிப்புகளுக்காக ஏற்பாடுசெய்யுங்கள். ஒன்று தற்போதைய காவற்கோபுரத்தை முக்கியப்படுத்திக் காட்டுகிறது, ஒன்று தற்போதைய விழித்தெழு!-வை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. ஒன்றில் வீட்டுக்காரர் அதிக வேலையாக இருப்பதால் துண்டுப்பிரதியை ஏற்றுக்கொள்கிறார். ஒவ்வொரு நடிப்பிற்குப் பிறகும் பிரசங்கம் ஏன் பலன்தரத்தக்கதாய் இருந்தது என்பதைச் சபையாரோடு கலந்தாராயுங்கள். தகுந்த அக்கறையை வெளிப்படுத்திக் காட்டியிருந்தால், அந்தப் பத்திரிகைகளுக்கு சந்தாக்களையோ கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் (Mankind’s Search for God) புத்தகத்தையோ அளிக்கலாம்.
பாட்டு 21 (1), முடிவு ஜெபம்.