மார்ச் ஊழியக் கூட்டங்கள்
மார்ச் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 200 (108)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
15 நிமி:“உங்களுடைய நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிப்பதில் தடுமாற்றமில்லாமல் உறுதியாயிருங்கள்.” காவற்கோபுர படிப்பு நடத்துனரால் கையாளப்படும் கேள்வி பதில் சிந்திப்பு. கூட்டங்களில் குறிப்பு சொல்வதில் பயத்தை மேற்கொண்டிருக்கிறவர்களிடமிருந்து குறிப்புகளை வரவழையுங்கள். முன்கூட்டியே தயாரிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்திக்கூறுங்கள். ஒவ்வொரு வாரமும் காவற்கோபுர சபை படிப்பில் முழு பங்குவகிப்பதற்காக தயாரிப்புசெய்யும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“வீட்டுக்காரருடைய தேவைகளுக்கேற்ற பிரசுரத்தை அளியுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசித்தல். பாராக்கள் 2 மற்றும் 3-ல் உள்ள பிரசங்கங்களை நன்கு தயார்செய்யப்பட்ட பிரஸ்தாபிகள் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிற்குப்பின், பிரசங்கத்திலிருந்து சபையார் என்ன கற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதன்பேரில் அவர்கள் குறிப்பு சொல்லும்படி செய்யுங்கள். இந்த மாதத்தில், இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை அளிப்பதில் பங்குகொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 225 (18), முடிவு ஜெபம்.
மார்ச் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 205 (118)
10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். இந்த வார வெளி ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய தற்போதைய பத்திரிகைகளில் உள்ள திட்டவட்டமான குறிப்புகளுக்கு கவனத்தைத் திருப்புங்கள். பிரஸ்தாபிகள் தங்களுடைய பைபிள் படிப்புகள், அக்கறையுள்ள ஆட்கள், அறிமுகமானவர்கள் ஆகிய அனைவரையும் மீண்டும் சந்திக்கும்படியும் அடுத்ததாக அவர்களை நினைவு ஆசரிப்புக்கு அழைக்கும்படியும் நினைப்பூட்டுங்கள்.
15 நிமி:“யெகோவாவுக்கு உங்களுடைய துதியை நீங்கள் ஏப்ரலில் அதிகரிக்க முடியுமா?” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. கடந்த காலத்தில் துணைப் பயனியர் சேவை செய்திருக்கிறவர்களிடமிருந்து குறிப்புகளை வரவழையுங்கள். இந்தச் சிலாக்கியத்தை அனுகூலப்படுத்திக்கொள்வதற்கு தங்களுடைய அலுவல்களை எவ்வாறு அவர்கள் சரிப்படுத்திக்கொண்டார்கள் என்பதை விளக்கும்படிச் செய்யுங்கள். ஏப்ரலில் துணைப் பயனியர் சேவைசெய்யத் திட்டமிடுகிறவர்கள் முடிந்தவரை தங்களுடைய விண்ணப்பங்களை விரைவிலேயே சமர்ப்பிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“நினைவு ஆசரிப்பில் வரவேற்கப்படுகிறவர்களாய் அவர்களை உணரச்செய்யுங்கள்.” கேள்வி பதில் சிந்திப்பு. பாரா 3-க்குப் பிறகு, உதவி ஊழியர் புதிய நபரை நினைவு ஆசரிப்புக்கு வரவேற்பது போன்ற சுருக்கமான நடிப்பைக் கொண்டிருங்கள்.
பாட்டு 150 (83), முடிவு ஜெபம்.
மார்ச் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 143 (76)
10 நிமி:சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கையையும் நன்கொடை ஒப்புகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். “ஏற்றவேளையில் உணவு” என்று தலைப்பிடப்பட்ட பெட்டியைக் கலந்தாலோசியுங்கள். ஏப்ரல் 10-ல் கொடுக்கப்படவிருக்கிற விசேஷித்தப் பேச்சுக்கு அக்கறைகாட்டக்கூடியவர்களை அழைக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். நினைவு ஆசரிப்புக்கான ஏற்பாடுகளை மறுபார்வைசெய்யுங்கள்.
20 நிமி:“யெகோவாவின் சேவையில் சந்தோஷத்தைக் கண்டடைதல்.” உட்சேர்க்கையிலுள்ள 1-11 வரையிலான பாராக்களை சபையாரோடு கலந்தாலோசித்தல். ஏப்ரலில் துணைப் பயனியர் சேவை செய்வதற்கு உள்ளூர் பிரஸ்தாபிகள் தங்களுடைய அட்டவணைகளை சரிசெய்துகொள்ளக்கூடிய நடைமுறையான வழிமுறைகளைக் காட்டுங்கள். இந்த நடவடிக்கையில் கூடுமானவரை அநேகர் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“எளிமையான, பலன்தரும் மறுசந்திப்புகள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். மறுசந்திப்பில் எவ்வாறு சம்பாஷணையை ஆரம்பிப்பது என்பதைக் காட்டுகிற நடிப்பு ஒன்றை கொண்டிருங்கள். ஒரு நல்ல, விவரங்களடங்கிய வீட்டுக்கு வீடு பதிவைக் வைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தைப்பற்றி சபையாருக்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 87 (47), முடிவு ஜெபம்.
மார்ச் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 112 (59)
10 நிமி:சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாத அளிப்பைக்கொண்டு உள்ளூர் பிராந்தியத்தில் சாட்சிகொடுப்பதற்குப் பொருத்தமான வழிமுறைகளைக் கலந்தாலோசித்து நடித்துக்காட்டுங்கள். பிரஸ்தாபிகள் சிலர் எவ்வாறு சந்தாக்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிற அனுபவங்களைச் சொல்லுங்கள்.
15 நிமி:“யெகோவாவின் சேவையில் சந்தோஷத்தைக் கண்டடைதல்.” உட்சேர்க்கையிலுள்ள 12-20 வரையிலான பாராக்களை சபையாரோடு கலந்தாலோசித்தல். மக்களை சத்தியத்திற்கு வழிநடத்த பைபிள் படிப்புகள் நடத்தவேண்டியதன் அவசியத்தைக் காண்பித்து, ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஏப்ரலில் ஒரு படிப்பையாவது பெற முயற்சிசெய்யும்படி ஆலோசனை கூறுங்கள். ஏப்ரல் 16-ல் விசேஷித்த பத்திரிகை தினத்திற்காக உற்சாகத்தை உண்டுபண்ணுங்கள். அந்தத் தினத்திற்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவிப்புசெய்து, அனைவரும் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“தெய்வீக போதனை சக்திவாய்ந்த செல்வாக்குச் செலுத்துகிறது.” கட்டுரையை கேள்வி பதில்மூலம் கலந்தாலோசித்தல். நேரம் அனுமதிக்கிறபடி பாராக்களையும் இடக்குறிப்பு கொடுக்கப்பட்ட வசனங்களையும் வாசியுங்கள். மாநாட்டுக்கு ஆஜராகி, மாநாட்டு வெளியீடுகளைப் பயன்படுத்துவதிலிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கான தனிப்பட்ட போற்றுதலைத் தெரிவிக்கிற சுருக்கமான குறிப்புகள் சொல்லும்படி அனுமதியுங்கள்.
பாட்டு 15 (119), முடிவு ஜெபம்.